என் வசனத்தை அறியாமலிருக்கிறீர்கள். என் உபதேசம் கேட்க மனதில்லாதிருப்பதினால்

என் வசனத்தை அறியாமலிருக்கிறீர்கள். என் உபதேசம் கேட்க மனதில்லாதிருப்பதினால்.

Why do you not understand My speech? Because you are not able to listen to My word. (John 8:43)

Jn8:27; Jn6:60; Jn5:43; Jn7:17; Jn12:39,40; Act7:51; Ro3:11; Ro8:7,8; 1Co2:14; Pr28:4,5; Isa6:9; Isa44:18; Hos14:9; Mic4:12.

என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா?
(யோவான் 8:43) 

யோவான் 8:27; யோவான் 6:60; யோவான் 5:43; யோவான் 7:17; யோவான் 12:39,40; அப்போஸ்தலர் 7:51; ரோமர் 3:11; ரோமர் 8:7,8; 1கொரிந்தியர் 2:14; நீதிமொழிகள் 28:4,5; ஏசாயா 6:9; ஏசாயா 44:18; ஓசியா 14:9; மீகா 4:12.

அறியாமலிருக்கிறீர்கள்:
இயேசுகிறிஸ்து தேவனிடமிருந்து தேவனுக்குரியவைகளைத் தேவனுடைய ஜனங்களுக்கு தேவனுக்காக கொடுக்கும்படியாக வந்தார். அவர் தேவனுடைய வார்த்தைகளையே பேசினார். ஆனால் இஸ்ராயேல் ஜனங்கள் அவ்வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குரிய காரணம் என்னவெனில் இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தை கேட்க மனதில்லாததுவே.
ஏன் அவர்களுக்கு மனமில்லாமல் போயிற்று?

  • அவர்கள் பிதாவாகிய தேவனை அனுபவ பூர்வமாக அறியவில்லை. கேள்விபட்டதை நம்புகிறவர்களாயிருந்தனர். தனிபட்ட தெய்வீக உறவு இல்லாதவர்கள் தேவனுடைய வார்த்தைகளைக் கிரகிக்க இயலாது.
  • அவர்கள் இயேசுவுக்கும் பிதாவுக்கும் உள்ள உறவை அறிந்திருக்கவில்லை. பிதாவை தன் சொந்தபிதா என்று சொன்னதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தூஷணம் சொல்வதாக நம்பினர். சாதாரண மனுஷரிடத்தில் பிறந்த ஒருவர் அசாதாரண தேவனோடு எப்படி சம்பந்தப்படுத்தவியலும். என்றனர்.
  • அவர்கள் தேவனுடைய ஆவியைப் பெற்றிருக்கவில்லை. தேவனுடைய ஆவியினாலேயன்றி இயேசுவை மேசியா என்றோ, ஆண்டவர் என்றோ, மீட்பர் என்றோ நம்பவியலாது. விவிலியத்தை தேவனுடைய ஆவியினாலே மட்டுமே தான் புரிந்து கொள்ளமுடியும்.
  • அவர்கள் இருதயம் பெருந்திண்டியினாலும், லொளகீக கவலையினாலும் ஐசுவரிய மயக்கத்தினாலும் நிறைந்திருந்ததினால் இயேசுவின் பரலோக செய்தியைக் கேட்க மனதில்லை. பூலோக செழிப்பு , ஆசீர்வாதம், மேன்மை குறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல கடினமான செய்திகளுக்கு இடம் தருவதில்லை.

இயேசுவை இன்னார் என்று அறிவதினால் மட்டுமே அவரின் உபதேசத்தை அறிய முடியும். அவரின் உபதேசத்தை அறிந்தால் மட்டுமே நித்திய ஜீவனை பெறமுடியும். நித்திய ஜீவனை வாக்குறுதியாய் பெறுவதினால் மட்டுமே பரதீசை அடைய இயலும்.

கர்த்தாவே உம் மகன் மூலம் நல்வார்த்தைகளை வசனித்தும் ஏற்றுக்கொள்ளும் உள் மனமும், கேட்கும் காதுகளும் இல்லாமல் அலைந்து திரியும் நிலையினின்று எங்களை இரட்சியும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME