விசுவாச பாதை

விசுவாச பாதை

தியன பகுதி யோவான் 6:25-33.

பலவிதமான பாதைகள் உண்டு, மார்க்கங்கள் உண்டு, கருத்துகள் உண்டு.
ஆனால் எல்லாம் ஓரிடம் சென்றடைவதில்லை. பலமதங்களிடையில் பல ஒற்றுமைகள் இருக்கலாம்.
ஆனால் எல்லாம் ஒன்றல்ல.

கிறிஸ்தவத்தின் மார்க்க அனுசாரம் ‘விசுவாச பாதை’ என்ற அமைப்பில் தான் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
இந்த விசுவாசபாதை என்பது என்ன என்று நாம் அறிவோம்.

1. விசுவாச பாதை என்பது மனிதனிடம் ஆலோசனை கேட்டு செய்வதல்ல, தேவனிடம் ஆலோசனை கேட்டு நடப்பது.
தேவனை அறிவிக்கின்ற தன் சபை ஊழியனே தேவனுக்கும் உனக்கும் நடுவாக நிற்கின்றான். 2நாளாகமம் 10:8,
2 இராஜாக்கள் 1:2.
நாம் நமது வாழ்க்கையின் வீழ்ச்சிகளை சந்திக்க காரணம் இந்த வழிமுறைகளில் நாம் வராததேயாகும்.

2. விசுவாசபாதை என்பது கர்த்தரை தேடி அவர் சமூகத்தை நாடி வாழ்வது ஆகும். விசுவாசிப்பவன் கர்த்தரை தேடுவான்.
அவரிடம் யாசித்து நிற்பான். ஏசாயா 55:6, ஆமோஸ் 5:4,6.
எப்படி தேடணும்? ஜெபத்தினாலும், உபவாசத்தினாலும் கர்த்தரை தேடணும்.

3. விசுவாசபாதை என்பது எல்லாம் அவர் தருவார் என்று அவரை நம்பி ஓடுவதாகும். உணவு, உடை, உறைவிடம் தருபவர் இயேசு. மத்தேயு 6:25-33. இவைகளை குறித்த கவலைகளை தவிர்க்குக. ஏன்?.
அவர் தருவார் என்று நம்புவதினால்.
நான் அவர் பணியை செய்கிறேன்.
எபிரெயர் 11:6, ரோமர் 8:32.

4. தேவனுக்கேற்ற கிரியை நடப்பிப்பதே விசுவாசபாதை. யோவான் 6:29.
தேவனுக்கேற்ற கிரியை என்றால் இயேசுவை விசுவாசிப்பதாகும்.
தேவன் ஆரம்பித்துள்ள இரட்சண்ய கிரியையை விசுவாசித்து ஏற்றுகொண்டு இரட்சிப்பில் நிலை நிற்பதே மேலான கிரியை. தேவனுக்கேற்காத கிரியைகளில் நாம் அகப்பட்டு இரட்சிப்பை இழக்க வேண்டாம். இரட்சிப்பை இழக்காமல் நிறைவேற பாடுபடுவதே விசுவாசபாதை.

5. இந்த விசுவாசபாதை நித்தியஜீவன் பெறுவது வரையிலும் தொடரவேண்டும். யோவான் 6:27.
நித்திய ஜீவன் என்பது ஒரு புது வாழ்வுக்கான துவக்கம்.
பழைய பாவ உலகினின்று விடுபட்டு
புதிய பரிசுத்த உலகில் வாழ்வது.

Adolp Dias says..”Successful people seek God deep down in the3ir heart, Then, They go out there and play their part”.

ஜெபம்:கர்த்தாவே பாவத்தினால் வறட்சியுற்று, நோயுற்று, மரணமே வாழ்வின் பங்கு என்று நினைத்துகொண்டிருந்த காலத்தில் எங்களின் நம்பிக்கையாகவும், ஒளியாகவும், வாழ்வாகவும் வந்து எங்களை கரையேற்றினீரே. உமக்கு நன்றி. இனி நாங்கள் உம் அன்பை விட்டு எவ்விதத்திலும் விலகியோடாதபடிக்கு விசுவாசத்தில் நிலைத்திருந்து மிகுந்த கனிகளை கொடுக்க எங்களை ஒப்புகொடுக்கிறோம். ஆமென்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME