இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்.

இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்.

Whoever believes that Jesus is the Christ is born of God, (1John 5:1)

1John 2:22,23; 1John 4:2,14,15; Matthew 16:16; John 1:12,13; John 6:69; Acts 8:37; Romans 10:9,10.

இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான். பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான். (1 யோவான் 5:1)

1யோவான் 2:22,23; 1யோவான் 4:2,14,15; மத்தேயு 16:16; யோவான் 1:12,13; யோவான் 6:69; அப்போஸ்தலர் 8:37; ரோமர் 10:9,10.

இயேசுவே கிறிஸ்து.

இயேசு இஸ்ராயேலர்களின் யூதா கோத்திரத்தில் தாவீதின் குமாரனாக பிறந்தவர். இயேசுவின் பிறப்பும் கன்னிபிறப்பாகவே காணப்படுகின்றது. இயேசுவின் பிறப்பில் நடந்த நிகழ்வுகளெல்லாம் அதிசயமானவைகளாகவும், அடையாளங்களாகவும் அறியப்படுகின்றது. இவைகளை கவனிக்கும்போது இயேசு ஒரு சாதாரண யூதனாக – இஸ்ராயேலனாக இருந்தார் என்று ஒத்துக்கொள்ள முடியாது. இயேசுவை சுற்றி நடந்த நிகழ்வுகள் ரகசியமானவைகளாகவோ, மனித சஞ்சாரமில்லாத இடங்களில் நடந்தவைகளாகவோ கருத முடியாது. அக்காலத்தில் அப்பகுதிகளில் வாழ்நதவர்களிடையில் இந்நிகழ்வுகள் பரசியமாயிருந்திருக்க வேண்டும். இயேசுவை கிறிஸ்துவோடு இணைத்து சிந்திக்கின்ற வழக்குகள் அவரின் பிறப்பின் நிகழ்வுகளிலிருந்தே ஆரம்பமாயிருந்திருக்க வேண்டும். நமக்கு ஆதாரங்கள் இல்லையென்பதினால் நிகழ்வுகளை இருட்டடிப்பு செய்ய இயலாது. இயேசுவே கிறிஸ்து என்ற உணர்வுகள் அக்காலத்தில் அப்பகுதிகளில் கண்டிப்பாக காணப்பட்டது என்பதில் சந்தேகமில்லை.

இயேசு திருமுழுக்கு பெற்று தேவனின் பணியை வெளிப்படையாக செய்ய ஆரம்பித்துவுடனேயே இயேசுவை கிறிஸ்து என்று உரக்க பேச ஆரம்பித்தார்கள். உணர்வுகளிலிருந்த சப்தம் இப்பொழுது பெருந்தொனியாக எழும்ப ஆரம்பித்தது. இஸ்ராயேல் சமுதாயத்தின் பெரிய மனிதர்கள் இவைகளை அறிந்திருந்தாலும் பிசாசானவனின் கிரியைகளினிமித்தம் உணர்வை இழந்தவர்களாய் குரலை அடக்க முனைந்தனர். ஆனால் சாமானிய மக்களின் உள்ளத்தின் எழுச்சியை பிசாசானவானால் மட்டுபடுத்த முடியவில்லை. இதே எழுச்சி இயேசு மரித்து உயிர்த்தெழுந்தபின்பு இந்த சாமான்யர்களிடையிலிருந்து வந்த சீஷர்களின் – பறைசாற்றுதல் மூலம் மேலும் விரிவடைந்தது. அதாவது உணர்வுகளின் எழுச்சியை பயமில்லாது பறைசாற்றும்படியாக பரிசுத்த ஆவியை தேவன் அருளினார். ஆவியினால் இயேசுவே கிறிஸ்து என்று அறிக்கையிட ஆரம்பித்தனர்.

பரிசுத்த ஆவியின் தூண்டுதலினாலும் ஏவுதலினாலும் சாமானியர்கள் பலசாலிகளாகவும் ஞானிகளாகவும் பலத்த கிரியைகளை நடப்பிக்கிறவர்களாகவும் வெளிப்பட்டு இயேசுவே கிறிஸ்து என்று பகிரங்கமாக அறிவித்தனர். சிறைகளோ, உபத்திரவமோ, பட்டினியோ, மரணமோ எதுவானாலும் இவர்களின் குரலை மட்டுபடுத்த முடியவில்லை. இந்த எழுச்சி திருச்சபை உருவாக்கங்களாகவும், நூல் எழுத்தேடுகளாகவும் வெளிப்பட்டு உலகமெங்கும் பரவலாயிற்று. இந்த குரலை அன்று யூத பெரியமனிதர்களால் அடக்க முடியாததுபோல இக்கால பெரிய சமுதாயத்தாலும் அடக்கவியலாது.

நமக்கு இயேசுவே கிறிஸ்துவாகவும், ஆண்டவராகவும், மீட்பராகவும் இருக்கிறார். மீட்பராக இருந்து இரட்சிக்கிறார். கிறிஸ்துவாக இருந்து நம்மை காக்கிறார். ஆண்டவராயிருந்து நம்மை பிதாவிடம் கொண்டு சேர்க்கிறார். ஆகையினால் இயேசுவை கிறிஸ்துவென்று அழைப்பதைவிடவும் இயேசுவே கிறிஸ்து என்ற தொனியில் தொடர்ந்து கூப்பிடுவோமாக.

அவனுடைய தாய்தகப்பன்மார் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச்சொன்னார்கள். ஏனெனில் இயேசுவைக் கிறிஸ்து என்று எவனாவது அறிக்கைப்பண்ணினால் அவனை ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கவேண்டுமென்று யூதர்கள் அதற்குமுன்னமே கட்டுப்பாடு செய்திருந்தார்கள். யோவான் 9:22..

நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்அப்போஸ்தலர் 2:36..

மக்கெதோனியாவிலிருந்து சீலாவும் தீமோத்தேயும் வந்தபோது, பவுல் ஆவியில் வைராக்கியங்கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினான். அப்போஸ்தலர் 18:5.

ADD YOUR COMMENT

Powered By Indic IME