மீகாவின் வீணான ஆராதனைப் பற்றிய உங்களுக்கு தெரியுமா

மீகாவின் வீணான ஆராதனைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?


ஒன்றான மெய் சபையிலே ஆராதனைப் பற்றிய சத்தியங்களைப் பற்றிக் கற்றுக் கொண்டு வருகிறோம்.

வீணான ஆராதனையைக் குறித்து சில உதாரணங்களை பார்த்து இருக்கிறோம்.

இந்த வீணான ஆராதனையை செய்யாதபடிக்கு நீங்கள் கவனமாய் இருக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் செய்யக்கூடிய ஆராதனை ஒருவேளை வீணான ஆராதனை இருந்தால் உங்கள் நித்திய ஜீவனை நீங்கள் இழந்து போவீர்கள்.

நீங்கள் செய்யக்கூடிய ஆராதனை இந்த வீணான ஆராதனையோடு ஒப்பிட்டுப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

கர்த்தர் கர்த்தர் என்று ஒருவர் சொல்லுவதினாலே அல்லது தேவன் தேவன் என்று சொல்லுவதினாலே அந்த ஆராதனை எல்லாம் சரியாக தான் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.

தேவனுக்கு ஆராதனை செய்கிறோம் என்கிறவர்கள் எப்போது பார்த்தாலும் கர்த்தர் கர்த்தர் என்ற வார்தையை பயன்படுத்துகிறார்கள்.அப்படி பயன்படுத்தும் போது இவர்கள் தேவனுக்கு உண்மையாக தான் ஆராதனை செய்கிறார்கள் என்று நாம் என்ன நினைத்து கொள்ளுகிறோம் ஆனால் இது சரியா?

பரலோகத்திலிருக்கிற பிதாவின் சித்தத்தின்படி செய்யாமல் கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லி ஆராதனைசெய்வதினால் ஏதாவது பிரயோஜனம் இருக்குமா?

நிச்சயமாக இருக்காது.

Mat 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

மீகாவின் வீணான ஆராதனையைக் குறித்து இங்கே கற்றுக் கொள்ளப்போகிறோம்.

Jdg 17:1 எப்பிராயீம் மலைத்தேசத்தானாகிய மீகா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் இருந்தான்.

மீகா என்பன் ஒரு திருடனாக இருந்தான்.

தன்தாயின் பணத்தை திருடி வைத்துக் கொண்டான்.

Jdg 17:2 அவன் தன் தாயை நோக்கி: உன்னிடத்திலிருந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு களவுபோயிற்றே, அதைக் குறித்து என் காதுகள் கேட்க நீ சாபமிட்டாயே, அந்தப் பணம், இதோ, என்னிடத்தில் இருக்கிறது; அதை எடுத்தவன் நான்தான் என்றான்.

திருடனாய் இருந்த மீகாவை அவனுடை தாய் எப்படி ஆசீர்வதித்தாள் என்று பாருங்கள்.

Jdg 17:2 …. அதற்கு அவன் தாய்: என் மகனே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாய் என்றாள்.

  • ஒரு திருடனை கர்த்தரின் நாமத்தினால் ஆசீர்வதித்தால் அவன் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவனா?

மீகாவின் தாய் அந்த பணத்தை கர்த்தருக்காக கொடுத்தாள். ஆனால் எதற்காக கொடுத்தாள்?

Jdg 17:3 அவன் அந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசைத் தன் தாயினிடத்தில் திரும்பக் கொடுத்தான்; அவள்: வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் உண்டுபண்ண, நான் என் கையிலிருந்த இந்த வெள்ளியை என் மகனுக்காக முற்றிலும் கர்த்தருக்கென்று நியமித்தேன்; இப்போதும் இதை உனக்குத் திரும்பக் கொடுக்கிறேன் என்றாள்.

  • விக்கிரகங்களை சுரூபத்தையும் உண்டு பண்ண அந்த பணத்தை அவள் கர்த்தருக்காக முழுவதும் கொடுத்த போது கர்த்தர் இந்த காரியத்தை கண்டு ஆசீர்வதித்து இருப்பாரா இல்லை சபித்து இருப்பாரா?
  • விக்கிரக ஆராதனை என்பது தேவனுக்கு விரோதமானது என்கிற பிரமாணத்தை அறிந்து வைத்து இருக்கிற இவர்கள் தங்களுடைய பணத்தைக் கொண்டு விக்கிரகங்களை செய்வதற்கு அதை  பயன்படுத்துவது நியாயமான காரியமா?

மீகா அதைக் கொண்டு விக்கிரத்தை உண்டு பண்ணினான்.

