நாம் உயிர்த்தெழுதலில் யாருக்கு ஒப்பாக இருப்போம்

நாம் உயிர்த்தெழுதலில் யாருக்கு ஒப்பாக இருப்போம்?

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் இருந்து அநேக ஆதாரங்களையும் சத்தியங்களையும் கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

ஆவிக்குரிய உயிர்த்தெழுதலில் நாம் ஆவிக்குரிய சரீரத்தோடு உயிர்த்தெழுவோம்.

நாம்உயிர்த்தெழுதலில் பரலோகத்தில் உள்ள தேவ தூதர்களைப் போல இருப்போம்.

மத்தேயு 22:30 உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்;

பரலோகத்தில் தூதர்கள் எப்படி இருக்கிறார்கள்?

எபிரேயர் 1:7 தேவதூதரைக்குறித்தோ: தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது.

எபிரேயர் 1:14 இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?

தேவதூதர்கள் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாக இருக்கிறார்கள்.

2கொரிந்தியர் 4:18 ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.

  • காணப்படாதவைகள் நித்தியமானவைகளாய் இருப்பதினால் தேவ தூதர்களை பூமிக்குரிய கண்களால் நாம் பார்க்க முடியாது.

தேவ தூதர்கள் ஆவிகளாய் இருக்கும் போது நாம் எப்படி பார்க்க முடியும்?

அவர்கள் பூமிக்குரிய சரீரத்தில் வந்தால் தவிரநாம் அவர்களை பார்க்க முடியாது.

தேவ தூதர்கள் பூமிக்குரிய சரீரத்தோடு தான் இந்த பூமிக்கு வந்து இருக்கிறார்கள்.

எபிரேயர் 13:2 அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு.

யார் தேவ தூதர்களை உபசரித்து இருக்கிறார்கள்?

ஆபிரகாம் லோத் போன்றவர்கள் தேவ தூதர்களை உபசரித்து இருக்கிறார்கள்.

அப்படியென்றால் தூதர்கள் எப்படி இவர்களுக்கு தரிசனமானர்கள்?

ஆதியாகமம் 18:1 பின்பு கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத் தரிசனமானார். அவன் பகலின் உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து,

ஆதியாகமம் 18:2 தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைமட்டும் குனிந்து:

ஆதியாகமம்  18:3 ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோகவேண்டாம்.

  • வந்த மூன்று புருஷர்களில் ஒருவர் கர்த்தர் என்று அழைக்கப்பட்டு இருக்கிறார்.
  • மற்ற இரண்டு பேர் தேவ தூதர்கள். 

அவர்கள் ஆபிரகாம் கொடுத்த போஜனத்தை புசித்து குடித்தார்கள்.

ஆதியாகமம் 18:8 ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள்.

வந்த புருஷர்கள்  ஆவியாய் இருப்பார்கள் என்றால் ஆபிரகாம் எப்படி அவர்களை பார்த்து இருக்க முடியும்? அவர்கள் எப்படி புசித்து குடிக்க முடியும்?

வந்த மூன்று புருஷர்களும் பூமிக்குரிய சரீரத்தோடு தான் ஆபிரகாமுக்கு தரிசனமானார்கள்.

நீதிமானாகிய லோத்துவுக்கு பூமிக்குரிய சரீரத்தோடு தான் தரிசனமானார்கள்.

ஆதியாகமம் 19:1 அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள்; லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து:

Gen 19:2 ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டு முகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள்.

வந்த இரண்டு தூதர்களும் அப்பம் புசித்தார்கள்.

ஆதியாகமம் 19:3 அவன் அவர்களை மிகவும் வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன் புளிப்பில்லா அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்தார்கள்.

  • தேவ தூதர்களுக்கு இருப்பது ஆவிக்குரிய சரீரம் அதனால்தான் தங்களுடைய ரூபத்தை அவர்கள் மாம்ச சரீரமாக மாற்றி கொள்ள முடியும்.
  • தேவ தூதர்கள் தேவனால் அனுப்பப்படும் போது பூமிக்குரிய சரீரத்தோடு தான் அவர்கள் தரிசனமாவர்கள். அப்படி அவர்கள்  வராத பட்சத்தில் எந்தவொரு மனிதனும் தேவ தூதர்களை தரிசிக்க முடியாது

அதனால் தான் இயேசுகிறிஸ்து சொல்லுகிறார் அவர்கள் உயிர்த்தெழுதலில் தேவதூதரைப்போல் இருப்பார்கள்.

மத்தேயு 22:30 உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்;

கர்த்தருக்கு சித்தமானால் நாம் எப்படிப்பட்ட சரீரத்தோடு உயிர்த்தெழுவோம் என்பதை கற்றுக் கொள்ளுவோம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME