ஒளியிடம்

ஒளியிடம் வராதவன்.

Practicing evil hates light,does not come to light,lest his deeds should be exposed. (John 3:20)
Jn5:20; Jn7:7; Lk11:45; Jas1:23-25; 1Ki22:8; Job24:13-17; Ps50:17-22; Pr1:29; Pr4:18; Pr5:12-14; Pr15:12; Am5:10,11.

பொல்லாங்கன் தன் கிரியைகள் கண்டிக்கபடாதிருக்க ஒளியிடம் வராதிருக்கிறான். (யோவான் 3:20)

யோவான் 5:20; யோவான் 7:7; லூக்கா 11:45; யாக்கோபு 1:23-25; 1இராஜாக்கள் 22:8; யோபு 24:13-17; சங்கீதம் 50:17-22; நீதிமொழிகள் 1:29; நீதிமொழிகள் 4:18; நீதிமொழிகள் 5:12-14; நீதிமொழிகள் 15:12; ஆமோஸ் 5:10,11.

இங்கே இரு காரணங்கள் தரப்பட்டுள்ளன:

1. அவன் பொல்லாங்கு செய்வதினால் ஒளியினிடம் வராதிருக்கிறான்.
– அவன் அதிலே பிரியபடுகிறான்.
– அதிலிருந்து வெளியே வர முடியவில்லை. அதற்கு அடிமையாகி போனான்.
– ஒளியை குறித்தவைகளை அறிந்துகொள்ளகூடிய உணர்வில்லை. உணர்வற்ற இருதயம்.
– பொல்லாங்குக்காக எந்த விலையையும் கொடுக்க தயாராயிருக்கிறான்.
– தண்டனை குறித்தபயம் இல்லை.

2. தன் கிரியைகள் கண்டிக்கபடாதிருக்க ஒளியினிடம் வராதிருக்கிறான்.
– தான் செய்வது நியாயமே. அதனால் நியாயசங்கம் முன் நிற்க விரும்பவில்லை.
– தானே தீர்ப்பிடுகிறவன், தன்னை தீர்ப்பிடுவதை விரும்பான்.
– இருள் நிறைந்த இடங்களே அவனின் குடியிருப்பு.
– தன் மறைவிட கிரியைகள் ஒருபோதும் ஒளியினிடத்தில் காண்பிக்கபட விரும்பான்.

யோக்கியதையுள்ளவனாய், சன்மார்க்கனாய், அறநெறியாளனாய் இருப்பவன் ஒளியை பகைக்கிறான். இவர்கள் தங்களை தூய்மையாளராக எண்ணிக்கொண்டு, தாங்கள் மட்டுமே தெய்வத்துக்கு அருகானவர்கள் என்று கூறிகொண்டு தங்களை ஒளியில் இருப்பதாக நினைத்து இருளில் வாழ்கிறவர்கள். இவர்கள் தங்கள் மத, சமூக, இன காரியங்கள் மேல் பற்றுள்ளவர்களாயிருப்பதினால் ஒளியை பகைக்கின்றனர்.

தண்டனை, கடிந்து கொள்ளல், தீர்ப்பு, நரகம் போன்றவைகளை குறித்து விரும்பாதவர்கள். அவைகள் இல்லவே இல்லை என்பர். இருந்தாலும் அவை தீண்டதகாதவர்களுக்கானது என்றுக் கூறிக்கொண்டு ஒளியிடம் வராதிருக்கிறான்.

ஒளியிடம் வந்தும் ஒளி தங்களுக்குள் இராதபடிக்கு பார்த்துக் கொள்கின்றனர். வெளி வேஷத்தில் உண்மையுள்ளவர்களைபோல வாழ்கின்றவர்கள்.

அன்பரே…
நீர் ஒளியிலிருக்கிறீரா?
உம்மில் ஒளி இருக்கிறதா?
நீர் ஒளியாக மாறிவிட்டீரா?
நீர் மற்றவர்க்கு ஒளியை கொடுக்கிறீரா?

கர்த்தாவே, ஒளியாக தம் குமாரனை அனுப்பியும் உம் குமாரனை இந்த உலகம் ஏற்றுக்கொள்ளவில்லையே. எவ்வளவு காலம் நீர் பொறுத்திருப்பீர்? உம் கிருபை எத்தனை காலத்துக்கு பின் வெளிப்படும்?ஒளியிடம் வந்த நாங்கள் – ஒளியாக்கபட்ட நாங்கள் பிரத்தியட்சமாய் காணப்பட எங்களுக்கு உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME