வேலைகாரருக்கு தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்கு தெரியலை.
அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து. (யோவான் 2:9)
யோவான் 4:46; யோவான் 7:17; யோவான் 15:14-17; யாத்திராகமம் 7:20; நீதிமொழிகள் 3:10-22.
வேலைக்காரர்கள் – டியாக்கோனோஸ்.
புதிய ஏற்பாட்டில் இச்சொல் 4 அர்த்தங்களாக கொடுக்கபட்டுள்ளது.
1. பணிவிடைக்காரர். மத்தேயு 20:26; மத்தேயு 22:13; மாற்கு 10:43
2. ஊழியகாரன். எபேசியர் 6:21; கொலோசெயர் 1:7; கொலோசெயர் 4:7; 1 தெசலோனிக்கேயர் 3:2; ரோமர் 13:4; 1தீமோத்தேயு 4:6; மத்தேயு 23:11; மாற்கு 9:35; யோவான் 12:26; ரோமர் 15:8; ரோமர் 16:1; 1கொரிந்தியர் 3:5; 2கொரிந்தியர் 3:6; 2கொரிந்தியர் 11:15; எபேசியர் 3:7; கொலோசெயர் 1:23,27; 2கொரிந்தியர் 11:23
3. வேலைக்காரன். யோவான் 2:5
4. உதவிக்காரன். 1தீமோத்தேயு 3:8,12
நல்ல வேலைக்காரன் யார்?
1. கிறிஸ்து சொல்லியவைகளை அப்படியே கேட்டு அதன்படி செய்கிறவன். மத்தேயு 8:9
2. பலன் எதிர்பாராது பணி செய்ய அழைக்கப்பட்டுள்ளவன். மத்தேயு 10:10; மத்தேயு 20:2; லூக்கா 17:7-10
3. வேலைக்காரன் எஜமானுக்கு மேற்பட்டவனல்ல. மத்தேயு 10:24
4. வேலைக்காரன் அதிகாலையிலே பணி செய்ய அழைக்கபட்டவன். மத்தேயு 20:1
5. எஜமான் இல்லாதபோதுதான் வேலைக்காரனின் உண்மைத்துவம் வெளிப்படும். மத்தேயு 24:45-47
6. கூலிக்கு வேலை செய்கிறவனல்ல. யோவான் 10:13. கூலி பின்னர் தரப்படும். 1கொரிந்தியர் 3:8
7. தேவ வேலைக்கு நற்சாட்சி பெற்றிருக்க வேண்டும். அப்போஸ்தலர் 6:3
8. வேலைகள் யாவும் சோதனைக்குட்படுத்தபடும். 1கொரிந்தியர் 3:13
9. தன் எல்லை கடந்து பணி செய்யலாகாது. 2கொரிந்தியர் 10:15
10. தேவனுடைய பணியை சொந்த வேலை செய்தும் செய்யலாம். 1தெசலோனிக்கேயர் 2:9; 1தெசலோனிக்கேயர் 4:12; 2தெசலோனிக்கேயர் 3:8
11. முழு மன விருப்பத்தின்படி செய்ய வேண்டும். 1தீமோத்தேயு 3:1
12. வேலைக்காரனுக்கு பாடுகள் உண்டு. 2தீமோத்தேயு 4:5
கர்த்தாவே உமக்கு வேலைசெய்கின்ற வேலைகாரர்களுக்கு ஒன்றையும் மறவாது போதித்து நடத்துகிறவரே நாங்கள் உமக்கு உண்மையும் உத்தமமுமாய் பணிசெய்ய உமது ஆவியானவர் மூலம் உதவி செய்யும்படி இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக் கொள்கிறோம்.