கொடுக்கிறயாவும்

பிதா எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்.

All that the Father gives Me will come to Me. (John 6:37)
Jn6:44,65: Jn10:28,29; Jn17:2,6,8,9,11,24; Eph2:4-10; Phil1:29; 2Thes2:13,14; 2Tim2:19; Tit3:3-7; Ps110:3.

பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. (யோவான் 6:37)

யோவான் 6:44,65: யோவான் 10:28,29; யோவான் 17:2,6,8,9,11,24; எபேசியர் 2:4-10; பிலிப்பியர் 1:29; 2தெசலோனிக்கேயர் 2:13,14; 2தீமோத்தேயு 2:19; தீத்து 3:3-7; சங்கீதம் 110:3.

என்னிடத்தில் வரும்:

இயேசுவை பின்பற்றுகிறவர்கள் 7 சாராராக வகுக்கப்படுகின்றனர்.
1. தேவ ஆவியின் ஏவுதலினால் இயேசுவை பின்பற்ற முன்வந்தவர்கள்.
2. சத்தியத்தை கேட்டதினாலேயோ, நம்பினதினாலேயோ இயேசுவை பின்பற்றியவர்கள்.
3. பிதாவின் அருள் பெற்று இயேசுவை பின்பற்றியவர்கள்.
4. அற்புதங்கள், அடையாளங்கள் மூலம் இயேசுவை பின்பற்றியவர்கள்.
5. தனிபட்ட வாஞ்சை, விருப்பத்தினிமித்தம் இயேசுவை பின்பற்றியவர்கள்.
6. நற்கிரியைகளைகண்டு, அனுபவித்து, இயேசுவை பின்பற்றினவர்கள்.
7. என்ன, ஏது என்று தெரியாது, கூட்டத்தோடு கூட்டமாய் பின்பற்றியவர்கள்.

இயேசுவை பின்பற்றவோ, அவரை ஏற்றுகொள்ளவோ பிதா விரும்பியிருக்க வேண்டும்.
அதனை தீர்மானிப்பவர் பிதாவே.

இயேசு ஒருவன் தன்னை பின்பற்ற பிதாவின் அருளை பெற வேண்டும் என்றார்.
யோவான் மூப்பன் பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவை பின்பற்ற இயலாது என்றார். 1 யோவான் 4:2,3.

பிதா தெரிந்தெடுத்து தமக்கு கொடுக்கிறவர்களே தம்மிடம் வரும். அவர்களே தம்மில் நிலைத்திருப்பர். மிகுந்த கனிகளை கொடுப்பர்.

இயேசுவை பின்பற்றுவது எளிதான காரியமல்ல, இயேசுவை பின்பற்ற சிலுவை சுமக்க ஆயத்தமாயிருக்க வேண்டும். கூடவே சுவிசேஷம் சுமக்கவும் ஆயத்தமாயிருக்க வேண்டும். அப்படிபட்டவர்களை பிதா தெரிந்தெடுத்து தமது மகனுக்கு கொடுக்கிறார்.

நாம் நம்மிஷ்டமாய் இயேசுவை பின்பற்ற இயலாது. அவருக்குரியவர்கள் அவரில் நிலைத்திருப்பர். அல்லாதோர் பின்வாங்கி உலக காரியங்களில் தங்களை உட்படுத்தி அழிவை தேடுவர்.

கர்த்தாவே, உம் மகனை எங்களுக்காக அனுப்பினீர். எங்களை நீர் தெரிந்தெடுத்து உம் குமாரனுக்கு, குமாரனின் ஜனமாக கொடுத்தீர். இதனை நாங்கள் உணர்ந்து கொண்டு உண்மையோடும், உத்தமத்தோடும் நடக்க உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME