சத்தியத்தையும் அறிவீர்கள்.
And you shall know the truth, (John 8:32)
Jn6:45; Jn7:17; Jn14:6; Jn16:13; Mt11:29; Mt13:11,12; 2Tim3:7; Ps25:5,8,9; Ps32:5; Pr1:23,29; Pr2:1-7; Pr4:18; Son1:7,8; Isa2:3; Isa30:21; Isa35:8; Isa54:13; Jer6:16; Jer31:33,34; Hos6:3; Mal4:2.
சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். (யோவான் 8:32)
யோவான் 6:45; யோவான் 7:17; யோவான் 14:6; யோவான் 16:13; மத்தேயு 11:29; மத்தேயு 13:11,12; 2தீமோத்தேயு 3:7; சங்கீதம் 25:5,8,9; சங்கீதம் 32:5; நீதிமொழிகள் 1:23,29; நீதிமொழிகள் 2:1-7; நீதிமொழிகள் 4:18; உன்னதப்பாட்டு 1:7,8; ஏசாயா 2:3; ஏசாயா 30:21; ஏசாயா 35:8; ஏசாயா 54:13; எரேமியா 6:16; எரேமியா 31:33,34; ஓசியா 6:3; மல்கியா 4:2.
சத்திய அறிவு:
விசுவாசமே சத்தியத்தை அறியும் வழி. இயேசுவை கிறிஸ்து என்றும், ஆண்டவர் என்றும், மீட்பர் என்றும் விசுவாசிக்கிற விசுவாசமே சத்தியத்தை அறியும் முறையாகும். சத்தியம் இயேசுகிறிஸ்துவில் வெளிப்பட்டது. இயேசுகிறிஸ்துவே சத்தியமாயிருக்கிறார். இயேசுகிறிஸ்துவை அறிவதும், அவரை ஏற்றுகொள்வதும், அவரை மட்டுமே விசுவாசிப்பதுமே சத்திய அறிவை அடைய வழியாகும்.
சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும் என்பது மண் உடலை பெற்றுள்ளவர்களாகிய நாம் இயேசுகிறிஸ்துவை ஏற்றுகொள்ளும்போது நமக்குள் முளைக்கின்றது என்பதாகும். இது ஏட்டறிவினாலோ, பார்த்தறிவினாலோ, கற்றறிவினாலோ, தொட்டறிவினாலோ, அனுபவித்தறிவினாலோ, யூகித்தறிவினாலோ, பரீட்சித்தறிவினாலோ உண்டாவதல்ல. இது விசுவாசத்தினாலே மாத்திரம் கிடைக்கும் அறிவாகும். இயேசுவை அறிகிற அறிவே சத்தியமாயுள்ளது. இயேசுவுக்கு வெளியே எவ்வித சத்தியமும் இல்லை.
பகுத்தறிவு சத்தியமல்ல, மெய்யறிவு சத்தியமல்ல. இயேசுவை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு அவரை போலாகும்படி நடந்துகொள்வதே சத்தியமாகும்.
இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களுக்குள்ளிருந்து இவ்வுலகாகிய அசத்திய உலகில் சத்தியம் வெளிப்படுகின்றது. இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களுக்கு தேவன் கொடுத்துள்ள அறிவே சத்தியமாகின்றது. அவர்களை பேச்சிலும், செயலிலும் ஜெயிப்பவர் இவ்வுலகில் ஒருவரும் இல்லை.
விசுவாசத்தில் வளருங்கள். சத்தியவான்களாயிருங்கள்.
கர்த்தாவே உமது சத்தியத்தை உம் குமாரன் மூலம் தந்து விசுவாசத்தின் வழியாக எங்களுக்குள் இருக்க செய்தீரே. உமக்கு நன்றி. எங்களில் உம் சத்தியத்தை வெளிபடுத்தி எங்களை சிறந்திருக்க செய்வதற்காய் ஸ்தோத்திரம்.