விடுதலை பெற்ற விபசாரி

விடுதலை பெற்ற விபசாரி

யோவான் 8:3-12. விடுதலை பெற்ற விபசாரி.

  1. பாவம் ஒருநாள் பரசியமாகும். எந்த பாவமானாலும், குற்றமானாலும், பிழைகளானாலும் நிச்சயம் ஒருநாள் வெளியரங்கமாகும். ரகசிய பாவங்களும் வெளியரங்கமாகும். அவமானம் நிந்தனைகள் உண்டாகும். பிரசங்கி 12:14.
  2. பாவம் நிச்சயமாய் தண்டனையை கொண்டுவரும். வெளியரங்கமான தண்டனையும் உண்டு, உள்ளரங்கமான தண்டனையும் உண்டு. பாவம் செய்தவருக்கு மட்டுமே கிடைக்கும் தண்டனையும் உண்டு பாவம் செய்த ஒருவரால் பலரும் தண்டிக்கபடுவதும் உண்டு. இவ்வுலகத்தில் கிடைக்கும் தண்டனையும் உண்டு. மறு உலகத்தில் கிடைக்கும் தண்டனையும் உண்டு.
  3. பாவம் ஒருவரில் மட்டுமல்ல, எல்லாரிலும் பாவம் உண்டு. பாவம் அல்லது பாவத்தின் சுவடுகள் இல்லாத ஒருவரும் இல்லை. எல்லாரும் பாவம் செய்து கெட்டு போனார்கள். ரோமர் 3;23.
  4. பாவத்தை மன்னிக்கவோ, பரிகரிக்கவோ இயேசு ஒருவர் தவிர வேறு எவராலும் இயலாது. ஏனெனில் அவர் மட்டுமே பாவம் செய்யாதவராய் வந்தார். இயேசு தாமே பாவங்களை மன்னிக்கிறார். தம் வார்த்தைகளினால் மன்னிக்கிறார். தம் ஆவியினால் கழுவுகிறார். தம்மை பலியாக தந்து இரத்தத்தினாலும் கழுவுகிறார்.
  5. பாவத்துக்கு விலை கொடுக்க வேண்டும். மீட்புக்கு விலை கொடுக்க வேண்டியதில்லை. இலவசமானது, யாவருக்குமானது.
  6. பாவம் நீங்கிய வாழ்வே ஒளிமயமான வாழ்வு, நன்மையின் வாழ்வு, பரிசுத்த வாழ்வு, விசுவாச வாழ்வு ஆகும்.
  7. திரும்ப பாவம் செய்தால் மீட்பு திரும்ப வராது. நித்திய தண்டனையே வரும்.
    கர்த்தாவே உம் குமாரனை கொண்டு எங்கள் பாவங்கள் யாவையும் மன்னித்ததற்காய் நன்றி. நாங்கள் திரும்பி பாவம் செய்யாமல் வாழ உதவிடும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME