மலையிலே

இந்த மலையிலே எருசலேமிலே தொழுது கொள்ள வேண்டும்.

Our fathers worshiped on this mountain,you Jews in Jerusalem for worship. (John 4:20)
Gen12:6-8; Gen33:18-20; Deu12:5-11; Deu27:12; Jos8:33-35; Jud9:6,7; 1Ki9:3; 2Ki17:26-33; 1Chr21:26; 1Chr22:1; 2Ch6:6; 2Ch7:12,16; Ps78:67,68; Ps87:1,2; Ps132:13.

எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்: நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள். (யோவான் 4:20)

ஆதியாகமம் 12:6-8; ஆதியாகமம் 33:18-20; உபாகமம் 12:5-11; உபாகமம் 27:12; யோசுவா 8:33-35; நியாயாதிபதிகள் 9:6,7; 1இராஜாக்கள் 9:3; 2 இராஜாக்கள் 17:26-33; 1 நாளாகமம் 21:26; 1 நாளாகமம் 22:1; 2நாளாகமம் 6:6; 2நாளாகமம் 7:12,16; சங்கீதம் 78:67,68; சங்கீதம் 87:1,2; சங்கீதம் 132:13.

பிதாக்களின் தொழுது கொள்ளல்:

இந்த சமாரியபெண்ணின் இனத்தாரும், இயேசு கிறிஸ்துவின் இனத்தாரும் தங்கள் தங்கள் பிதாக்களின் முறைமைகளையே பின்பற்றி தேவனை தொழுது கொண்டு வந்தனர். அதனையே இவள் பிரதிபலிக்கின்றாள்.

1. கிறிஸ்தவ முறைமைகளுக்கான பின்னணியம் கிரேக்க சமயமோ, பாபிலோனிய சமயமோ, எகிப்திய சமயமோ, இந்து சமயமோ அல்ல, யூத பாரம்பரிய முறைமைகளே. இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு பழைய ஏற்பாட்டை நன்றாக அறிந்திருக்க வேண்டும்.

2. இயேசு கிறிஸ்து யூத சமய அனுச்சாரங்களை உண்மையாய் பின்பற்றிய நல்ல யூத பின்னணியத்தை கொண்டிருந்தார்.

3. அவருடைய உபதேசங்கள், உரைகள் யாவும் யூத திருமறையை மையமாகக் கொண்டு பரலோக செய்திகளாக காணப்பட்டன.

4. தொழுகை சார்ந்த யாவும் யூத சமயத்திலிருந்தே கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், சில மாற்றங்கள் செய்யப்பட்டு நடைமுறைபடுத்தபட்டிருக்கின்றன. எவ்விதமான பிற சமய தொழுகை சார்ந்தவைகளையும் கிறிஸ்தவ ஒழுங்கில் இணைப்பது தகாது.

5. பிதாக்களின் உண்மையான தொழுகைதான் சந்ததிகளின் எழுச்சியாகும்.
பிதாக்கள் தேவனை தொழுது கொள்ளுவதில் இணக்கமற்று இருப்பார்களெனில் பிள்ளைகளின் ஆவிக்குரிய வளர்ச்சியில் கலப்புகள் உண்டாகும்.

6. தொழுகையில் சகலமும் ஒழுங்கும் கிரமுமாக இருப்பதையே தேவன் விரும்புகிறார். காலம், நேரம், இடம், முறைமை முக்கியமானது.

7. தொழுகை மாறுதலுக்குரியதானதல்ல, தேவனின் வழுவாதன்மையை வெளிப்படுத்துவதற்கானது.

8. உண்மையான தொழுகையே தேவனின் வெளிப்படுதலை நிச்சயபடுத்துகின்றது.

9. தொழுகையின் இடங்கள் அழிக்கப்படுவதும், அவமதிக்கப்படுவதும் தொழுகை செய்த மக்களின் தவறான தொழுகைகளின் வெளிப்பாடே. இதனை சங்கீதங்களில் காணலாம்.

கர்த்தாவே, நாங்கள் உம்மை மனதார தொழுகை செய்து உம்மை மகிமைபடுத்தி நாங்கள் ஆசீர்வதிக்கபடவே எங்கள் முன்னோர்களால் கற்பிக்கப்பட்டோம். நாங்களோ எங்கள் இஷ்டபடியான முறைமைகளை உருவாக்கி உம் வெளிப்படுதல்களை மட்டுபடுத்தி விட்டோம். எங்களை மன்னியும். நாங்கள் உம்மிலே சார்ந்து நீர் விரும்பும் எளிமையான – செம்மையான தொழுகைகளை ஏற்படுத்த உதவிடும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME