என்னிடத்தில் பசியடையான், தாகமடையான்.
He who comes to Me shall never hunger,and he who believes in Me shall never thirst.(John 6:35)
Jn6:37,44,45,65; Jn5:40; Jn7:37; Isa55:1-3; Mt11:28; Rev22:17; Jn4:13,14; Jn7:38; Jn11:25; Isa49:10; Lk6:21,47; Ro4:11; Eph2:8; Rev7:16.
இயேசு அவர்களை நோக்கி: ஜீவஅப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான். (யோவான் 6:35)
யோவான் 6:37,44,45,65; யோவான் 5:40; யோவான் 7:37; ஏசாயா 55:1-3; மத்தேயு 11:28; வெளி22:17; யோவான் 4:13,14; யோவான் 7:38; யோவான் 11:25; ஏசாயா 49:10; லூக்கா 6:21,47; ரோமர் 4:11; எபேசியர் 2:8; வெளி 7:16.
பசியடையான், தாகமடையான்:
கிறிஸ்துவோடு இணைந்து வாழ்வதற்கு இரு முக்கிய விசயங்களை கடைபிடிக்க வேண்டும்.
1. கிறிஸ்துவினிடம் வரவேண்டும். இங்கே தம்மிடம் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான் என்று வாக்க்குறுதி தருகிறார். இயேசுகிறிஸ்து வயிற்றுபசியை போக்குகிறவர் மட்டுமல்ல, ஆத்தும பசியை போக்குகிறவருமாயிருக்கிறார். சரீரமும், உள்ளமும் தேவனுடைய ஆலயமாயிருப்பதினால் சரீரமும், ஆத்துமாவும் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.
சரீரம் அழுக்காயிருந்தாலும் ஆத்துமாவில் விசுவாசம் இருந்தால் போதுமானது என்பவர்களுக்கு, சரீரத்தினாலும், ஆத்துமாவினாலும் தேவனை மகிமைபடுத்த கடனாளிகளாயிருக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம்.
ஆத்துமாவில் விருப்பம் இருந்தாலும், சரீரத்தினால்தான் நாம் அவரிடம் வருகின்றோம். சரீரம் மண்ணில் அழிவதற்கு அல்ல, மறுரூபப்படுத்தபடுவதற்காகவே நாம் இரட்சிக்கபட்டு மண்ணில் விதைக்கப்படுகிறோம்.
உளபூர்வமான வருகை மட்டுமல்ல, சரீரபிரகாரமான நெருங்குதலும் கிறிஸ்துவோடு இணைந்து வாழ்வதற்கு அவசியமானது. இருக்கின்ற சரீரத்தோடு அவரிடம் வாருங்கள். பலவீன சரீரத்தை பலமுள்ளதாகவும், நொடிந்த சரீரத்தை புஷ்டியானதாகவும் மாற்றி அவரின் சிலுவையை சுமந்து செல்ல உதவுவார்.
2. கிறிஸ்துவிடம் விசுவாசம் வைக்கவேண்டும்.கிறிஸ்துவிடம் விசுவாசம் வைக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான் என்று வாக்குறுதி தருகிறார். சரீரபிரகாரமான தாகத்தையும் , ஆத்மீக தாகத்தையும் நீக்குகிறவர் கிறிஸ்து ஒருவர் மட்டுமே. விசுவாசி. கிறிஸ்துவின்மேல் விசுவாசம் வை. கிறிஸ்துவுக்குள் விசுவாசியாயிரு. விசுவாசம் என்பது உள்ளம் சார்ந்தது மட்டுமல்ல,உடல் சார்ந்த அர்ப்பணத்தோடுகூடிய ஒப்படைப்பும் இணைந்ததே.
உள்ளத்தில் இயேசுவை நம்புவதினால் மட்டும் முழுமையான இரட்சிப்பு கிடைத்துவிடாது.
உள்ளத்தில் உண்டாகும் விசுவாசம் உடலை திருமுழுக்குக்கு ஒப்புக்கொடுத்து திருவிருந்தில் பங்குபெறுவது வரையிலும் வழிநடத்துகிறது. அல்லாத விசுவாசம் பொல்லாத விசுவாசமே. விசுவாசிப்பவன் தாகமடைவதில்லை. எத்தகைய தாகமாயிருப்பினும் அவைகளையெல்லாம் நீக்கும் ஆற்றல் விசுவாசத்திற்கு உண்டு.
வாருங்கள் உள உடலோடு.சேருங்கள் உள உடலோடு.
கர்த்தாவே, உம்மிடம் நாங்கள் வரவும், உம்மை நம்பவும் எங்களுக்கு வழி உண்டாக்கி உம் பிள்ளைகளாய் விளங்க உம் மகனை எங்களுக்காய் தந்தீரே. உமக்கு நன்றி. நாங்கள் இனி உள்ளத்தாலும், உடலாலும் உம்மை மகிமைப்படுத்தி, கனபடுத்தி வாழ எங்களுக்கு பெலன் தாரும்.