கிறிஸ்து ஆவிக்குரிய சரீரத்தில் தோமாவுக்கு தரிசனம்
இயேசு கிறிஸ்து வித்தியாசமான ரூபங்களில்சீஷர்களுக்கும் மரியாளுக்கும் தரிசனமானதைக் குறித்து நாம் பார்த்து இருக்கிறோம்.
அநேகர் இயேசு கிறிஸ்துமாம்ச சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்று வாதிடுகிறார்கள்.
மாம்ச சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்பவர்களுக்கு ஒரு கேள்வி கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட போது அவருடைய ரூபம் எப்படி இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?
ஏசாயா 53:2 இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.
- அவர் மாம்ச சரீரத்தில் உயிர்த்தெழுந்து இருப்பார் என்றால் அவர் சரீரம் முழுவதும் தலை முதல் பாதம் வரைஆறாத காயங்கள் தான் இருந்து இருக்கும். மிகவும் பெலவீனமான சரீரத்தோடு தான் இருந்து இருப்பார்.
- இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட போது அவரைப் பார்க்கத்தக்க ரூபம் இல்லை. ஏனென்றால் அவர் வாரினால் அடிக்கப்பட்டு, தலையில் முள் கிரீடம் சூட்டி, கால்களில் கைகளிலும் ஆணிகளால் கடாவப்பட்ட துளைகள் இப்படி சரீரம் முழுவதும் சிதைத்து போன நிலையில் தான் தன் ஜீவனை இயேசு சிலுவையில்விட்டு இருந்தார்.
- அந்த சரீரத்தில் தான் அவர் அடக்கம் பண்ணப்பட்டு இருந்தார் அவர் அந்த மாம்சத்தில் உயிர்த்து எழுந்து இருப்பார் என்றால் அந்த காயங்கள் ஆறாமல் இரணமாக இருந்து இருக்கும்.
இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்களுக்கும் தோமாவுக்கும் காயங்களோடு தரிசனமானார்.
இயேசு கிறிஸ்து கைகளையும், விலாவையும் சீஷர்களுக்கு காண்பித்த போது அதில் துவாரம் இருந்தது அப்படியானால் ஏன் அந்த துவாரத்திலிருந்து இரத்தம் வரவில்லை?
ஏனென்றால் அது ஆவிக்குரிய சரீரமாக இருந்தபடியால் அதில் இரத்தம் வரவில்லை. அதனால் தான் அவரால் துவாரங்களோடு தரிசனமாக முடிந்தது.
யோவான் 20:19 வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
யோவான் 20:20 அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்.
இயேசுகிறிஸ்து தோமாவுக்கு தரிசனமாகும் போது அவருடைய விலாவிலே கையை (விரலையல்ல) போட்டு பார்க்கக்கூடிய அளவுக்கு அந்த விலாவிலே மிகப்பெரிய துவாரம் இருந்தது.
யோவான் 20:25 மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.
யோவான் 20:26 மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
விலாவிலே கையை விடக்கூடிய அளவுக்கு துவாரம் இருக்கும் என்றால் மாம்ச சரீரத்தில் இருக்கக்கூடிய இரத்தம் முழுவதும் வெளியே வந்து இருக்கும், அப்படியென்றால் ஏன் அவருக்கு இரத்தம் வரவில்லை?
ஏனென்றால் அவருடைய சரீரம் ஆவிக்குரிய இருந்தது.
யோவான் 20:27 பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.
இயேசுகிறிஸ்து ஆவிக்குரிய சரீரத்தில் எப்படியெல்லாம் மறுரூபமாக தரிசனமானர்.
- மரியாளுக்கு தோட்டக்காரனைப்போல தரிசனமானர்.
- எம்மாவு சீஷர்களுக்கு அந்நியனைப் (வழிப்போக்கனை) போல வேறொரு ரூபத்தில் தரிசனமானார்.
- தோமாவுக்கும் அப்போஸ்தலர்களுக்கும் சரீரத்தில் காயங்களோடு வேறொரு ரூபத்தில் தரிசனமானார்.
கர்த்தருக்கு சித்தமானால் கிறிஸ்துவின் ஆவிக்குரிய உயிர்த்தெழுதலைக் குறித்து இன்னும் அநேக ஆதாரங்களைக் கற்றுக் கொள்ளுவோம்.