சபை

சபை(church) என்றால் அர்த்தம் என்ன?

ஒன்றான மெய் சபையைப் பற்றிய சத்தியங்கள்:                                

உங்களுடைய சபை எங்கே இருக்கிறது என்று கேட்டால் அநேக கிறிஸ்தவர்கள் உடனே இந்த ஊரிலே இந்த தெருவிலே இந்த இடத்திலே எங்கள் சபைஇருக்கிறது என்று சொல்லுவார்கள்.

அநேகரை பொறுத்த வரை சபை என்றால் கட்டப்பட்ட கட்டிடம். அதாவது கட்டிடத்தை தான் அநேகர் சபை என்று அழைக்கிறார்கள்.

  • நம்முடைய வேதாகமம் கட்டிடத்தையோ அல்லது கூடக்கூடிய இடத்தையோ சபை என்று அழைக்கவில்லை.

சபை என்ற வார்த்தை கிரேக்க வேதாகமத்திலே எக்ளேசியா என்று அழைக்கப்பட்டு இருக்கிறது.

Act 2:47 (KJV) Praising God, and having favour with all the people.  And the Lord added to the church daily such as should besaved.

Act 2:47 (KJV+) Praising134 God,2316 and 2532  having 2192 favor 5485  with 4314 all 3650 the 3588  people.2992 And 1161 the 3588  Lord 2962  added 4369  to the 3588 church 1577 daily 2596, 2250  such as should be saved. 4982

Act 2:47 (TR) ainountev ton qeon kai exontev xarin prov olon ton laon o de kuriov prosetiqei touv swzomenouv kaq hmeran th ekklhsia.

Act 2:47  தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.

எக்ளேசியா என்ற வார்த்தைக்கான கிரேக்க எண் 1577

G1577

ἐκκλησία

ekklēsia

ek-klay-see’-ah

From a compound of G1537 and a derivative of G2564; a calling out

  • எக்ளேசியா தான்ஆங்கிலத்தில் சர்ச்(church) என்றும் தமிழில் சபை என்றும் மொழிப்பெயர்க்கப்பட்டு இருக்கிறது.
  • எக்ளேசியா(சபை) என்றால் ஒன்றிலிருந்து வெளியே அழைக்கப்பட்டவர்கள்அல்லது கூப்பிடப்பட்டவர்கள்என்று பொருள்.
  • அதாவது உலகத்திலிருந்து  வெளியே (பரிசுத்தத்திற்கு) அழைக்கப்பட்டவர்களாய் இருக்கிறார்கள்.

இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்தவராக இருந்தாலும் இந்த உலகத்திற்கு உரியவர் இல்லை என்று சொன்னார்.

Joh 8:23  நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல.

John17:16 நான் உலகத்தானல்லாததுபோல,

  • இயேசு கிறிஸ்து இந்த உலகத்திலிருந்து பிதாவின் சித்தத்திற்காக தன்னை பிரித்தெடுத்து கொண்டவராக இருந்தார்.

இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களும் இந்த உலகத்திற்குரியவர்கள் இல்லை ஏனென்றால் உலகத்திலிருந்து அவர்களை கிறிஸ்து பிரித்தெடுத்தார்.

John 15:19  நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.

John 17:14 நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாதது போல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.

John 17:16 நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.

  • சபைஎன்று சொன்னால் உலகத்திலிருந்து தங்களை யார் பிரித்தெடுத்து வெளியே யார் அழைக்கப்பட்டு இருக்கிறார்களோ அவர்கள் தான் சபையாக இருக்கிறார்கள்.
  • பிரித்தெடுக்கப்பட்ட ஆத்துமாக்கள் தான் சபையாக இருக்கிறார்கள்.

நாம்ஞானஸ்நானம் பெறுவதற்கு மாறுபாடுள்ள சந்ததியை விட்டு வெளியே வர வேண்டியது அவசியமாய் இருக்கிறது.

Act 2:40 இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக் கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.

  • உலகத்திலிருந்து நாம் வெளியே வரவில்லையென்றால் நாம் இரட்சிக்கப்படமுடியாது.
  • நாம் தேவனால் இரட்சிக்கப்பட வேண்டும் என்றால் உலகத்திலிருந்து பிரிந்து வெளியே வரவேண்டும்.                                                 

உலகத்திலிருந்து பிரிந்துவர வேண்டும் என்பது தேவனுடைய கட்டளையாக இருக்கிறது, அப்படி வராதபட்சத்தில் அவர் நம்மை ஏற்றுக் கொள்ளுவதில்லை.

2Co 6:17 ஆனபடியால்,நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய்,  அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

  • மனந்திரும்புதல் என்பது இங்கே உலகத்திலிருந்து வெளியே வருவதாகும் அப்படி நாம் வராதபட்சத்தில் நாம் பாவ மன்னிப்புக்காக ஞானஸ்நானம் பண்ணப்படும் போது அதினால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை.

பின்பு பாவ மன்னிப்புக்காக ஞானஸ்நானம் பெறும் போது என்ன நடக்கிறது?

Act 2:38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்.

பாவ மன்னிப்புக்கொன்று ஞானஸ்நானம் பண்ணப்பட்ட மூவாயிரம் பேர் எதிலே சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்?

Act 2:41 அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.

அவர்கள் கர்த்தரால் சபையிலே சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்

Act 2:47   இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.

  • நாம் பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெறவில்லையென்றால் நாம் இரட்சிக்கப்பட முடியாது அப்படி இரட்சிக்கப்படாதவர்கள் கர்த்தரால் சபையிலே சேர்க்கப்படுவதும் இல்லை.

சபை (ஆத்துமாக்கள்) தான் வீட்டிலே கூடி வந்த(தார்கள்)து

Rom 16:5 அவர்களுடைய வீட்டிலே கூடிவருகிற சபையையும் வாழ்த்துங்கள்.

Phm 1:2 . உம்முடைய வீட்டிலே கூடிவருகிற சபைக்கும் எழுதுகிறதாவது:

  • பாவமன்னிப்புக்கென்று இரட்சிக்கப்படுகிற ஆத்துமாக்கள் தான் சபையிலே சேர்க்கப்பட்டார்கள் அவர்கள் தான் சபையாக கூடிவந்தார்கள்.
  • சபை என்பது கட்டிடம் அல்ல அது தேவனுடைய சித்தத்தின் அழைக்கப்பட்டவர்களின் கூட்டம் (ஆத்துமாக்கள்)  ஆகும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME