அவர்கள் வியாதியாயிருந்தபோது நான் இரட்டு உடுத்தி,உபவாசம்,ஜெபம் செய்தேன்.
அவர்கள் வியாதியாயிருந்தபோது இரட்டு என் உடுப்பாயிருந்தது, நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரப்படுத்தினேன், என் ஜெபமும் என் மடியிலே திரும்பவந்தது. (சங்கீதம் 35:13)
சங்கீதம் 35:12-17; லேவியராகமம் 16:29; 1 ராஜாக்கள் 21:27-29; யோபு 30:24-31; சங்கீதம் 69:10,11; மத்தேயு 5:44; மத்தேயு 9:14,15; மத்தேயு 10:13; ரோமர் 12:14,15.
ஓருவர் வியாதியில்- உபத்திரவத்தில் – குறைவில் இருக்கும்போது அவர்களுக்காய் இரட்டு உடுத்தி உபவாசம் செய்து ஆலோசனை கொடுத்து ஜெபிக்கின்ற தேவ ஊழியக்காரர்கள் எப்பொழுதும் எந்நேரமும் நினைவுகூரப்பட தக்கவர்கள்.
நாம்……நமது சொந்த ஊழியக்காரருக்காய் …..
1.ஜெபிக்க மன்றாட உபவாசிக்க வேண்டும்..
2.அவர்கள் குறைவில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்….
3.அவர்கள் உபத்திரவங்களில் அவர்களுக்கு ஆறுதலாய் இருக்க வேண்டும்….
4.அவர்களை எல்லா கனத்துக்கும் உரியவர்களாய் வைத்திருக்க வேண்டும்…
5.அவர்கள் தவறுகளை தனிப்பட்ட முறையில் எடுத்துரைத்து ஆலோசனை கூற வேண்டும். பிறர் நடுவில் பகிரங்க படுத்தலாகாது. கேட்காவிட்டால் கர்த்தரிடம் ஒப்புவித்து அவர் செயலுக்காய் காத்திருக்க வேண்டும்…..