ஆண்டவரே, அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும்.
Sir,give me this water,that I may not thirst,nor come here to draw. (John4:15)
Jn6:22-26,34; Rom6:23; Rom8:5; 1Cor2:14; 1Jn5:20; Jas4:3; Ps4:6; Ps16:11; Ps80:3.
அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும்,நான் இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள். (யோவான் 4:15)
யோவான் 6:22-26,34; ரோமர் 6:23; ரோமர் 8:5; 1கொரிந்தியர் 2:14; 1 யோவான் 5:20; யாக்கோபு 4:3; சங்கீதம் 4:6; சங்கீதம் 16:11; சங்கீதம் 80:3.
எனக்கு தரவேண்டும்:
இயேசுவிடம் நமக்குரியதை கேட்பதில் பலவித மனநிலைகள் காணப்படுகின்றன.
ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம் என்பதுபோல இரட்சிக்கபட்ட மனிதர்களும் பலவித மனநிலைகளை கொண்டுள்ளனர். தேவனிடம் கேட்பதில் எத்தகைய மனநிலையை கொண்டுள்ளோம்?
1. கற்றதினிமித்தமோ, படித்ததினிமித்தமோ, சொல்லி கேட்டதினிமித்தமோ நமக்கும் கிடைத்தால் நலமாயிருக்குமே என்ற மனநிலையில் கேட்கின்றனர்.
2. மற்றவர்கள் அடைந்த நன்மைகளின் எழுச்சியை கண்டு தூண்டப்பட்டு கேட்கின்றனர்.
3. கேட்போம், கிடைத்தால் வைத்துக்கொள்வோம், இல்லையெனில் விட்டு விடுவோம் என்ற மனநிலையில் கேட்கின்றனர்.
4. சிலர் சோதிப்பதற்காகவே கேட்கின்றனர். அவர் கொடுக்கக்கூடிய திராணியுள்ளாரா என்று சோதித்தறிய முனைதல்.
5. பேராசையினிமித்தம் பெருமைபட்டுக்கொள்ளும்படி கேட்கின்றனர்.
6. சிலர் பாடுகளை பட்டு அனுபவித்து பின்னர் வேறு வழியின்றி கேட்கின்றனர்.
7. சிலர் பிறர் நன்மைகளுக்காக கேட்கின்றனர்.
8. தங்கள் தேவைகளினிமித்தம் அவரிடம் கேட்கின்றனர்.
9. சிலர் கேட்டவுடனே கிடைக்க வேண்டும் என்ற சுபாவத்தில் கேட்கின்றனர்.
10. சிலர் கடவுள் கொடுக்கிற இடத்தில் இருக்கிறார். மனிதன் வாங்குகிற இடத்தில் இருக்கிறான். எனவே, எவ்வித நிபந்தனையுமின்றி கேட்பதை கொடுத்துதானாக வேண்டும். அவர் கேட்காமலே கொடுப்பதுதான் கடவுளுக்குரிய பெருந்தன்மை என்றும் கூறுகின்றனர்.
11. சிலர் கேட்கவே வேண்டாம். கடவுள் என்றொருவர் இல்லை. எல்லாம் தோன்றுகிறது, மறைகிறது. முயற்சியுடையவர் எல்லாவற்றையும் இப்பூமியில் பெறமுடியும் என்று கூறுகின்றனர்.
12. அவரை நம்பி அவரை சார்ந்து வாழும் அவருடையவர்களுக்கு அவர் யாவையும் தவறாமல் தருகிறார்.
13. சிலர் கெஞ்சியும், சிலர் போராடியும் தான் அவரிடம் பெற்றுக்கொள்ளமுடியும் என்று கூறுகின்றனர்.
நாம் எந்த மனநிலையில் அவரை நெருங்கி அவரிடம் கேட்கிறோம் என்பதை உணர்வோம்.
கர்த்தாவே, நாங்கள் நல்ல மனோபாவத்தில் உம்மிடம் வர்க்கூடிய சிந்தையை தாரும். நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்கு தருவீர். எங்களை வெறுமையாய் அனுப்பிவிடமாட்டீர். நாங்கள் மகிழ்ந்து களிகூரும்படி நாங்கள் கேட்பதையும், கேளாததையும் தருவீர் என்ற விசுவாசம் எங்களிலிருக்க உம் நல்ல ஆவி எங்களை நடத்தட்டும்.