Jdg 17:4 அவன் அந்த வெள்ளியைத் தன் தாய்க்குத் திரும்பக் கொடுத்தான்; அப்பொழுது அவன் தாய் இருநூறு வெள்ளிக்காசை எடுத்து, தட்டான் கையிலே கொடுத்தாள்; அவன் அதினாலே, வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் பண்ணினான்; அவைகள் மீகாவின் வீட்டில் இருந்தது.

மீகா கர்த்தருக்காக ஒரு அறைவீட்டையும் நியமித்தான்.

Jdg 17:5 மீகா, சுவாமிக்கு ஒரு அறைவீட்டை நியமித்து வைத்திருந்தான்;

  • கர்த்தருக்காக ஒரு வீட்டை அவன் உண்டுபண்ணின இந்த காரியம் கர்த்தருக்கு பிரியமாய் இருந்து இருக்குமா?

மீகா தன் குமாரரில் ஒருவனை ஆசாரியனாக நியமித்தான்.

Jdg 17:5 , தன் குமாரரில் ஒருவனைப் பிரதிஷ்டை பண்ணினான்; இவன் அவனுக்கு ஆசாரியனானான்.

  • லேவிகோத்திரத்தை சேர்ந்தவர்கள் தான் ஆசாரியர்களாக இருக்க வேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டு இருக்கும் போது இந்த ஆசாரியத்துவத்தை கர்த்தர் ஏற்றுக் கொண்டு இருப்பாரா?

இதற்கு பின்பு மீகா ஒரு லேவியன் ஒருவனை கண்டு அவனை விக்கிரகத்திற்கு ஆசாரியனாக நியமித்தான்.

Jdg 17:10 அப்பொழுது மீகா: நீ என்னிடத்தில் இரு, நீ எனக்குத் தகப்பனும் ஆசாரியனுமாயிருப்பாய்; நான் உனக்கு வருஷத்திலே பத்து வெள்ளிக்காசையும், மாற்று வஸ்திரத்தையும், உனக்கு வேண்டிய ஆகாரத்தையும் கொடுப்பேன் என்று அவனிடத்தில் சொன்னான்; அப்படியே லேவியன் உள்ளே போனான்.

Jdg 17:11 அந்த லேவியன் அந்த மனிதனிடத்தில் இருக்கச் சம்மதித்தான்; அந்த வாலிபன் அவனுக்கு அவன் குமாரரில் ஒருவனைப்போல் இருந்தான்.

Jdg 17:12 மீகா அந்த லேவியனைப் பிரதிஷ்டைபண்ணினான்; அந்த வாலிபன் அவனுக்கு ஆசாரியனாகி, மீகாவின் வீட்டில் இருந்தான்.

  • இங்கே ஒரு லேவியன்  கூலிக்கு கர்த்தருக்கு ஆராதனை செய்வதாக நினைத்து விக்கிரகத்திற்கு ஆராதனைசெய்கிறான். இந்த ஆராதனையை கர்த்தர் ஏற்றுக் கொண்டு இருப்பாரா?
  • கர்த்தருடைய எல்லா கட்டளைகளையும் மீறி இங்கே மீகா தான் கர்த்தருக்கு தான் ஆராதனை செய்கிறேன் என்று நினைத்துக்கொண்டு போது அந்த ஆராதனையை கர்த்தர் ஏற்றுக் கொள்ளுவாரா?

மீகா கர்த்தரை துதித்தான்.

Jdg 17:13 அப்பொழுது மீகா: எனக்கு ஆசாரியனாக ஒரு லேவியன் அகப்பட்டபடியினால், கர்த்தர் எனக்கு நன்மைசெய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான்.

  • மீகா கர்த்தர் எனக்கு நன்மை செய்தார் என்று சொன்ன போது உண்மையாக மேலே உள்ள இந்த காரியங்களில் கர்த்தர் மீகாவுக்கு நன்மை செய்தாரா?

இதுமுற்றிலும் வீணான ஆராதனை இருக்கிறது. ஏனென்றால் இங்கே தேவனுடைய எந்த கட்டளைகளுக்கும் மீகா கீழ்ப்படியவில்லை.

Mat 15:8 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;

Mat 15:9 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.

மீகா இங்கே செய்தது எல்லாம் அவருடைய சுயமான கற்பனைகள். ஆதலால் இந்த ஆராதனை வீணான ஆராதனையாக இருக்கிறது.

நீங்கள் எப்படி ஆராதனை செய்கிறீர்கள்?

தேவனுக்கு சித்தமானால் தொடர்ந்து ஆராதனை சத்தியங்களை கற்றுக் கொள்ளுவோம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME