என்னைக்குறித்து நான் கொடுக்கும் சாட்சி உண்மையாயிருக்கிறது

என்னைக்குறித்து நான் கொடுக்கும் சாட்சி உண்மையாயிருக்கிறது

Even if I bear witness of Myself, My witness is true, (John8:13,14)

Num12:3; Neh5:14-19; Pr8:7;  Mt5:37; Jn8:42; Jn10:15,36; Jn14:10; Jn16:28; Jn17:8; Jn18:37; Jn19:9; 2Co11:31; 2Cor12:11,19.

அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக்குறித்து நீயே சாட்சி கொடுக்கிறாய், உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது: ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன், நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறியீர்கள்.
(யோவான் 8:13, 14)

எண்ணாகமம் 12:3; நெகேமியா 5:14-19; நீதிமொழிகள் 8:7; மத் 5:37; யோவான் 8:42; யோவான் 10:15,36; யோவான் 14:10; யோவான் 16:28; யோவான் 17:8; யோவான் 18:37; யோவான் 19:9; 2கொரிந்தியர் 11:31; 2கொரிந்தியர் 12:11,19.

என் சாட்சி உண்மையானது:
  இக்காலத்தில் ஒருவருடைய உண்மையை அவரின் அடையாளங்களை கொண்டு கணக்கிடவியலும். முற்காலத்தில் அவரவரின் வாய்மொழி சாட்சியங்களை கொண்டே கணக்கிடவியலும்.

  இயேசுகிறிஸ்து தனது சாட்சி உண்மையானது என்பதற்கு வெளி ஆதாரங்களையும், உள் ஆதாரங்களையும் காண்பிக்கின்றார். வெளி ஆதாரமாக நான் தேவனால் அனுப்பப்பட்டவன் என்றும், உள் ஆதாரமாக தன் அற்புத கிரியைகளே சாட்சியம் என்றும் அறிவிக்கின்றார்.

   இயேசு தம்மை குறித்து கொடுக்கும் சாட்சி உண்மையுள்ளது என்பதற்கு பிதாவை சாட்சியமாக வைக்கின்றார். இரண்டாவது தன்னையே சாட்சியமாக வைக்கின்றார். தனது சாட்சியத்தை குறித்து அவர் கூறும்போது நான் எங்கேயிருந்து வந்தேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் அறிவேன் என்றார்.

  இயேசுகிறிஸ்துவில் குற்றம் கண்டுபிடிக்கதக்க முயற்சிகள் எழும்பியும் அவரை குற்றவாளியாக தீர்ப்பிட முடியவில்லை. அவரைபோலவே அவருடைய சீஷர்களும் தங்களில் தாங்களே உண்மை சாட்சியம் உடையவர்களாயிருக்கின்றனர்.

  இயேசு கிறிஸ்துவைபோலவே அவரை பின்பற்றுகிறவர்களும் அவர் சேவை செய்கிறவர்களும் குற்றமற்ற சாட்சியம் உடையவர்களாயிருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்.
நாம் நம்மை குறித்து சொல்லுகிறவைகள் உண்மையாயிருக்க வேண்டும்.

  நமது சாட்சியங்கள் முக்கியமானவைகள். வாய்மொழி சாட்சியங்கள் பலராலும் கவனிக்கப்படுகிறது. ஆவியிலே தேவனும் கவனிக்கின்றார்.
நாம் நடப்பதின்படி சொல்லவேண்டும்.நாம் சொல்வதின்படி நடக்க வேண்டும். 

  எல்லாவற்றிற்கும் மேலாக நமது விவிலியமே நம் வாழ்வின் கண்ணாடியாகும். விவிலியம் நம்மை நமக்கும் பிறருக்கும் தேவனுக்கும் படம் பிடித்து காட்டும். மறவாதீர்.

  கர்த்தாவே உம் மகனை தந்து நல்ல சாட்சியங்களை ஏற்படுத்தினீர். அதுபோல நாங்களும் நல்ல சாட்சியங்களை உடையவர்களாயிருக்க உதவிடும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME