தேவன்

தேவன் அன்பு கூர்ந்தார்.

God so loved the world. (John 3:16)
Deu30:15; Ps2:7; Ps36:7; Ps40:10; Pr8:35; Mt7:11; Mt17:5; Ro5:15; Ro8:32,36-39; 1Cor2:9; 2Cor9:15; Gal2:20; Heb10:39.

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவான் 3:16)

உபாகமம் 30:15; சங்கீதம் 2:7; சங்கீதம் 36:7; சங்கீதம் 40:10; நீதிமொழிகள் 8:35; மத்தேயு 7:11; மத்தேயு 17:5; ரோமர் 5:15; ரோமர் 8:32,36-39; 1கொரிந்தியர் 2:9; 2கொரிந்தியர் 9:15; கலாத்தியர் 2:20; எபிரெயர் 10:39.

தேவ அன்பு:
ஏன் தேவன் மனிதர் மீது அன்பு செலுத்த வேண்டும்?
1. மனிதர் யாவரும் தன்னுடைய சாயலான படைப்பு என்பதினால்.

2. பாவத்தினிமித்தம் மனுக்குலத்தை அழிப்பது அவரின் சித்தமாயிருந்தாலும், அவனை அழிக்காமல் காக்க மாற்று வழி இருந்ததினால். அதுவே அன்பின் வழி.

3. பழைய ஏற்பாட்டில் தேவனின் அன்பு சுருக்கமாகவே காட்டப்பட்டது. புதிய ஏற்பாட்டில் தமது மகிமையான இந்த குணத்தை கிறிஸ்து என்ற Personification த்தினால் காட்ட விரும்பியதால்.

4. சட்டம் கொண்டு எதையும் செய்ய முடியுமென்றாலும், கிருபையின் கரு பொருளாகிய அன்பை கொண்டும் சாதிக்க முடியும் என்று காண்பிக்க.

5. பாவம், சாத்தானால் மனுக்குலம் தீராத வேதனைகளை அனுபவித்ததை கண்டவர் அதை பொறுத்துக் கொள்ள இயலாது சட்டத்தின் செயலை சாத்தான் மீதும், கிருபையின் செயலை மனுக்குலத்தின் மீதும் காண்பிக்க விரும்பியதினால். இதனை கோபத்தின் மறுபக்கம் எனலாம்.

6. தமது பிரமாணத்தின் வலிமையை அறிந்து கொண்ட தேவன், அன்பின் வலிமையையும் அறிந்து கொள்ள விரும்பினார். பிரமாணம் பாவத்தை விளித்து – திறந்து காட்டியது, அன்போ பாவத்தை மூடி போட்டது.

7. பிரிவு எப்படிபட்டது என்று அறிய விரும்பினார். அன்பை கொண்டு பிரிவின் கொடூரத்தை கணக்கிட்டார். மனிதனின் மரணத்தின் கொடுமையை அறிந்து கொள்ளவே தம் மகனை அந்த மரணத்தினூடாக அனுப்பினார். பாவத்தோடு இருந்த பிரிவு இப்பொழுது அன்போடு இணைக்கபடுகிறது. இந்த அன்பை கொண்டிருந்தால் நாம் உலகமெங்கும் புறப்பட்டு போவோம்.

இன்னும் பல காரணங்கள் உண்டு. அவைகளையும் சிந்திப்பீர்.

கர்த்தாவே, உம் அன்பின் ஆழம், அகலம், உயரத்தை கணக்கிட உம் குமாரனின் மரணத்துக்கு ஒப்பான மரணத்துக்குள்ளாகி உம் அன்பை வெளிப்படுத்தி அநேகரை மீட்க பெலன் தருமாறு இறைஞ்சுகின்றேன்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME