இரட்சிப்பு
It is good that one should hope and wait quietly For the salvation of the Lord. (Lam3:26)
Ezr4:14; Ps3:8; Ps35:3; Isa51:5; Lk19:9; Act4:12; Act14:9; Ro1:16; Ro10:10; Phil2:12; 2Pet3:15; Rev7:10; Rev12:10; Rev19:1.
கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருப்பது நல்லது. (புலம்பல் 3:26)
எஸ்றா 4:14; சங்கீதம் 3:8; சங்கீதம் 35:3; ஏசாயா 51:5; லூக்கா 19:9; அப்போஸ்தலர் 4:12; அப்போஸ்தலர் 14:9; ரோமர் 1:16; ரோமர் 10:10; பிலிப்பியர் 2:12; 2 பேதுரு 3:15; வெளி 7:10; வெளி 12:10; வெளி 19:1.
யோவான் 4:22 ல் இரட்சிப்பு என்பது 4 பொருள்களை கொண்டதாக தரப்பட்டுள்ளது.
deliverance, preservation, safety, salvation என்பதாகும்.
இரட்சிப்பில் 3 நிலைகள் உண்டு:
1. கடந்தகால நிகழ்வுகளில் உண்டான இரட்சிப்பு.
2. அது நிகழ்கால வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம்.
3. வருங்காலத்தில் நிலை நிறுத்தப்படப்போகும் தேவனுடைய இராஜ்ஜிய விரிவாக்கம்.
இரட்சிப்பானது 9 வகையாக அல்லது 9 முறையில் உருவேற்படுத்தபட்டுள்ளதை நமது விவிலியத்தில் காண முடியும்.
1. வசனத்தினால் உண்டான மீட்பு. வார்த்தையை அனுப்பி மீட்கிறார்.
2. அவரின் பிரசன்னத்தினால் உண்டான மீட்பு. அவர் சமுகம் முன் செல்லும்.
3. கரங்களினால் – புயத்தினால் உண்டான மீட்பு. அவரின் கரம் குறுகி போகவில்லை.
4. ஆவியினால் உண்டான மீட்பு. ஆவி எங்கேயோ அங்கே விடுதலை.
5. மிருக இரத்தத்தால் மீட்டார். பலியாடுகளின் இரத்தம் பாவங்களை மன்னித்தது.
6. தூதர்களை கொண்டு மீட்டார். அவர் சமுகத்தின் தூதனானவர்.
7. இயேசுவால் மீட்கபட்டனர். அவரின் வார்த்தை, வல்லமை, தொடுதல், தூக்கி விடுதலால்.
8. இயேசுவின் இரத்தத்தினால் மீட்பு. இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி இரட்சிக்கும்.
9. விசுவாசத்தினால் மீட்கிறார். முன்சொல்லப்பட்ட 8 வகைகளையும் விசுவாசிக்கும்போது கிறிஸ்துவின் இரத்தம் அவனை தூய்மையாக்கும்.
இரட்சிப்பின் 3 கிரியைகள்:
1. நமது ஆவியில் உண்டான விழிப்புணர்வு. தேவனுடைய ஆவியோடு இணைந்து கொள்ளுதல்.
2. நமது ஆத்துமாவில் உண்டாகும் மீட்பு. ஆவியின் செயல்பாட்டால் வசனத்தை கேட்கிறோம். விசுவாசம் உண்டாகிறது. விசுவாசத்தினால் ஆத்துமா ஆவியின் கட்டுபாட்டில் வருகிறது.
3. நமது சரீரத்தில் உண்டாகும் மாற்றம். மண்ணின் சாயலாக – மிருக சாயலாக காணப்பட்ட சரீரம் ஆத்துமாவில் உண்டான மாற்றத்தினால் மறுரூப நிலைக்கு நேராக பயணிக்கின்றது. கிறிஸ்துவின் சாயலாக காட்சியளிக்கின்றது.
இந்த மாற்றம் உங்களில் இருக்குமானால் அதுவே உண்மையான இரட்சிப்பு.
கர்த்தாவே, எங்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகியவற்றை மீட்டெடுத்து உம் பிள்ளைகளாகவும், ஆசாரியர்களாகவும் மாற்றினீர். எங்கள் மூலம் உம் இரட்சிப்பை உலகிற்குள், மாம்சத்திற்குள், இருளுக்குள் அனுப்ப எங்களை ஒப்பு கொடுக்கின்றோம். நாங்கள் உண்மையுள்ள சாட்சிகளாக இருந்து உமக்கு செம்மையான பணி செய்ய எங்களுக்கு உதவும்.