நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை.
You judge according to the flesh; I judge no one. (Jn8:15)
Jn7:24; Jn5:30; Jn8:11; Jn3:17; Jn9:39; Jn12:47; Jn18:36; Lk12:14; Ro2:1; 1Co2:15; 1Cor4:3-5.
நீங்கள் மாம்சத்துக்கேற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை, (யோவான் 8:15)
யோவான் 7:24; யோவான் 5:30; யோவான் 8:11; யோவான் 3:17; யோவான் 9:39; யோவான் 12:47; யோவான் 18:36; லூக்கா 12:14; ரோமர் 2:1; 1கொரிந்தியர் 2:15; 1கொரிந்தியர் 4:3-5.
இயேசு நியாயந்தீர்க்க வரவில்லை.
மனிதனை இரட்சிப்பதற்காக வந்தார். மனிதனை சிட்சிக்க அவர் விரும்பவில்லை. தந்தையாம் தேவன் நியாயபிரமாணத்தின்படி நடவாதவர்களையும், பாவத்தில் பூரணமடைந்தவர்களையும் இந்த பூமியில் இராதபடிக்கு நிக்கிரகம் பண்ணினார். அவரால் அனுப்பப்பட்ட தேவ குமாரனாகிய கிறிஸ்துவோ மனுகுலத்தை மீட்கும்படியாகவே செயல்பட்டார்.
யூதர்களாலும், உரோமர்களாலும் மற்றும் பல இனத்தாராலும் பலவிதமான உபத்திரவங்களை அனுபவித்தும் அவர்கள் மீது தீர்ப்பை செலுத்தவில்லை.
அன்பை கூறினவர் அன்பை செயல்படுத்தினார். அன்பின் எதிரணியில் உள்ள கோபாக்கினையின் கலசத்தை அவர் கையில் எடுக்கவில்லை.
அன்பு பலிதமானதேயன்றி அன்பு மாறுதலாகி கோபத்தையும், குரோதத்தையும், முரட்டாடத்தையும் வெளிபடுத்தவில்லை. அன்பு தன்னை பலியாக்கியது. ஜீவன் கொடுத்து மீட்டது.
தீர்ப்பிடபட்டவர்களும் , தீர்ப்புக்கு உட்படபோகிறவர்களும் அதிக ஆக்கினையை அடையாதபடிக்கு நியாயதீர்ப்பு செய்யாமல் அன்பு காட்டினார்.
ஒருவர் செய்யும் தவறுகளை கண்டிக்கவும், கடிந்துகொள்ளவும் செய்யலாம். ஆனால் அவருக்கு எதிராக தீர்ப்பு செலுத்த கிறிஸ்தவத்தில் எவருக்கும் இடம் தரவில்லை. அதேவேளையில் உபதேச கோளாறுகள் உடையவர்கள் மீது சபை தீர்ப்பு செலுத்த அதிகாரமுள்ளது.
நாம் மற்றவர்களை குற்றவாளிகளாக தீர்க்கும் தீர்ப்பே நாம் அதிக ஆக்கினை அடையும்படியான படுகுழி. எனவே ஒருவரையும் தீர்ப்பிடாதிருங்கள். நியாயாதிபதி வாசலருகே நிற்கிறார்.
அன்பை செலுத்துங்கள்.
ஒருதரம் நம்மீது பிறர்காட்டும் அன்பை இழந்தோமானால் திரும்ப அந்த அன்பு நம்மை தேடிவரும் என்ற நிச்சயமில்லை.
கர்த்தாவே எங்களை தீர்ப்பிட்டும் நரகாக்கினைக்கு அனுப்ப அல்ல அன்பு காட்டி மீட்டு தம்மண்டை சேர்க்கவே உம் குமாரனை அனுப்பினீர். உமக்கு நன்றி.