அறியாத

நான் புசிக்க நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு.

I have food to eat of which you do not know. (John 4:32) Jn4:34; Act20:35; 2Tim4:2; Rev2:17; Job23:12; Ps25:14; Ps63:1-5; Ps119:103; Pr14:121; Pr18:20; Isa53:11; Jer15:16.

அதற்கு அவர்: நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார். (யோவான் 4:32)

யோவான் 4:34; அப்போஸ்தலர் 20:35; 2தீமோத்தேயு 4:2; வெளி 2:17; யோபு 23:12; சங்கீதம் 25:14; சங்கீதம் 63:1-5; சங்கீதம் 119:103; நீதிமொழிகள் 14:121; நீதிமொழிகள் 18:20; ஏசாயா 53:11; எரேமியா 15:16.

நீங்கள் அறியாத போஜனம்:

சீஷர்களால் விளங்கிகொள்ளவியலாத ஒரு போஜனம்.
சீஷர்கள் கொடுக்காத – காணாத ஒரு போஜனம்.
அதனை இயேசு உண்டார்.
இதனை 34 ஆம் வசனத்தில் காணலாம்.

பழைய ஏற்பாட்டில் இஸ்ராயேலர்கள் அறியாத ஒரு உணவு அவர்களுக்கு கிடைத்தது. அதனை மன்னா என்று அழைக்கின்றோம். சங்கீதம் 78:35.

இன்னொரு போஜனத்தை இயேசு கிறிஸ்து வாக்களித்தார். அது கர்த்தருடைய வார்த்தை என்று அறியப்பட்டுள்ளது. மத்தேயு 4:4.

இனியொரு போஜனமும் உண்டு. அது மறைவான மன்னா என்று வாக்களிக்கப்பட்டுள்ளது. வெளி 2:17.

நான்காவதான போஜனமே கர்த்தருடைய சித்தம் செய்வது ஆகும். யோவான் 4:34.

இயேசு கிறிஸ்துவை அறிவதே நித்திய ஜீவன்.
இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளை விளங்கிகொண்டு உட்கிரகிப்பதே மெய்யான உணவு ஆகும்.

இயேசுகிறிஸ்துவின் சரீரம், இரத்தம் உணவாக நமக்கு தரப்பட்டுள்ளது. யோவான் 6;54.

அன்றாட உணவுகளின்றி மனிதன் உயிர்வாழ முடியாது. இந்த உணவுகள் யாவும் உடல் வளர்ச்சிக்கானது.
அவர் வைத்துள்ள உணவை உட்கொள்ளுவதினால் நமது ஆத்துமா வளரும். ஆத்தும புஷ்டியானது அவரின் வார்த்தைகளிலே அடங்கியுள்ளது.

ஆன்மீக ஆகாரத்தினால் ஆத்துமா வளச்சியடைவதினால் ஆவிக்குரிய பெருமை (Pride in Spirit) நீங்கி ஆவிக்குரிய எளிமை (Poor in Spirit) உண்டாகின்றது. கிறிஸ்துவின் குணநலன்கள் பரிணமிக்கின்றன.

கர்த்தருடைய வார்த்தை நமக்கு உண்மையான உணவாக மாறி ருசிக்கவும், புஷ்டியடையவும் வேண்டுமானால் பரிசுத்த ஆவியின் நிறைவு அவசியம்.

தண்ணீரில்லாமல் உணவு பதமாவதில்லை.
பரிசுத்த ஆவியில்லாமல் வசனம் உணவாவதில்லை.

மனிதர்களால், மாம்ச புயங்களால், அறிவு கண்களால் அறியவியலாத மெய்யான போஜனம் கர்த்தருடைய வார்த்தையே.

கர்த்தாவே நாங்கள் உம் வார்த்தைகளை கேட்டு, உணர்ந்து, உடைமையாக்கி கொள்ளும் உன்னதமான அனுபவத்தை எங்களுக்கு தந்திருப்பதற்காக நன்றி. நாங்கள் வார்த்தைகளை மட்டுமல்ல, கிறிஸ்துவாகிய உம் குமாரனையும் எங்கள் அன்றாட போஜனமாக கொண்டு ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற்றமடைய எங்களுக்கு உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME