யெரொபெயாம் இஸ்ரவேலர்களுக்கு ஏற்படுத்தின வீணான ஆராதனைப் பற்றி உங்களுக்கு தெரியுமா

யெரொபெயாம் இஸ்ரவேலர்களுக்கு ஏற்படுத்தின வீணான ஆராதனைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இஸ்ரவேல் தேசத்தில் ஞானியாகிய சாலமோனுக்கு பிறகு தேவனுடைய திட்டத்தின்படி பத்து கோத்திரத்திற்கு ராஜாவாக ஏற்படுத்தப்பட்டவர்தான் இந்த யெரொபெயாம்.

இரண்டு கோத்திரத்திற்கு ரெகொபெயமும் ஆட்சி செய்தார்.

  • இஸ்ரவேலின் பத்துக் கோத்திரங்களுக்கு யெரொபெயாமும், இரண்டு கோத்திரங்களுக்கு ரெகொபெயாமும் ஆட்சி செய்தார்கள்.

தேவன் யெரொபெயாமிடம் என்ன கட்டளை கொடுத்து இருந்தார்?

1Ki 11:37 நீ உன் மனவிருப்பத்தின்படி ஆண்டுகொண்டு, இஸ்ரவேலின்மேல் ராஜாவாய் இருப்பதற்காக நான் உன்னைத் தெரிந்துகொண்டேன்.

1Ki 11:38 நான் உனக்குக் கட்டளையிட்டதையெல்லாம் நீ கேட்டுக் கைக்கொண்டு, நீ என் வழிகளில் நடந்து, என் தாசனாகிய தாவீது செய்ததுபோல, என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும் கைக்கொள்ளும்படிக்கு என் பார்வைக்குச் செம்மையானதைச் செய்கிறதுண்டானால், நான் உன்னோடிருந்து, நான் தாவீதுக்குக் கட்டினதுபோல உனக்கும் நிலையான வீட்டைக் கட்டி இஸ்ரவேலை உனக்குத் தருவேன்.

இஸ்ரவேல் ஜனங்கள் பண்டிகை ஆசரிப்பதற்கும் பலி செலுத்துவதற்கும் எருசலேமுக்கு போனபடியால் ஜனங்கள் ரெகொபெயாம் பக்கம் சாய்ந்து விடுவார்கள் என்பதற்காக ஒரு யோசனை செய்தார்.

1Ki 12:26 யெரொபெயாம்: இப்போது ராஜ்யபாரம் தாவீது வம்ச வசமாய்த் திரும்புகிறதாயிருக்கும்.

1Ki 12:27 இந்த ஜனங்கள் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப்போனால், இந்த ஜனங்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்கள் ஆண்டவன் வசமாய்த் திரும்பி, அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு, யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பாரிசமாய்ப் போய் விடுவார்கள் என்று தன் மனதிலே சிந்தித்துக்கொண்டிருந்தான்.

இவருடைய திட்டம் ஜனங்களிடம் எப்படி செயல்பட்டது என்பதை நாம் கவனிப்போம்.

யெரொபெயாம் பொய்யான தேவனை ஏற்படுத்தினார்  (இரண்டு பொன் கன்றுக்குட்டிகள்).

1Ki 12:28 ஆகையால் ராஜாவானவன் யோசனைபண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி,

1Ki 12:29 ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான்.

  • யெரொபெயாம் அழகாக பொன் கன்றுக்குட்டிகளை செய்து தேவன் இவர் தான் என்று சொன்னபோது ஜனங்கள் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்கள்.
  • ஆரோன் வனாந்தரத்திலே பொன் கன்றுக்குட்டியை வார்ப்பித்து கொடுத்து ஜனங்களைக் கெடுத்துப் போட்டதைப் போல் தான் யெரொபெயாமும் செய்தார்.
  • வனாந்தரத்தில் இருந்த ஜனங்கள் ஏற்றுக் கொண்டதைப் போல் தான் இந்த ஜனங்களும் மனப்பூர்வமாய் ஏற்றுக் கொண்டார்கள்.

