நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது
By this we know that we love the children of God, when we love God and keep His commandments. (1John 5:2)
1John 3:22-24; 1John 4:21; John 13:34,35; John 15:17; Psalms 97:10; Psalms 116:1; Romans 8:28; Romans 12:10.
நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்துகொள்ளுகிறோம். (1 யோவான் 5:2)
1யோவான் 3:22-24; 1யோவான் 4:21; யோவான் 13:34,35; யோவான் 15:17; சங்கீதம் 97:10; சங்கீதம் 116:1; ரோமர் 8:28; ரோமர் 12:10.
என்னில் உள்ள அன்பை நான் அறியமுடியும்.
நமக்கு நாமே சாட்சியமளிக்கவியலாது. ஆனால் உண்மை, சத்தியம், நீதி, நியாயம் போன்ற நற்குணங்களில் வாழ்கிறவனுக்கு அவனே அவனுக்கு சாட்சியமாயிருக்கின்றான் என்பதை அறிந்திருக்கின்றோம். தேவனிடத்தில் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் அன்புகூருகிறவன் நிச்சயமாக அவருடைய கற்பனைகளை கைக்கொள்ளுவான். அவரது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவனுக்குள் உள்ள நிச்சயமே பிறரிடத்தில் அன்பு வைக்கும் சுபாவமாகும். இந்த அறிவு எல்லாரிடத்திலும் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அன்பும் கீழ்படிதலும் உள்ள இருதயத்தில் ஆவியானவர் வாழ்கின்றார். அந்த ஆவியினாலேதான் பிறர்மீது காட்டும் அன்பு தன்னில் உள்ளதை அறிகின்றான். வேறு வழி கிடையாது.
ஒருவன் தான் பிறரில் அன்புகூருகிறேன் என்பதை சில அடையாளங்கள் மூலமாக வெளிபடுத்துகிறான். முதலாவது, அன்பையும் கீழ்படிதலையும் கொண்டிராதவர்களை கடிந்துக் கொள்கிறான். 2 ஆவது உண்மையானவர்களுக்கு உதவி செய்யும்படியான மனதுருக்கத்தைக் கொண்டிருக்கின்றான். உதவி செய்ய முடியாவிட்டாலும் அதற்காய் அதிகமாக ஜெபிக்கிறவனாக இருப்பான். 3 ஆவது உண்மையுள்ளவர்களின் உபத்திரவத்தில் உரிமையோடு பங்கெடுக்க துணிவான். 4 ஆவது தன்னை விடவும் அவர்கள் உயர்ந்து செல்வதை கவனத்தில் கொள்ளமாட்டான். பிறரின் வளர்ச்சி எப்பொழுது நமது மனதிற்குள் வந்ததோ அப்பொழுதே பொறாமை, எரிச்சல், அடங்காமை, கீழ்படியாமை போன்றவைகள் யாவும் வந்து சேரும். 5 ஆவது பிறருக்கு தான் என்ன தவறு செய்தேன் என்பதை குறித்து ஆராய நேரம் செலவழிப்பான். இப்பொழுது சொல்லுங்கள்.. உங்களில் அன்பு இஉள்ளதா?
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்.
நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். 1கொரிந்தியர் 13:4-10.