மரித்தோர் எப்படிப்பட்ட சரீரத்தோடு வருவார்கள்

மரித்தோர் எப்படிப்பட்ட சரீரத்தோடு வருவார்கள்?

இயேசு கிறிஸ்துவைதேவன் ஆவிக்குரிய சரீரத்தில் தான் உயிரோடு எழுப்பினார் என்று நாம் விசுவாசிக்க வேண்டும்.

1கொரிந்தியர் 15:20 கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.

கிறிஸ்து மரித்து ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுதலில் முதற்பலன் என்பதை விசுவாசிக்க வேண்டும்.

1கொரிந்தியர் 15:23 அவனவன் தன் தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து,,,,,,

இயேசுகிறிஸ்து வரும் போது அவருடையவர்கள் ஆவிக்குரிய சரீரத்தில் தான் உயிர்த்தெழுவார்கள்.

1கொரிந்தியர் 15:22 ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

1கொரிந்தியர் 15:23 அவனவன் தன் தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

நம்முடைய பூமிக்குரிய சரீரம் விதையாக இருக்கிறது.

1கொரிந்தியர் 15:35 ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில்,

1கொரிந்தியர் 15:36 புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே.

  • நாம் பூமிக்குரிய சரீரத்தை மாத்திரம் விதைக்கிறோம்.

நாம் வெறும் விதையை விதைக்கிறோம் அது வெளியே வரும் போது வேறொரு மேனியோடு வெளியே வருகிறது.

1கொரிந்தியர் 15:37 நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய்.

தேவன் தான் அந்த விதைக்கும் அதற்கேற்ற மேனியைக் கொடுக்கிறார்.

1கொரிந்தியர் 15:38 அதற்குத் தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அததற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.

மாம்சத்தில் வித்தியாசங்கள் உண்டு.

1கொரிந்தியர் 15:39 எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங்களுடைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே.

மகிமையில் வித்தியாசங்கள் உண்டு

1Co 15:40 வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே;

1Co 15:41 சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே, மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.

இங்கே உயிர்த்தெழுதலில் தேவன் இந்த சத்தியத்தை தான் தருகிறார்.

  • மேனியில் வித்தியாசங்கள் உண்டு.
  • மாம்சத்தில் வித்தியாசங்கள்உண்டு.
  • மகிமையில் வித்தியாசங்கள்உண்டு.

ஆவிக்குரிய சரீரத்தில் நமக்கு கிடைக்கக்கூடிய மகிமை ஒரே மாதிரி இருக்கப்போதில்லை.

1கொரிந்தியர் 15:42 மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். ….

நம்முடைய பூமிக்குரிய சரீரம் எப்படி ஆவிக்குரிய சரீரம் எப்படி எழுந்து இருக்கும்?

1கொரிந்தியர் 15:43 கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்.

1Co 15:44 ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்ம சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு.

1கொரிந்தியர் 15:45 அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.

1கொரிந்தியர் 15:46 ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது.

நாம் வானத்துக்குரியவரின் சாயலை தரித்துக் கொள்ளுவோம்.

1கொரிந்தியர் 15:47 முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.

1கொரிந்தியர் 15:48 மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே.

1கொரிந்தியர்  15:49 மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம்.

நாம் ஏன் வானவருடைய சாயலை தரித்துக் கொள்ள வேண்டும்?

1கொரிந்தியர் 15:50 சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.

  • மாம்சமும் இரத்தமும்(பூமிக்குரிய சரீரம்) தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பது இல்லை

நாம் எப்போது மறுரூபமாக்கப்படுவோம்?

1கொரிந்தியர் 15:51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.

1கொரிந்தியர் 15:52 எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.

  • இயேசு கிறிஸ்துவின் வருகையில் கடைசி எக்காளம் தெனிக்கும் போது ஒரு நிமிஷத்திலே மறுரூபமாக்கப்படுவோம்.
  • அப்போது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள் நாமும் மறுரூபமாக்கப்படுவோம். 

ஆவிக்குரிய மரணம் ஜெயமாக விழுங்கப்படும்.

1கொரிந்தியர் 15:53 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.

1கொரிந்தியர் 15:54 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.

இதற்கு பிறகு ஆவிக்குரிய மரணம் என்பதும் இல்லை யாரும் பாவம் செய்யப் போவதும் இல்லை

1கொரிந்தியர் 15:55 மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?

1கொரிந்தியர் 15:56 மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்.

1கொரிந்தியர் 15:57 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

இயேசுகிறிஸ்து வரும் போது அவருக்கு ஒப்பாக நாம் இருப்போம்.

1யோவான் 3:2 பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME