தேவனுடைய ராஜ்யத்தில் நாம் என்னவாக இருக்கிறோம்

தேவனுடைய ராஜ்யத்தில் நாம் என்னவாக இருக்கிறோம்?

அந்த தேவனுடைய ராஜ்யத்தில் நாம் என்னவாக இருக்கிறோம் எனபதைக் கற்றுக் கொள்ளுவோம்

நாம் அந்த தேவனுடைய ராஜ்யத்தில் குடிமக்களாக இருக்கிறோம்.

Eph 2:19 (KJV+)  Now686 therefore3767 ye are2075 no more3765 strangers3581 and2532 foreigners,3941 but235 fellow citizens4847 with the3588 saints,40 and2532 of the household3609 of God;2316

Eph 2:19 ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் ,

  • ஒரே நகரத்தார் என்று நாம் அழைக்கப்படும் போது நாம் அதிலே குடிமக்களாக இருக்கிறோம்.
  • நாம் எந்த ஒரே தேசத்திலும் குடிமக்களாக இருக்க வேண்டும் என்றும் என்றால் அந்த தேசத்தில் நாம் பிறக்க வேண்டும். அப்போது தான் நாம் அந்த தேசத்திற்குரியவர்களாகிறோம்.

நாம் இந்த தேவனுடைய ராஜ்யத்தில் எப்படி குடிமக்களானோம்?

அந்த தேவனுடைய ராஜ்யத்தில் பிறந்த போது நாம் குடிமக்களானோம்.

தேவனுடைய ராஜ்யத்தில் எப்படி பிறந்தோம்?

Joh 3:5 இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

  • தேவனுடைய ராஜ்யத்திலே ஒருவன் பிறக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறக்க வேண்டும்.

அதாவது ஞானஸ்நானத்தின் மூலமாக புதிதான ஜீவனுள்ளவனாக அந்த தேவனுடைய ராஜ்யத்திலே பிறக்கிறான்.

Rom 6:4 மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.

நாம் தேவனுடைய ராஜ்யத்தில் குடிமக்களாய் இருக்கிறபடியால் நாம் இந்த பூமிக்குரியவர்களா?

நாம் தேவனால் பிரித்தெடுக்கப்பட்டு அந்த தேவனுடைய ராஜ்யத்தில் ஞானஸ்நானத்தின் மூலமாக நாம்பிறந்த படியால் நாம் இந்த உலகத்திற்குரியவர்கள் அல்ல.

Col 1:13 இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.

இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்குரியவரா?

இயேசு கிறிஸ்து எந்த பூமிக்குரிய அடையாளத்தோடும் தன்னை ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை அவரும் இந்த பூமியிலே அந்நியரும் பரதேசியைபோலவுமே வாழ்ந்தார்.

Joh 17:14  நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; 

Joh 17:16 நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.

இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் இந்த உலகத்திற்குரியவர்களா?

இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் இந்த உலகத்திற்குரியவர்கள் அல்ல.

Joh 15:19 நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.

Joh 17:14 நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.

Joh 17:16 நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.

நாம் இந்த உலகத்துக்குரியவர்களா?

Luk 16:15 அவர் அவர்களை நோக்கி:  தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.

  • நம்மில் அநேகர் நான் தமிழன் நான் இந்தியன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ளுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த உலகத்திலிருந்து பிரிந்து இருக்கிறார்களா?
  • அநேகர் தங்களுடைய ஜாதிகளை மேன்மையாக சொல்லிக்கொள்ளுகிறார்களே அவர்கள் இந்த உலகத்தை விட்டுபிரிந்து இருக்கிறார்களா?

உலகத்தில் நாம் சிநேகமாக இருக்கும் போது தேவனுக்கு பகைஞர்களாய் இருக்கிறோம்.

1Jo 4:5 அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும்.

Jam 4:4 விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.

  • நான் இந்தியன் நான் தமிழன் நான் இந்த ஜாதியை சேர்ந்தவன் என்று உலகத்தார் பெருமையாக சொல்லிக் கொள்ளுவார்கள். நாம் தமிழர்கள் தான் நாம் இந்தியர்கள் தான் இதில் என்ன நமக்கு பெருமை இருக்கிறது,
  • நாம் இந்த தேசத்தில் தேவனுடைய சித்தத்தின் படி பிறந்து இருக்கிறோம். அவருடைய சித்தத்தின் படி தான் வாழவேண்டும்.

நாம் இந்த உலகத்தில் ஆவிக்குரிய ரீதியில் குடிமக்கள் இல்லை ஆனால் தேவனுடைய ராஜ்யத்தில் நாம்  குடிமக்களாக இருக்கிறோம்.

Eph 2:19 (KJV+)  Now686 therefore3767 ye are2075 no more3765 strangers3581 and2532 foreigners,3941 but235 fellow citizens4847 with the3588 saints,40 and2532 of the household3609 of God;2316

Eph 2:19 ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் 

  • நாம் தேவனுடைய ராஜ்யத்தில் அந்நியரும் பரதேசிகளுமாயிராமல் பரிசுத்தவான்களோ ஒரேநகரத்தாராய்(குடிமக்களாய்) இருக்கிறோம்

நாம் இந்த தேசத்தில் தேவனுடைய சித்தத்தின் படிஅந்நியரும் பரதேசிகளுமாய் வாழ்ந்தால் தான் நம்முடைய சொந்த குடியிருப்புக்கு நாம் போக முடியும்.

Phi 3:20 நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME