அப்பமே

உலகிற்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம்.

Bread of God is He who comes down from heaven and gives life to the world. (Jn6:33)
Lev8:31-33; Mt26:26; Jn3:31; Jn6:38,48,50,51; Jn8:42; Jn10:10; Jn14:6; Jn16:28; Jn17:8; Ro6:23; 1Cor15:45,47; Eph4:9; 1Tim1:15; 1Jn1:1,2.

வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார். (யோவான் 6:33)

லேவியராகமம் 8:31-33; மத்தேயு 26:26; யோவான் 3:31; யோவான் 6:38,48,50,51; யோவான் 8:42; யோவான் 10:10; யோவான் 14:6; யோவான் 16:28; யோவான் 17:8; ரோமர் 6:23; 1கொரிந்தியர் 15:45,47; எபேசியர் 4:9; 1தீமோத்தேயு 1:15; 1 யோவான் 1:1,2.

தேவன் அருளிய அப்பம்:

இயேசுகிறிஸ்து பிதாவினால் உலகிற்கு அனுப்பப்பட்டவர். அவரை மனிதர்க்கு நித்திய உணவாக அனுப்பினார் பிதா. இந்த நித்திய உணவு மனிதர்கள் கேட்டதினால் அல்ல, மனுக்குலத்தை மீட்கவேண்டும் என்ற இரக்கம், கிருபை, அன்பினால் கொடுத்ததாகும்.
இது வலிய வந்து கொடுக்கப்பட்ட அப்பம்.
ஏற்றுகொள்ளவேண்டுமென்ற கட்டாயம் இல்லை. ஏற்றுகொண்டால் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குள் பிரவேசிக்கலாம்.
இல்லையெனில் ஜீவனைவிட்டு நீங்கி மரணத்துக்குள் பிரவேசிக்கலாம்.

தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவு என்பது தமது குமாரனே. உலகில் காணப்படுகிற – காணப்படாத யாவற்றிலும் மேலான அருட்பெரும் கொடையாகும்.
இயேசு என்ற ஈவுக்கு இயேசுவே இணை. வேறு ஒன்றும் ஈடல்ல.
இயேசுவினால் மீட்கபட்டால்தான் பரிசுத்த ஆவி, வரங்கள், ஆசீர்வாதங்கள். எனவே இவை அனைத்தையும் விட சிறந்த ஈவு இயேசுகிறிஸ்துவே.
இந்த ஈவை பிதா உனக்கும் எனக்கும் தந்துள்ளார்.
நாம் இந்த ஈவை பிறருக்கு இலவசமாக கொடுக்க வேண்டும்.
ஈவை பெற்ற நாம் பிறருக்கு ஈவை கொடுக்காவிட்டால் வேறு எதையும் பிதாவிடமிருந்து பெறவியலாது.
இந்த இயேசுவை பிரசங்கிப்பதே உயரிய கடமை. உயரிய ஈவை பெறுகிறவர்களே உயர்குல மக்களாவர், மற்றோர் யாவரும் இழிகுலத்தோராவர்.
இலவசமாக தேவன் தரும் இந்த ஈவை பெறுகிறவர்கள் மட்டுமே தேவனுடைய மக்களாவர்.
அன்று மட்டுமல்ல, இன்றும் இயேசுவை பிதாவானவர் தமது அடியவர்கள் மூலம் யாவருக்கும் இலவசமாக கொடுக்க விரும்புகிறார்.

இந்த இயேசுவாகிய அப்பத்தை ஆன்மீகத்தில் பசியுற்று, நோயுற்று, மரணவாசலில் கிடப்போருக்கு சுமந்து சென்று உணவூட்ட உன்னை அர்ப்பணிப்பாயா?

தாமதிக்காதே தாமதித்தால்?

கர்த்தாவே உம் மகனை அப்பமாக தந்து என் பசியாற்றி உம் மந்தைக்குள் இணைத்து கொண்டீரே. உமக்கு நன்றி. நாங்கள் இந்த இயேசுவை எங்கள் ஜனங்களுக்கு அனுதினமும் சுமந்து செல்ல எங்களை ஒப்படைக்கிறோம். நீர் எங்களை விட்டு விலகாதிரும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME