உம்மை விசுவாசிக்க என்ன அடையாளத்தைக் காண்பிக்கபோகிறீர்?
What sign will You perform then,that we may see it and believe You? (John 6:30)
Jn2:18; Jn12:37; J 20:25-29; Mt12:38,39; Mt16:1-4; Mk8:11; Mk15:32; Lk11:29,30; Act4:30; 1Co1:22; Heb2:4,11-13.
அதற்கு அவர்கள்: அப்படியானால் உம்மை விசுவாசிக்கும்படிக்கு நாங்கள் காணத்தக்கதாக நீர் என்ன அடையாளத்தைக் காண்பிக்கிறீர்? என்னத்தை நடப்பிக்கிறீர்? (யோவான் 6:30)
யோவான் 2:18; யோவான் 12:37; யோவான் 20:25-29; மத்தேயு 12:38,39; மத்தேயு 16:1-4; மாற்கு 8:11; மாற்கு 15:32; லூக்கா 11:29,30; அப்போஸ்தலர் 4:30; 1கொரிந்தியர் 1:22; எபிரெயர் 2:4,11-13.
அடையாளம் தேடும் மனிதன்:
பெற்றதாய் தந்தையரிடம் நீங்களென்னை பெற்றதற்கான அடையாளம் காட்டுங்கள் என்று கேட்பதில்லை.
கற்றுகொடுக்கும் ஆசிரியரிடம் நீங்கள் எனக்கு கற்றுகொடுக்க தகுதியானவரா இல்லையா என்று நிரூபியுங்கள் என்று கேட்பதில்லை.
பொருள் வாங்குவதற்குகூட சோதித்துபார்க்க விரும்புவதில்லை. manu வை பார்த்து புரிந்துகொள்கிறோம்.
கொடுக்கும் உணவைகூட சோதித்துபார்த்து உண்பதில்லை.
மணம்புரியும் மணமக்களைகூட சோதித்துபார்த்து மணம் புரிவதில்லை.
ஆனால்,
எல்லாம் படைத்தவர், ஆண்டு நடத்துகிறவர், தீமைகளிலும் நன்மை விளங்க செய்கிறவர், ஜீவன் தருகிறவர், நித்திய ஜீவகரை சேர்ப்பவர், ஆத்தும நேசர் ஆகிய அவரை நம்புவதற்கும், பின்பற்றுவதற்கும் அடையாளம் தேடுகிறோம்.
ஏன் இந்த முரண்பாடு?
தேவனின் செயல்பாட்டுக்கு எதிரான போலிமுகத்தான் துவக்கத்திலிருந்தே செயல்பட்டு மனித இருதயத்தை வஞ்சித்து, மனித சிந்தையை கெடுத்து, மனித அககண்களை குருடாக்கி விட்டான்.
உண்மை எது? போலி எது? என்று கண்டுபிடிக்க முடியாதபடிக்கு உண்மையைபோலவே போலியை உருவாக்கி வைத்துள்ளான் சாத்தான். சத்தியத்தைபோலவே அசத்தியத்தை உருவாக்கியுள்ளான்.
கள்ளதனத்தை நல்லதனம் கொண்டு கவரிங் பண்ணியுள்ளான்.
மனிதன் கண்டுபிடிக்க முடியாதபடிக்கு எல்லாவற்றையும் ஞானமாய் செய்துள்ளான்.
ஆனாலும், தேவனிடமிருந்து வரும் சத்திய ஒளி, நித்திய ஒளி எல்லா போலிகளையும் வெளிச்சம்போட்டு காட்டி உண்மையை பின்பற்ற உதவுகிறது.
அப்படியிருந்தும் இன்றும் நாம் அடையாளம் தேடுவோமெனில் எரிகிற சூளையே வைக்கப்பட்டுள்ளது என்பதை மறவாதீர்.
முரட்டுகுணம் அடையாளம் கேட்கிறது. அதிகபடிப்பு அடையாளம் தேடுகிறது.
அடையாளம் தேடி இன்றுவரையிலும் தேவாலயம் இல்லாமல் வாழ்கின்ற யூதர்களை போல இராமல்
சொன்னதை நம்பு.
காட்டியதை நம்பு.
நடக்கபோகிறதை நம்பு.
அதுவே உனக்கு தெம்பு.
கர்த்தாவே, நாங்கள் நம்பதக்க பெரிய நல்ல அடையாளமாக உம் மகனை தந்துள்ளீர். இதைவிடவும் பெரிய அடையாளம் தேவையில்லை. அப்படியிருந்தும் இன்னும் அடையாளம் கேட்கிறவர்களுக்கு உமது குமாரனின் இராஜரீக வருகையே அடையாளமாகயிருந்து உம் கிரியையை நடத்த தீவிரித்து எழும்பும்.