பொய்யான ஆராதனைக் கூடத்தையும் அங்கே பலி செலுத்தக்கூடிய ஈனமான ஆசாரியர்களும் ஏற்படுத்தினார்.

Ki 12:31 அவன் மேடையாகிய ஒரு கோவிலையும் கட்டி, லேவியின் புத்திரராயிராத ஜனத்தில் ஈனமானவர்களை ஆசாரியராக்கினான்.

யெரொபெயாம் பொய்யான பண்டிகையையும் இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஏற்படுத்தினார்.

1Ki 12:32 யூதாவில் ஆசரிக்கப்படும் பண்டிகைக்கொப்பாக எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே யெரொபெயாம் ஒரு பண்டிகையையும் கொண்டாடி, பலிபீடத்தின்மேல் பலியிட்டான்; அப்படியே பெத்தேலிலே தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்குப் பலியிட்டு, தான் உண்டுபண்ணின மேடைகளின் ஆசாரியர்களைப் பெத்தேலிலே ஸ்தாபித்து,

தேவனுடைய கட்டளையின் படி இஸ்ரவேலர்கள் கூடாரப் பண்டிகையை ஏழாம் மாதம் 15ம் தேதியிலேஆசாரிப்பார்கள் அந்த பண்டிகைக்கு ஒப்பாக எட்டாம் மாதம் 15ம் தேதியிலே பண்டிகை ஆசாரிக்கும் படி கட்டளையிட்டார்.

Lev 23:34 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அந்த ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் ஏழுநாளளவும் கர்த்தருக்கு ஆசரிக்கும் கூடாரப்பண்டிகையாயிருப்பதாக.

யெரொபெயாம் தன் மனதிலே நியமித்த கொண்ட ஆராதனை  என்றுதான் வேத வசனம் அழைக்கிறது.

1Ki 12:33 தன் மனதிலே தானே நியமித்துக் கொண்ட எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே பெத்தேலில் தான் உண்டாக்கின பலிபீடத்தின்மேல் பலியிட்டு, இஸ்ரவேல் புத்திரருக்குப் பண்டிகையை ஏற்படுத்தி, பலிபீடத்தின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டினான்.

தேவன் கட்டளையிட்டது   – யெரொபெயாம் கட்டளையிட்டது

மெய்யான தேவன்                 – பொய்யான தேவன் (கன்றுக்குட்டிகள்)

மெய்யான தேவாலயம்       -பொய்யான கோவில்

மெய்யான பலிபீடம்              -பொய்யான பலிபீடம்

மெய்யான ஆசாரியர்கள்    – பொய்யான ஈனமான ஆசாரியர்கள்

மெய்யான பலி                        – பொய்யான பலிகள்

மெய்யான பண்டிகை            – பொய்யான பண்டிகை

தேவன் கட்டளையிடாத இந்த ஆராதனையையும் இந்த ஆசாரிப்பையும் தேவன் ஏற்றுக் கொண்டாரா?

1Ki 12:30 இந்தக் காரியம் பாவமாயிற்று; 

  • நம்முடைய தேவன் இன்றைக்கும் மாறாதவராக தான் இருக்கிறார்.

யெரொபெயாம் எல்லாம் தேவனுக்கு தான் செய்தார். ஆனால் தேவன் இந்த ஆராதனையை ஏற்றுக் கொண்டாரா?

இல்லை அவர் இதை பாவமாக எண்ணினார்.

நாம் இன்றைக்கு சுயமாக கொள்கைகளை ஏற்படுத்திக் கொண்டு ஆராதனை செய்தால் அது வீணான ஆராதனையாக தான் இருக்கும். தேவன் ஒருபோதும் அதை அங்கிகரிக்கப் போவதில்லை.

Mar 7:7 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்.

Mar 7:9 பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்குத் தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினது நன்றாயிருக்கிறது.

கர்த்தருக்கு சித்தமானால் ஆராதனையை குறித்து இன்னும் அநேக சத்தியங்களை கற்றுக் கொள்ளுவோம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME