எங்கும் பிதாவை தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது.
hour is coming, you will worship the Father everywhere. (John 4:21)
Mt18:20; Mt28:19; Lk17:16; Jn16:32; Act7:49; Eph2:18; Eph3:14f; 1Tim2:8; 1Pet1:17; 1Kin8:13; 2Chr6:2f; Ps45:11; Isa19:21; Isa27:13; Isa56:7; Isa66:1; Eze14:3; Eze20:3; Zep2:11; Mal1;11
அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும்மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது. (யோவான் 4:21)
மத்தேயு 18:20; மத்தேயு 28:19; லூக்கா 17:16; யோவான் 16:32; அப்போஸ்தலர் 7:49; எபேசியர் 2:18; எபேசியர் 3:14f; 1தீமோத்தேயு 2:8; 1 பேதுரு 1:17; 1இராஜாக்கள் 8:13; 2 நாளாகமம் 6:2f; சங்கீதம் 45:11; ஏசாயா 19:21; ஏசாயா 27:13; ஏசாயா 56:7; ஏசாயா 66:1; எசேக்கியேல் 14:3; எசேக்கியேல் 20:3; செப்பனியா 2:11; மல்கியா 1;11.
எங்கும் தொழுகை:
இந்த பூமியில் 7 விதமான தொழுகைகள் காணப்படுகின்றன.
1. சக மனிதரை தொழுதுகொள்ளல்.அதாவது, தாய் தந்தையரை, ஆசிரியரை, பெரியவர்களை .
2. இயற்கையை தொழுதுகொள்ளல்.
3. செத்தவர்களை தொழுதல்.
4. பிற தெய்வங்களை தொழுதல்.
5. இல்லாதவைகளை இருப்பதுபோல் நினைத்து தொழுதல்.
6. தூதர்களை, ஆவிகளை தொழுதல்.
7. படைத்தவரை தொழுதல்.
இந்த முறைகள் யாவற்றிலும் படைத்த தேவனாகிய சிருஷ்டிகரை தொழுகை செய்வதன்றி வேறு எவரையும் – எதையும் தொழுகை செய்வது பாவமாகவே கருதப்படுகின்றது.
தேவன் மட்டுமே தொழுகைக்குரியவர். தொழுகை தேவனுக்குரியது மட்டுமே.
எங்கும் தொழுகை செய்யும் காலம் வரும் என்பது 4 கிரியைகளின் அடிப்படையிலானது.
1. எங்கும் சுவிசேஷம் – இயேசுகிறிஸ்து அறிவிக்கபட வேண்டும்.
2. சத்தியத்தை கொண்டு அவர்கள் சீஷர்களாக்கபட வேண்டும்.
3. இயேசுவின் நாமத்தில் ஒருமனப்பட்டு ஓரிடத்தில் கூடி வரவேண்டும்.
4. கிறிஸ்துவின் வழி வந்தவர்கள் பிதாவாகிய தேவனை தொழுது கொள்ள வேண்டும்.
இந்த அடிப்படையில்தான் எங்கும் பிதாவை தொழுது கொள்ளும் காலம் வரும்.
எங்கும் தொழுதல்….
1. தொழுகை என்பது இடத்தை அடிப்படையாகக் கொண்டது. மனிதர்களை அடிப்படையாக கொண்டதல்ல. அதாவது ஒரு தனி இடம் உண்டாயிருக்கும். ஆனால் பல மனிதர்களின் சங்கமமாயிருக்கும்.
2. தொழுகையானது பிதாவாகிய தேவனை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பரிசுத்த ஆவியின் நிறைவோடு நோக்கி பார்ப்பது.
3. தொழுகையானது தேவனை நோக்கி அவர் நாமத்தை சொல்லிக் கூப்பிடுவது.
4. எங்கும், எப்பொழுதும், எல்லாராலும் தொழுகை செய்வதற்கே தொழுகை இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இடத்தை தொழுகை செய்வதல்ல, இடத்தை ஏற்படுத்திய இறையை தொழுகை செய்ய வேண்டும். அவரே தொழுகைக்குரியவர்.
5. தொழுகை செய்பவரின் உடல் அழுக்காயிருக்கலாம் (எப்பொழுதும் அல்ல), ஆனால், உள்ளம் அழுக்காயிருக்கலாகாது.
6. தொழுகை மீட்பிற்கானதாகும். விடுதலையடைய தொழுகையை தவற விடாதே.
7. சுவிசேஷத்தை அறிவித்து அனேகரை தொழுகைக்கு கொண்டு வராதவர் அல்லது தொழுகை கூடுகையை ஏற்படுத்தாதவர் அவரை தொழுதுகொள்ள லாயக்கற்றவர்.
8. மற்றவர்களை தொழுகைக்கு தூண்டியவர் தானும் தொழுகையில் உயர்வடைந்திருக்க வேண்டும். இல்லையேல் அது பாவமாகும்.
9. எல்லா பகுதிகளிலும் தொழுகை மையங்களை உருவாக்கும்பிதாவாகிய தேவனின் திட்டத்தில் உன்னை உளமாற இணைத்துக்கொள்.
10. பாபேலை கட்டாதே, பாபிலோன் உன்னை அடிமைபடுத்தும். பெரிய தொழுகை மன்றம் கட்ட செலவு செய்யும் பணத்தை பட்டி தொட்டிகளிலெல்லாம் சிறு தொழுகை ஸ்தலங்கள் உருவாக்க பயன்படுத்து.
உனக்கு கொடுத்தவர் தனக்கு கேட்பார்.
கர்த்தாவே, உம் குமாரனாகிய இயேசுவின் இரத்தத்தால் மீட்கபட்டு, பரிசுத்த ஆவியையும் பெற்று தந்தையாம் தேவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே எங்களுக்கு ஆலயம் தந்தீர். நாங்களோ, அதை வியாபார ஸ்தலமாகவும், கள்ளர் குகையாகவும், களியாட்டு ஸ்தலமாகவும் மாற்றிக்கொண்டுள்ளோம். எங்களை மன்னியும். நாங்கள் உம் கட்டளைகளை சுமந்து சென்று பலரை இரட்சிப்புக்குள்ளாக்கி தொழுகை ஸ்தலங்களை எங்கும் எவ்விடத்திலும் ஏற்படுத்த உதவிடும்.