இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிறகு மாம்சத்தோடும் எலும்புகளோடும் அப்போஸ்தலர்களுக்கு ஏன் தரிசனமானார்?
இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய சரீரத்தில் தான் எழுந்தார் என்று அநேக வேத வாக்கியங்களை ஆதாரமாக பார்த்து இருக்கிறோம்.
இயேசு கிறிஸ்து எதற்கு நாற்பது நாள் தம்மை உயிரோடு இருக்கிறவராக அநேக தெளிவான ஆதாரங்களோடு (திருஷ்டாந்தங்கள்) காண்பிக்க வேண்டும்?
அப்போஸ்தலர் 1:3 அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி,…. அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.
லாசரு உயிர்த்தெழுந்த போது அவருக்கு அநேக ஆதாரங்கள் தேவைப்படவில்லை. ஏனென்றால் லாசரு உயிர்த்தெழுந்த போது எல்லாரும் விசுவாசித்தார்கள்.
ஆனால் ஏன் இயேசுகிறிஸ்துவுக்கு மாத்திரம் அநேக தெளிவான ஆதாரங்கள் காண்பிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது?
ஏனென்றால் அவர் ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்தபடியால் அவர் அநேக தெளிவான ஆதாரங்கள் மூலம் அதை நிரூபித்தார்.
இயேசுகிறிஸ்து அப்போஸ்தலர்கள் கூடியிருந்த போது அவர்கள் நடுவே வந்து திடீரென்று தரிசனமானார்.
லூக்கா 24:36 இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
இயேசு கிறிஸ்து திடீரென்று தோன்றினபடியால் அவர்கள் ஒரு ஆவியை காண்கிறதாக நினைத்தார்கள்.
லூக்கா 24:37 அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள்.
இயேசுகிறிஸ்து தான் ஆவியில்லை என்பதையும் தனக்கு ஆவிக்குரிய சரீரம் இருப்பதையும் தெளிவாக அவர்களுக்கு காண்பித்தார்.
லூக்கா 24:38 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?
லூக்கா 24:39 நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,
லூக்கா 24:40 தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
மேலும் இயேசு கிறிஸ்து தனக்கு இருக்கக்கூடியது ஆவிக்குரிய சரீரம் என்பதை நிரூபிப்பதற்கு பொரித்த மீன் கண்டத்தையும் தேன் கூட்டு துணிக்கையும் அவர்களுடைய கண்களுக்கு முன்பதாக புசித்தார்.
லூக்கா 24:41 ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்.
லூக்கா 24:42 அப்பொழுது பொரித்த மீன் கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.
லூக்கா 24:43 அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து,
- இயேசுகிறிஸ்து மாம்சத்தோடும் எலும்புகளோடும் வேறொரு ரூபத்தில் தரிசனமானார்.
இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய உயிர்த்தெழுதலை பெறவில்லை என்ன நடந்து இருக்கும்?
1கொரிந்தியர் 15:13 மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே.
1கொரிந்தியர் 15:17 கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்.
1கொரிந்தியர் 15:18 கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே.
1கொரிந்தியர் 15:19 இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
கிறிஸ்து ஆவிக்குரிய உயிர்த்தெழுதலை பெறவில்லையென்றால் நாம் பாவத்தில் இருப்போம்.
1கொரிந்தியர் 15:17 கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்.
ஞானஸ்நானத்தில்அவருடைய ஆவிக்குரிய உயிர்த்தெழுதலின் சாயலில் தான் நாம் இணைக்கப்படுகிறோம். அப்போது தான் நமக்கு பாவ மன்னிப்பு கிடைக்கிறது.
ரோமர் 6:5 ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
இயேசுகிறிஸ்து ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்தபடியால் தான் அவர் உயிர்த்தெழுதலில் முதற்பலனாக இருக்கிறார்.
1கொரிந்தியர் 15:20 கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.
ஆவிக்குரிய சரீரத்தில்அவர் உயிர்த்தெழுந்தபடியால் தான் மரணம் அவரை ஆண்டு கொள்வதில்லை.
ரோமர் 6:9 மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டு கொள்வதில்லை.
நாம் எப்படிப்பட்ட சரீரத்தோடு உயிர்த்தெழுவோம் என்பதை கர்த்தருக்கு சித்தமானால் கற்றுக் கொள்ளுவோம்.