என்னைப் பின்பற்றுகிறவன் இருளில் நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்.
He who follows Me shall not walk in darkness, but have the light of life.
(John8:12b)
Jn7:17; Jn12:35,46; Jn10:27; Act3:22; Act26:18; 2Pet2:4; Juda1:6,13; Rev21:24; Job33:28; Ps18:28; Ps49:16-20; Ps97:11; Isa50:10.
மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார். (யோவான் 8:12)
யோவான் 7:17; யோவான் 12:35,46; யோவான் 10:47; அப் 3:22; அப்போஸ்தலர் 26:18; 2பேதுரு 2:4; யூதா 1:6,13; வெளி 21:24; யோபு 33:28; சங்கீதம் 18:28; சங்கீதம் 49:16-20; சங்கீதம் 97:11; ஏசாயா 50:10.
ஜீவ ஒளி அடைவான்:
என்னை பின்பற்றுகிறவன் ஜீவ ஒளியை அடைவான். எனவே அவன் இருளில் நடக்கமாட்டான், இருளில் வாழமாட்டான்.இருளில் பணி செய்யமாட்டான்.
இயேசுவை பின்பற்றுகிறவன் என்றால் அவரின் ஒளியை கொண்டிருப்பவன் என்று பொருளாகும். ஒளியை கொண்டிருப்பவன் என்றால் இயேசுவை ஏற்றுகொண்டும், அவர் வார்த்தைகளை விசுவாசித்தும், அவரின் அற்புத கிரியைகளை நம்பியும் அவர் பாதையிலே நடக்கிறவன் ஆவான்.
மேலும் இயேசுவை பின்பற்றுகிறவன் என்றால் கிறிஸ்தவனாக இருப்பது மட்டுமல்ல இயேசுவை குருவாக கொண்டிருந்து சீஷனாக மாறுகிறவன் என்று பொருளாகும். சீஷனாயிருப்பவனே ஒளியின் தேவை உடையவனாயிருக்கிறான். ஏனென்றால் சீஷனானவன் இருளுக்குள் வாழும் மனுகுலத்தை தேடி செல்கிறவன். அங்கே இவனிடம் ஒளி இருந்தால் மட்டுமே இருளில் என்ன நடக்கிறது என்றும், ஒளியின் தன்மைகளை எடுத்துகூறி இருளில் இருப்போரை ஒளிக்கு கொண்டுவரக்கூடியதை செய்ய இயலும்.
சீஷனாக மாறாத கிறிஸ்தவனுக்கு ஒளி எதற்கு? எந்த ஒளியும் தன்னிலும் ஒளிரும், பிறருக்காகவும் ஒளிரும். அதுபோலவே ஜீவ ஒளி கிறிஸ்தவனிலும் ஒளிர வேண்டும். கிறிஸ்தவன் மூலம் பிறருக்காகவும் ஒளிர வேண்டும்.
இயேசுவை பின்பற்றுகிறவன் பட்டம், பதவி, பொருளாசை, ஐசுவரியம் போன்றவற்றை அவருடைய இராஜ்ஜியத்தின் பணிக்காக பயன்படுத்துவதையே பிரதானமாக கொள்ளுவார். பெரும்பணம் செலவழித்து பெரும் பதவிக்கு வந்து இயேசுவை பிரதிபலிக்க இயலாது.
இயேசுவை பின்பற்றி இயேசுவாக மாறுவோம்.
இயேசுவாக வாழ்ந்து இயேசுவாக மடிவோம்.
கர்த்தாவே உம் மகன் மூலம் ஜீவ ஒளியை பணஒளி, படிப்புஒளி, பதவியயொளி கொண்டு இருட்டடிப்பு செய்யாது வாழ எங்களுக்கு உதவிடும்.