சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.

சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.

And the truth shall make you free. (John 8:32)

Jn8:36; Jn17:17; Ro6:14-18,22; Jn8:2,15; 2Coi3:17,18; Gal5:13; 2Tim2:25,26; Jas1:25; Ps119:45; Isa61:1-3.

சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். (யோவான் 8:32) 

யோவான் 8:36; யோவான் 17:17; ரோமர் 6:14-18,22; ரோமர் 8:2,15; 2கொரிந்தியர் 3:17,18; கலாத்தியர் 5:13; 2தீமோத்தேயு 2:25,26; யாக்கோபு 1:25; சங்கீதம் 119:45; ஏசாயா 61:1-3.

விடுதலை சத்தியம்:
  சத்தியத்தை நீ அறிந்துகொண்டால் அது உன்னை விடுதலையாக்கும் என்று இயேசு கூறுகின்றார். இயேசுவே சத்தியம், அவருடைய வசனமே சத்தியம். வார்த்தையாயிருந்தவர் இயேசுவானார். வார்த்தையாகிய இயேசுவை நம்பி ஏற்றுக்கொள்ளும்போது விடுதலை வாழ்வை அடையலாம். இயேசுகிறிஸ்து பாவத்திலிருந்தும், வியாதிகளிலிருந்தும், அடிமைதனங்களிலிருந்தும், ஆபத்துகளிலிருந்தும், மரணத்தினின்றும் விடுதலை தருவதே சத்தியத்தின் விடுதலையாகும். இயேசு நமக்குள் வாழ்வதே சத்தியம் நமக்குள் இருப்பதாகும். இயேசுவுடன் வாழ்வதே சத்திய வாழ்வு ஆகும். இயேசு நம்மை நடத்துவதே சத்தியத்திலே நடப்பதாகும். இயேசு நம்மில் கிரியை செய்வதே சத்திய கிரியை ஆகும். இயேசு நமக்குள் பரிசுத்த ஆவியைக் கொடுப்பதுவே சத்திய ஆவியாகும்.
உபதேசங்கள் சத்தியமல்ல. இயேசு நமக்குள் இருப்பதுவே சத்தியம்.

  இயேசு நமக்குள் இருப்பதினால் உண்டாகும் வாழ்க்கைமுறையே உபதேசம் ஆகும். உபதேசத்தினால் சத்தியம் அல்ல. சத்தியத்தினாலேயே உபதேசம் உண்டாகிறது. கிறிஸ்தவ உபதேசங்கள் எப்பொழுதும் வாழ்க்கைமுறையை அடிப்படையாக்கொண்டே உபதேசிக்கப்படுகின்றன. சத்தியமாகிய இயேசு எனக்குள் இல்லாமல் இந்த வாழ்க்கைமுறையை வாழவும் இயலாது, அதை பிறருக்கு கொடுக்கவும் இயலாது.
அன்பானவர்களே சத்தியமாகிய இயேசு உனக்குள் இருப்பதினால் பாவம் உன்னை மேற்கொள்ளாது, சாத்தான் உன்னை தொடரான், நீ செய்யும் காரியங்கள் வாய்க்கும். கிரமமான வளர்ச்சி உண்டாகும். மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்திடுவாய்.

  கர்த்தாவே உம் சத்தியமாகிய கிறிஸ்துவை எங்களுக்குள் தந்து நாங்கள் விடுதலையோடு வாழ செய்தீரே. உமக்கு நன்றி. பலரை இந்த விடுதலைக்குள் கொண்டுவர மேலும் எங்களுக்கு உதவும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME