தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள்.
If God were your Father, you would love Me, for I proceeded forth and came from God. (John 8:42)
Jn5:23,43; Jn7:28,29; Jn12:49; Jn14:10; Jn15:23,24; Jn16:27,28; Jn17:8,25; 1Cor16:22; Gal4:4,5; 1Jn4:9,10,14; 1Jn5:1,2.
இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன், நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். (யோவான் 8:42)
யோவான் 5:23,43; யோவான் 7:28,29; யோவான் 12:49; யோவான் 14:10; யோவான் 15:23,24; யோவான் 16:27,28; யோவான் 17:8,25; 1கொரிந்தியர் 16:22; கலாத்தியர் 4:4,5; 1யோவான் 4:9,10,14; 1யோவான் 5:1,2.
அன்பாயிருப்பீர்கள்:
நான் அறிவித்த பிதாவும் நாங்கள் சொல்லுகிற பிதாவும் ஒருவராயிருந்தால் என்னை நீங்கள் பகைத்திருக்க மாட்டீர்கள். என்னில் அன்பாயிருந்திருப்பீர்கள்.
இருவரின் பிதாவும் ஒருவராகயிருந்தால் நீங்கள் என்னை பகைப்பதினிமித்தம் பிதாவுக்கு எதிரானவர்களாக மாறுவீர்கள் என்று கூறுகின்றார்.
நீங்கள் கூறும் பிதா வேறு ஒருவராயிருதிருந்தால் நீங்கள் என்னையும், என் பிதாவையும் விசுவாசிக்க வேண்டும், யோவான் 14:1.
நீங்கள் கூறும் பிதாவும் நான் கூறும் பிதாவும் ஒன்றாயிருந்திருந்தால் நீங்கள் சகோதர சிநேகத்துக்கு பதிலாக சகோதர கொலை பாதகர்களாக ஆவீர்கள் என்று தெரிவிக்கின்றார்.
இயேசுவை நம்புவதுதான் அவரை நேசிப்பதாகும். அவரை நேசிப்பதுதான் பிதாவை நேசிப்பதாகும்.
அன்பு பகையைக் கொல்லும். வேறுபாடுகளை அகற்றும். அன்னியோன்னியத்தை பெருக செய்யும். போட்டியை தவிர்க்கும். விட்டுகொடுக்க வைக்கும். தன்னிடம் இருப்பதையே கொடுத்துவிட்டு செல்ல வைக்கும்.
இயேசுவுக்கும் யூதர்களுக்கும் உண்டான பகையே இயேசுவைக் கொலை செய்கிற அளவுக்கு இட்டு சென்றது.
இக்காலத்தில் ஒரே கிறிஸ்துவை, ஒரே ஆவியை பின்பற்றுகிறவர்களுக்குள் போட்டியும், பொறாமையும், பிரிவினையும் மலிந்து உள்ளன. ஒன்றில் இவர்களின் ஆவிக்குள் வேறுபாடு இருக்க வேண்டும், இல்லையெனில் ஒரே ஆவியை பெற்றிருந்தும் சகோதர கொலைபாதகர்களாகின்றனர் என்பதாகும்.
அன்பில் வளர்வோம். பேதமை களைவோம்.
கர்த்தாவே உம் அன்புக்காய் நன்றி. உமகனின் ஆவியை பெற்றும் பொறாமைகளால் நிறைந்து பெலவீனப்பட்டு போகாமல் ஒன்றித்து வாழ உதவி செய்யும்.