ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்.
The woman said to Him,Sir,I perceive that You are a prophet. (John 4:19)
Jn4:16-19; Jn6:14; Jn7:40; Jn9:17; Jn15:15; Lk7:16,39; Lk24:19; 1Cor14:24,25; 2Ki5:26; 2Ki6:12.
அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். (யோவான் 4:19)
யோவா4:16-19; யோவான் 6:14; யோவான் 7:40; யோவான் 9:17; யோவான் 15:15; லூக்கா 7:16,39; லூக்கா 24:19; 1கொரிந்தியர் 14:24,25; 2 இராஜாக்கள் 5:26; 2இராஜாக்கள் 6:12.
காண்கிறேன்:
சமாரியா பெண், இயேசுவை யாக்கோபை விடவும் பெரியவராக கண்டவள், இப்பொழுது அவரை தீர்க்கதரிசியாக காண்கிறாள்.
1. அவள் எதன் அடிப்படையில் இயேசுவை தீர்க்கதரிசியாக கண்டாள்? சமாரியா மக்கள் இவளின் வாழ்வை குறித்து அறிவார்கள். இயேசுகிறிஸ்து ஒரு யூதனாயிருக்க, சமாரியா பெண்ணை குறித்து அறிந்திருக்கவில்லை. முன்பின் அறியப்படாத ஒருவரின் அந்தரங்க வாழ்வில் மறைவானவைகளை குறித்து தீர்க்கதரிசியால் மட்டுமே கூற முடியும் என்று நம்பி அவரை தீர்க்கதரிசி என்றாள்.
2. தீர்க்கதரிசி குறித்த அறிவு அவளுக்கு இருந்தும் இந்த பாவ காரியத்தை அவள் துணிகரமாய் செய்தது எதனை குறிப்பிடுகின்றது? அவள் நியாயபிரமாண முறைப்படிதான் செய்தாள் என்று சிலர் கூறுவதை ஏற்க முடியாது. அவளின் தொடர்புகளை குறித்த காரியங்கள் அவளை ஒரு பாவியாகவே காட்டுகிறது. தான் செய்யும் பாவத்தை சுட்டி காட்ட தேவன் தமது தீர்க்கதரிசியை அனுப்புவார் என்று அறிந்தும் இப்பாவத்தை செய்வது துணிகரமே. இது தெய்வபயமற்ற செயலின் வெளிப்பாடு.
3. இயேசுகிறிஸ்து ஒரு தீர்க்கதரிசி.
எவ்விதம் நாம் இவ்வாறு கூறமுடியும்?
இக்கூற்றுகள் தற்கால தீர்க்கதரிசிகளை அடையாளம் காண நல்ல பாடம்.
– வாழ்வை உருவாக்கினவர் வாழ்வின் மறைவானவைகளை வெளிபடுத்துகிறார்.
– இருதயத்தில் உணர்த்தபட்டும் உணர்வற்று இருதயத்துக்குள் மறைந்துள்ள பாவங்களை , அக்கிரமங்களை வெளிபடுத்துகிறார்.
– தவறுகளை கண்டித்து உணர்த்தவும் தயங்குவதில்லை. தனக்கு வரும் பின் விளைவுகளையும் குறித்து சிந்திப்பதில்லை. கடிந்து கொள்கின்றார்.
– பாவங்களை விட்டு மனந்திரும்பினால் பரலோக பாக்கியமும்,மனந்திரும்பாவிட்டால் எரிநரகமுமே என்று சுட்டி காட்டுகின்றார்.
– சாத்தானின் ஆழங்களை, எதிரான சதி ஆலோசனைகளை – வஞ்சகத்தை முன் அறிகின்றார்.
– தன்னை அனுப்பினவரின் பிரதிநிதியாக மட்டுமே செயல்படுவார்.
– இயேசு தேவனின் செய்தியை மனிதர்க்கு கொண்டுவந்த – தேவனின் இருதயத்தை மனிதர்க்கு படம்பிடித்து காண்பித்த உண்மை தீர்க்கதரிசி.
கர்த்தாவே, நாங்கள் உம்மை தீர்க்கதரிசியாக அறிந்தும், நம்பியும் உமக்கும் பயப்படும் பயமில்லாது முரட்டாட்டமாய் வாழ்கின்றோம். எங்களை மன்னியும். நாங்கள் தேவரீர் உம் கிரியைகளை அறிந்து – உமக்கு பயந்து உம் வழியில் நடக்க உதவும். மற்றவர்களையும் அவ்வழி நடத்த உதவும்.