மனுஷகுமாரனில் தேவதூதர் ஏறுகிறதையும், இறங்குகிறதையும் இதுமுதல் காண்பீர்கள்.

மனுஷகுமாரனில் தேவதூதர் ஏறுகிறதையும், இறங்குகிறதையும் இதுமுதல் காண்பீர்கள்.

பின்னும் அவர் அவனை நோக்கி:வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 1:51)

ஆதியாகமம் 28:10-17; எசேக்கியேல் 1:1-28; தானியேல் 7:9,10; மத்தேயு 4:11; மாற்கு 1:13; லூக்கா 2:9,13; லூக்கா 22:43; லூக்கா 24:4; அப்போஸ்தலர் 1:10,17; 2தெசலோனிக்கேயர் 1:7,8; 1தீமோத்தேயு 3:16; எபிரெயர் 1:7,13,14; யூதா 1:14,15

இயேசுகிறிஸ்துவுக்கும், தேவதூதர்களின் பணிவிடைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை மேற்கண்ட வாக்கியங்களால் அறியலாம்.

ஒவ்வொருவருக்கும் தேவதூதர்கள் உண்டு என்று கூறுவதை பல தடவைகளில் பல பரிசுத்தவான்கள் கூறுவதை என் சிறுவயதில் கேட்டிருக்கின்றேன். cf மத்தேயு 18:10

பழைய ஏற்பாட்டில் யாக்கோபு கண்ட தரிசனத்தில் ஏணியின் வழியாக தேவதூதர்கள் ஏறி இறங்கினர். ஆதியாகமம் 28.

இங்கோ கிறிஸ்துவில் தேவதூதர்கள் ஏறி இறங்குவதை காணலாம் என்று இயேசுவே கூறுகின்றார்.

இது நமக்கு சில முக்கியமான உண்மைகளை போதிக்கின்றது.

1. இயேசுவே வழி – தேவனிடம் சேரவும், மனிதர் இரட்சிப்படையவும் அவரே ஒரே வழியாக இருக்கின்றார். அப்போஸ்தலர் 4:12; யோவான் 14:6. முகம்மது நபியோ, காக்கோவ் பிலிப்போ, பிரன்காமோ கிடையாது.
2. தேவனுடன் எவ்விதமான தொடர்புகளை மேற்கொள்ளவும் கிறிஸ்துவே தொடர்பகமாக இருக்கிறார். இயேசுவின் நாமமே.வேறு எவர் மூலமாயும் தொடர்பு கொள்ள முடியாது. யோவான் 1:18. மரியாள், பரிசுத்தவான்களாலும் முடியாது.
3. ‘மனுஷகுமாரனிடத்திலிருந்து’ என்பதில் 1 யோவான் 4:3 ன் படி மாம்சத்தில் வந்த கிறிஸ்துவின் மனுஷீகதன்மையை மறுக்கிற எவரும் பிதாவிடம் சேர முடியாது என்றாகிறது.
4. ‘மனுஷகுமாரனிடத்தில்’ என்பதால் கிறிஸ்துவுக்குள் கடந்துவர விருப்பமில்லாத எவரும் பிதாவை பார்க்கவோ, அவர் சத்தம் கேட்கவோ இயலாது. 1கொரிந்தியர் 5:14
5. தேவனோடு நல்ல உறவை – ஆவிக்குரிய உறவை வளர்த்து கொள்வதற்கு இயேசுகிறிஸ்துவின் மனுஷீக வாழ்க்கை மிகவும் முக்கியமானதாகும். 1 யோவான் 2:6

ADD YOUR COMMENT

Powered By Indic IME