அந்திரேயா பேதுருவிடம், மேசியாவை கண்டோம் என்றான். மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தம்.
அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான், மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம். (யோவான் 1:41)
யோவான் 1:40-42; யோவான் 4:25; தானியேல் 9:25,26; லூக்கா 4:18-21; அப்போஸ்தலர் 4:27,28; அப்போஸ்தலர் 10:38; எபிரெயர் 1:8,9; சங்கீதம் 2:2; சங்கீதம் 45:7; சங்கீதம் 89:20; ஏசாயா 11:1,2; ஏசாயா 61:1-3
மேசியா என்பது எபிரேய பட்ட பெயர்.
கிறிஸ்து என்பது கிரேக்க பட்ட பெயர்.
இதற்கு அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று பொருள்.
கிறிஸ்துவை கண்ட அந்திரேயா தன் சகோதரனுக்கு கிறிஸ்துவை காண்பிக்கிறான்.
நியாய பிரமாணமும், தீர்க்கதரிசனங்களும் கூறுகின்ற மேசியாவை நாங்கள் கண்டோம்.
நீயும் வா…. நாங்கள் அவரை காண்பிக்கின்றோம்.
பேதுரு உடனே புறப்பட்டு சென்று மேசியாவை கண்டான்.
மேசியா பேதுருவை கண்டார்.
அவன் நிலைமையை கண்டார்.
அவன் தன்மைகளை மாற்ற பெயர் மாற்றம் அறிவித்தார்.
அவனை கொண்டு தம் பணிகளை செய்வதை கண்டார்.
மேசியா – கிறிஸ்து இதன் சுருங்கிய வரலாற்று விளக்கம்.
பழைய ஏற்பாட்டில் இரண்டு விதமான மேசியாத்துவ தீர்க்கதரிசனங்கள் உண்டு.
1. அரசியல் மேசியா – Politicized Messiah…. மேசியா இஸ்ராயேலிடையில் இராஜாவாக வந்து இஸ்ராயேலை கொண்டு இஸ்ராயேலில் இருந்தும் கொண்டு முழு உலகையும் அரசாளுவது.
2. பாடுபடும் மேசியா…. ஆவிக்குரிய மேசியா… Spiritualized Messiah…. மேசியா பாடுபடும் தாசனாக வந்து சிலுவையில் அறையுண்டு, மரித்து, உயிர்த்து உலகின் பாவ பிடியிலுள்ள மனுகுலத்தை மீட்டு ஆவிக்குரிய உலகில் சாத்தானின் ஆவி உலகில் அரசாளுவது..
இது குறித்த இரு விளக்கங்கள்.
– யூதர்கள் இரண்டாம் தீர்க்கதரிசனம் குறித்து தெளிவில்லாது இருந்தனர். எனவே முதலாம் தீர்க்கதரிசனத்தில் அதிக நாட்டமுடையவர்களாக மேசியாவை இராஜாவாக வரும்படி எதிர்பார்த்து கொண்டிருந்தனர்…..
– இந்த இரு தீர்க்க தரிசனங்களிலும் எது முந்தியது என்பதை குறித்து யூதர்கள் தெளிவற்று இருந்ததினால் தான் இயேசுவை மேசியாவாக யூதர்கள் ஏற்கவில்லை.
இயேசுவே மேசியா…
முதலாம் வருகையில் பாடுபடும் தாசனாக வந்து உலகை மீட்டார்.
இரகசிய வருகையில் மேகமீதில் வந்து தமது சபையை எடுத்து கொள்வார்.
இரண்டாம் வருகையில் இராஜாவாக வந்து யூதர்களை கொண்டு பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம் நிறைவேறும்படி 1000 வருடங்கள் முழு உலகையும் இஸ்ராயேலை கொண்டு அரசாளுவார்…
இயேசு கிறிஸ்துவே வரலாற்று மேசியா…
அவரே வரலாற்றை துவங்கினவர்…
அவர் தன் வரலாற்றில் ஆளுகை செய்யும்படி அதை இயக்குகிறவர்
அவரே வரலாற்றை முடித்து வைக்கிறவர்…
இவ்வுலக வரலாற்றை முடித்துவைக்க ஒரு அரசாங்கமும் இவ்வுலகில் இல்லை.
இனியும் தோன்ற போவதும் இல்லை…