நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்.

நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்.

You are of your father the devil, and the desires of your father you want to do. (John 8:44)

Jn8:38; Mt13:38; Act5:3; Act13:10; 2Co11:3,13-15; 2The2:9-11; Jas4:1-7;1Pet5:8;1Jn3:8-10,12; Rev9:11; Rev12:9; Rev13:14; Rev20:2,3,10; Rev21:8; Rev22:15.

நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள், உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள், அவன் ஆதிமுதற் கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான், சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை, அவன் பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். (யோவான் 8:44) 

யோவான் 8:38; மத்தேயு 13:38; அப்போஸ்தலர் 5:3; அப்போஸ்தலர் 13:10; 2கொரிந்தியர் 11:3,13-15; 2தெசலோனிக்கேயர் 2:9-11; யாக்கோபு 4:1-7; 1பேதுரு 5:8; 1யோவான் 3:8-10,12; வெளி 9:11; வெளி 12:9; வெளி 13:14; வெளி 20:2,3,10; வெளி 21:8; வெளி 22:15.

பிசாசு:
தேவனுடைய விருப்பங்களுக்கு, கிரியைகளுக்கு மாறுபாடாக செயல்படுகிறவனே பிசாசு. யோவான் 8:44 ல் பிசாசின் காரியங்கள் குறித்து கர்த்தராகிய இயேசு பல உண்மைகளை தெரிவித்துள்ளார்.

  • பிசாசு இச்சைகளையுடையவன். மாற்கு 4:18,19; ரோமர் 1:24; ரோமர் 6:12; எபேசியர் 2:3; 2பேதுரு 2:18.
  • பிசாசு ஆதியில் உள்ளவன். தேவனோடிருந்தவன். தேவனால் படைக்கப்பட்டவன். கலகம் விளைவித்தவன். வெளியேற்றப்பட்டவன். ஆகையினால் பல விஷயங்களை அறிந்துள்ளான்.
  • பிசாசு மனுஷ கொலைபாதகன். வார்த்தையினாலும், செயலினாலும் கொலை செய்கிறவன். 1யோவான் 3:15; ஆதி4.
  • பிசாசிடம் சத்தியம் இல்லை. சத்தியம் இவனுக்கு சொன்னாலும் இவனில் இடம் பெறுவதில்லை. 1இராஜாக்கள் 22:22; 1நாளாகமம் 21:1; அப்போஸ்தலர் 5:3; லூக்கா 22:3; யோவான் 13:2.
  • பிசாசு பொய்யனாகவும், பொய்யர்களுக்கு பிதாவுமாயிருக்கிறான். இல்லாததை இருப்பதாக சொல்லுவதும், இருப்பதை இல்லையென்று சொல்லுவதும், உள்ளதை மாற்றிசொல்லுவதும் பொய்மையே. அப்போஸ்தலர் 5:3; ரோமர் 1:25; 2தெசலோனிக்கேயர் 2:9,12; 1தீமோத்தேயு 6:20.
  • பிசாசு சொந்தமாய் பேசுவான். அதிக விளக்கம் கொடுத்து நம்ப வைப்பான். விவிலியத்துக்கு விளக்கம் கொடுக்கிறேன் என்று ஆவியின் நீரோட்டத்துக்கு எதிராக போதிக்கின்றவன். சொந்தமாய் பேசுகிறான். மனதில் தோன்றுவதை பேசுவதே பொய்யின் ஆவியாகும். எரேமியா 23:21,31

இந்த பிசாசின் செயல்கள் கொண்டிருந்த இஸ்ராயேலர் இயேசுவுக்கு எதிர்த்து நின்று இதுவரையிலும் வேதனைகளை அனுபவிப்பதுபோல நாமும் தேவனுடைய ஆவிக்கு எதிர்த்து நிற்காதிருப்போம்.

கர்த்தாவே நாங்கள் பிசாசின் குணநலங்களையுடையவர்களாய் இராமல் கிறிஸ்துவின் குணங்களை உடையவர்களாய் இருக்க உம் ஆவியினால் எங்களை நிரப்பும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME