அவர் உயிர்த்தெழுந்தார்.
அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள், அவர் உயிர்த்தெழுந்தார்: அவர் இங்கேயில்லை: இதோ, அவரை வைத்த இடம். (மாற்கு 16:6)
இயேசுகிறிஸ்து அடிக்கடி தாம் சிலுவை சுமப்பதையும், மரிப்பதையும், அடக்கம் செய்யப்படுவதையும், மூன்றாம் நாள் உயிரோடெழுவதையும் கூறியிருந்தார். மத்தேயு 28:6.
அவர் உயிரோடெழும்பியதினால்தான் கிறிஸ்தவம் உலகமெங்கும் பரவியது. அதன் வளர்ச்சியை யாராலும் தடுக்கமுடியாது.
அவரின் உயிர்த்தெழுதல் கூறும் செய்தி என்ன?
- வரலாற்றின் பார்வையில் அவர் உயிர்த்தெழுந்தார். மத்தேயு 28:5-7.
அவர் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உண்டு. சிலவற்றை இங்கே காண்போம்.
- காலியான கல்லறை.
இது இன்றும் உள்ளது. இந்த கல்லறையில் சீஷர்கள் சென்று பார்த்து அவர் இங்கே இல்லை என்றனர். - பார்த்தவர்களின் சாட்சியங்கள்.
மத்தேேயு 28:9 – அவர்கள் கிட்டவந்து அவர் பாதங்களை தழுவி அவரைப் பணிந்துகொண்டனர்.
மத்தேேயு 28:17 – அங்கே அவரைக் கண்டு பணிந்துக் கொண்டார்கள்.
லூக்கா 24:31 – அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு அவரை அறிந்தார்கள். - தரிசனங்கள். 1கொரிந்தியர் 15:3-8 யோவான் 21:1.மறுபடியும் சீஷருக்கு தம்மை வெளிப்படுத்தினார்.
- ஏட்டு ஆதாரங்கள். மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், அப்போஸ்தலர் புத்தகங்கள்.
தேவ ஜனமே நமக்கும் வரலாற்றில் ஒரு உயிர்த்தெழுதல் உண்டு. நாம் மரித்ததை பார்த்த புறஜாதியார் நாம் உயிர்பெற்றெழுந்து இயேசுவோடு இருப்பதையும் காண்பார்கள். மத்தேயு 27:52,53.
- தேவன் அவரை உயிரோடெழுப்பினார்.
அப்போஸ்தலர் 2:24 – தேவன் அவரின் மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து அவரை எழுப்பினார்.
அப்போஸ்தலர் 2:32 – இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்.
அப்போஸ்தலர் 3:15 – அவரை தேவன் மரித்தோரிலிருந்து எழுப்பினார்.
அப்போஸ்தலர் 4:10 – தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவராயிருக்கிற நசரேயனாகிய இயேசு. அப்போஸ்தலர் 13:30.
பிதாவாகிய தேவன் இயேசுவை உயிரோடெழுப்பக் காரணம் என்ன?
- இயேசு பிதாவின் நேச குமாரன். மத்தேயு 3:17; மத்தேயு 17:5 – இவர் என் நேசகுமாரன். இவரில் பிரியமாயிருக்கிறேன். இயேசு பிதாவின் மடியிலிருக்கிறவர். யோவான் 1:18.
பிதாவின் ஒரேபேறான குமாரன் யோவான் 3:16. - பிதாவின் விருப்பத்தை அப்படியே செய்கிறவர். யோவான் 4:34. அவர் சொல்வதே கேட்டும், செய்வதைக் கண்டும் செய்கிறவர்.
இதனால் நீதியை நிறைவேற்றினார். மத்்தேயு 3:15. - இவரைகொண்டு பூலோகத்தை நியாயந்தீர்க்கவிருப்பதினால். அப்போஸ்தலர் 17:31. ஒரு நாளை குறித்திருக்கிறார்.
அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு நியாயந்தீர்ப்பார்.
இயேசு பரலோக சிங்காசனத்தில் உட்கார்ந்து நியாயம் விசாரிப்பார். 1கொரிந்தியர் 4:4.
இயேசுவே தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதி. அப்போஸ்தலர் 10:42.
ஒருநாள் வருகிறது. 2தீமோத்தேயு 4:8.
ஆம் நியாயாதிபதி வாசலருகே நிற்கிறார். யாக்கோபு 5:9ல்.
- இயேசு இராஜாவாக வரப்போகிறார்.
இயேசு அதரிசனமுள்ள இராஜா – 1தீமோத்தேயு 1:7.
இயேசு இராஜாதி இராஜா – 1தீமோத்தேயு 6:15.
இயேசு இராஜாக்களுக்கு அதிபதி – வெளி 1:5.
அவர் எப்படி வருவார்? 2தெசலோனிக்கேயர் 1:8, வெளி 19:11-14.
அவர் சடிதியாய் வருவார். வெளி 16:15.
அவர் சீக்கிரமாய் வரப்போகிறார். வெளி 22:20.
எல்லாருடைய கண்களும் காணும்படி வரப்போகிறார். வெளி 1:7.
நாம் அவருக்கு எதிர்கொண்டு செல்ல ஆயத்தமா?