என்னிடம் வருகிறவரை நான் புறம்பே தள்ளுவதில்லை.
The one who comes to Me I will by no means cast out. (John 6:37)
Jn9:34; Mt11:28; Mt24:24; Lk23:40-43; Ro5:20; 1Tim1:16; Heb4:15; Heb7:25; 1Jn2:19; Rev22:17; Ps102:16-18; Isa1:18,19; Isa41:9; Isa42:3; Isa55:7.
பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. (யோவான் 6:37)
யோவான் 9:34; மத்தேயு 11:28; மத்தேயு 24:24; லூக்கா 23:40-43; ரோமர் 5:20; 1தீமோத்தேயு 1:16; எபிரெயர் 4:15; எபிரெயர் 7:25; 1யோவான் 2:19; வெளி 22:17; சங்கீதம் 102:16-18; ஏசாயா 1:18,19; ஏசாயா 41:9; ஏசாயா 42:3; ஏசாயா 55:7.
புறம்பே தள்ளுவதில்லை:
ஆதியில் மனிதன் பாவத்தில் அகப்படுவது வரையிலும் தேவன் எவரையும் வெறுக்கும்படியாக விரும்பவில்லை.
பாவம் தோன்றியபின்பு , பாவத்தினிமித்தம் மனுக்குலம் தேவனால் புறக்கணிக்கப்பட்டது. ஆனாலும் இரக்கமுள்ள தேவன் இஸ்ராயேல் ஜனங்கள் மூலமாய் விலக்கப்பட்ட மனுக்குலத்தை தமதாக்கும்படி விரும்பினார். அதன் முத்தாய்ப்பாய் தேவன் தமது குமாரனாகிய இயேசுவை அனுப்பி விலக்கப்பட்டோரை விடுவிக்க விரும்பினார். தமது இரட்சிப்பை பெற்றுகொள்ள விரும்புகிறவர்களை தம்மண்டையில் சேர்த்து கொள்கின்றார்.
புறம்பே இருக்கிறவரை மீட்க வந்த இயேசு எவரையும் புறம்பேதள்ள விரும்புவதில்லை.
புறம்பே தள்ளுவதில்லை:
தேவனை விட்டு எம்மனிதனையும் வெளியேற்றுவது அவரின் விருப்பமல்ல. விரும்பதக்கவர் , தகாதவர் என்று ஒதுக்கி வைப்பதும் இல்லை. எல்லாருக்கும் ஜீவனை கொடுக்க விரும்புகிறவர், எல்லாரும் இரட்சிக்கப்படவும் விரும்புகிறார்.
இந்த அங்கீகரித்தல் எதுவரையிலும் தொடரும்?
இயேசுகிறிஸ்து சபையை எடுத்துகொள்வது வரையிலும் எவரையும் தள்ளிவிடும்படியாய் தீர்ப்பிடுவதில்லை.
ஆனால் இந்த அங்கீகரித்தலும், புறம்பே தள்ளுதலும் விசுவாசத்தின் அடிப்படையில் தான் செயல்படும்.
நாம் தள்ளிவிடப்படாமலிருக்க வேண்டுமாயின் அவரை விசுவாசித்துதானாக வேண்டும். கிருபையினால் அவர் நம்மை தம்மிடம் அழைக்கலாம். ஆனால் விசுவாசத்தினால் மாத்திரமே அவரில் நிலைத்திருக்க முடியும். விசுவாசம் என்பது வெறும் உள்ளத்தோடு இணைந்த ஒன்றல்ல, நமது கிரியைகளோடும் இணைந்த ஒன்றாகும்.
அவரிடத்தில் வேறுபாடில்லைதான். ஆனால் இந்த பட்சபாதமின்மையானது விசுவாச கிரியையை பொறுத்ததே. இயேசுவை தேடி, நாடி அவரை பற்றிக்கொண்டு வாழ்பவர் எவரையும், அந்நபர் இயேசுவைபோல வாழ்வாரென்றால் எக்காரணத்தைகொண்டும் வெளியே தள்ளுவதில்லை.
நரகம் என்பது புறம்பான இருள். சாத்தானுக்கும் அவன் கூட்டத்தாருக்குமானது. பரலோகத்துக்குரியோர் நரகிற்குரியவர் அல்ல, நரகிற்குரியோர் பரலோகிற்குரியவர் அல்ல.
கர்த்தாவே எங்களை தள்ளிவிடாமல் உம் மகனுக்குரியவர்களாய் வைத்துக்கொண்டமைக்கு நன்றி. நாங்கள் உம் மகனின் இரட்சண்ய கிரியைக்குரியவர்களாய் இறுதிவரையிலும் நிலைத்திருக்க உதவி செய்யும்.