தேவனுடைய ராஜ்யத்தில் குடிமக்களாய் இருக்கிற நாம் எந்த சட்டத்திட்டங்களை பின்பற்ற வேண்டும்?
தேவனுடைய ராஜ்யத்தில் கிறிஸ்து ராஜாவாக இருக்கிறார் என்றும் அந்த ராஜ்யத்தில் நாம் குடிமக்களாக இருக்கிறோம் என்று பார்த்து இருக்கிறோம்.
இப்போது அந்த ராஜ்யத்திற்கான சட்டத்திட்டங்களைக் குறித்துநாம் கற்றுக் கொள்ளுவோம்.
இந்திய தேசத்தில் குடிமக்களாய் இருக்கிற நாம் எந்த சட்டத்திங்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கிறோம்?
- இந்திய சட்டத்திட்டங்களுக்கா? அல்லது
- அமெரிக்க சட்டத்திட்டங்களுக்கா?
- நாம் இந்திய தேசத்தில் குடிமக்களாய் இருக்கிற நாம் இந்திய சட்டத்திட்டங்களுக்கு தான் கீழ்ப்படிந்து நடக்கிறோம். ஏனென்றால் நாம் இந்திய தேசத்தில் பிறந்து இருக்கிறோம்.
இந்திய குடிமக்களாகிய நாம் இரண்டு தேசத்து (இந்தியா மற்றும் அமெரிக்கா) பிரமாணங்களையும் பின்பற்றமுடியுமா?
நிச்சயமாக முடியாது, எந்ததேசத்தில் இருக்கிறானோஅந்த தேசத்து சட்டத்திட்டங்களை மாத்திரம் அவன் பின்பற்ற வேண்டும்.
Luk 16:13 எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.
தேவனுடைய ராஜ்யத்தில் குடிமக்களாய் இருக்கிற நாம் நியாயப்பிரமாணத்தின் சட்டத்திட்டங்களை பின்பற்றலாமா?
நம்முடைய வேதாகமத்தில் இரண்டு பிரமாணங்கள் (உடன்படிக்கைகள்) இருக்கிறது.
- மோசேயின் நியாயப்பிரமாணம்.
- கிறிஸ்துவின் பிரமாணம்.
மோசேயின் பிரமாணம் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்ட தேச சட்டமாக இருந்தது.
- இஸ்ரவேலர் ஜனங்களுக்கான கட்டளைகள்.
- தேவனுக்காக செய்ய வேண்டிய கட்டளைகள் (ஆராதனை முறைமைகள், பலிகள் போன்றவைகள்.
மோசேயின் நியாயப்பிரமாணம் இஸ்ரவேல் ஜனங்களுக்கு மாத்திரமே கொடுக்கப்பட்டது.
Deu 4:13 நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக் கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து, அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார்.
Deu 4:14 நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளப்போகிற தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளையும் நியாயங்களையும் உங்களுக்குப் போதிக்கவேண்டுமென்று அக்காலத்திலே கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டார்.
மோசேயின் நியாயப்பிரமாண உடன்படிக்கையை முற்பிதாக்களோடு அவர் பண்ணவில்லை.
Deu 5:2 நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஓரேபிலே நம்மோடே உடன்படிக்கைபண்ணினார்.
Deu 5:3 அந்த உடன்படிக்கையைக் கர்த்தர் நம்முடைய பிதாக்களுடன் பண்ணாமல், இந்நாளில் இங்கே உயிரோடிருக்கிற நம்மெல்லாரோடும் பண்ணினார்.
ஒய்வு நாள் உடன்படிக்கையையும் இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேவன் தான் கொடுத்தார்.
Neh 9:13 நீர் சீனாய் மலையிலிறங்கி, வானத்திலிருந்து அவர்களோடே பேசி, அவர்களுக்குச் செம்மையான நீதிநியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர்.
Neh 9:14 உமது பரிசுத்த ஓய்வுநாளை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, உமது தாசனாகிய மோசேயைக்கொண்டு, அவர்களுக்குக் கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயப்பிரமாணங்களையும் கற்பித்தீர்.
Eze 20:12 நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்.
இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தை நாம் பின்பற்ற முடியுமா?
இயேசு கிறிஸ்து இந்த நியாயப்பிரமாணத்தை சிலுவையில் முடித்து அதைகொலைத்து போட்டு விட்டார்.
Col 2:14 நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
Col 2:15 துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.
Heb 8:13 புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது.
இன்றைக்கு நியாயப்பிரமாணத்தின் சட்டத்திட்டங்களை பின்பற்றக்கூடியவர்கள் சாபத்திற்குட்பட்டு இருக்கிறார்கள்.
Gal 3:10 நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்;
கிறிஸ்து நம்மை நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நீங்கலாக்கி நம்மை மீட்டுக் கொண்டார்.
Gal 3:13 ,,,, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.
கிறிஸ்துவின் பிரமாணத்திற்கு உட்பட்டவர்களாய் இருக்கிற நாம் அந்த மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படியும் போது அது ஆவிக்குரிய விபச்சாரமாக இருக்கிறது.
Rom 7:3 ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்; புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால், வேறொரு புருஷனை விவாகம்பண்ணினாலும் விபசாரியல்ல.
Rom 7:4 அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்.
- ஆகையால் தேவனுடைய ராஜ்யத்தில் இருக்கக்கூடிய நாம் மோசேயின் சட்டத்திட்டங்களை பின்பற்றக் கூடாது. அப்படி பின்பற்றுவோம் கிறிஸ்து என்னும் புருஷனை(கிறிஸ்துவின் பிரமாணம்) விட்டு வேறொரு புருஷனை (நியாயப்பிரமாணம்) பின்பற்றும் போது அது விபச்சாரமாக இருக்கிறது.
கர்த்தருக்கு சித்தமானால் தேவனுடைய ராஜ்யத்தில் இருக்கிற நாம் எந்த சட்டத்திட்டங்களை பின்பற்ற வேண்டும் என்பதைக் குறித்து தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம்