இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக.

இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக.

Lord;You know that I love You.He said to him,Tend My sheep. (John 21:16)

John 10:11-16,26,27; Matthew 25:32; Luke15:3-7; Luke 19:10; Acts 20:28; Hebrews 13:20; 1Peter 2:25; Psalms 95:7; Psalms 100:3; Zechariah 13:7.

இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்;:என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். (யோவான் 21:16)

யோவான் 10:11-16,26,27; மத்தேயு 25:32; லூக்கா 15:3-7; லூக்கா 19:10; அப்போஸ்தலர் 20:28; எபிரெயர் 13:20; 1பேதுரு 2:25; சங்கீதம் 95:7; சங்கீதம் 100:3; சகரியா 13:7.

இயேசு கிறிஸ்துவின் ஆடுகள்:
யோவான் 17 ஆம் அதிகாரத்தை படிக்கும்போது நீர் எனக்கு தந்தவர்கள் என்று இயேசு தமது தந்தையை பார்த்து கூறுகின்றதை நாம் அறிவோம். பாவத்தினிமித்தம் தேவனுடைய தொழுவத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட ஆடுகளாகிய மனுகுலத்தை மீட்கும் பொறுப்பை தமது குமாரனிடம் தந்தார். பூமியில் ஒருவருமில்லை என்று கண்டு, இஸ்ராயேலரிலும் ஒருவரும் இல்லையென்று கண்டு தமது குமாரனிடம் இந்த பொறுப்பைக் கொடுத்தார்.

மீட்கப்படுகிறவர்களையும் இயேசுவுக்கே கொடுத்தார். இயேசுவின் அடியவர்களையும் அவருக்கு பிதாவே கொடுத்தார். இதினிமித்தம் உலகமும் அதன் குடிகளும் கிறிஸ்துவினுடைய காணியாட்சிக்குள் வரவேண்டும் என்ற நியமம் உண்டாயிற்று. மீட்கப்படுகிறவர்களை தமது சரீரத்தின் உறுப்பாகவும், தமது சரீரத்தை சபையாகவும் வெளிப்படுத்தினார். இவ்விதம் பிதாவினால் கிறிஸ்துவுக்கென்று கொடுக்கப்பட்டவர்களே எல்லா சபையாரும். 

நமது பழக்கதோஷத்தினிமித்தமோ அல்லது முன்னோர்களின் உபதேசங்களினிமித்தமோ கிறிஸ்துவின் மக்களாகிய அவருடைய மந்தைக்குட்பட்ட ஆடுகளை என் சபை, என் மக்கள், என் ஊழியம் என்று அழைக்கின்றோம். நான் இன்றுவரையிலும் என் கையில் தரப்பட்டுள்ள ஊழியத்தை, மக்களை என்னுடையவர்கள் என்று உரிமை பாராட்டியதில்லை. தேவன் என்னிடம் தந்துள்ள அவருடைய சபை என்றே கூறுகின்றேன். இது கிறிஸ்துவின் இரத்தத்தினால் சம்பாதிக்கப்பட்ட சபையாகும். ஆடுகள் கிறிஸ்துவினுடையவர்கள். மேய்ப்பர்கள் அவருடையவர்கள். அவருடைய மேய்ப்பர்கள் அவரின் ஆடுகளை கொடுக்கப்பட்டுள்ள காலம் வரையிலும் செம்மையாக மேய்த்து அடுத்த தலைமையிடம் ஒப்படைக்க வேண்டும். ஆடுகளினால் உண்டாகும் பலன்கள் யாவும் மேய்ப்பவர்களுக்கு சொந்தமாகும். ஆடுகள் கிறிஸ்துவுக்கு சொந்தமாகும். நான் வியர்வை சிந்தி, கஷ்டபட்டு, உபவாசித்து, பசியிலும் பட்டினியிலும் இருந்து  உழைக்க அவர் எனக்கு கட்டளையிட்டார். எனக்கு உழைக்கும்படியாக பெலன் தந்தார். ஊழியம் செய்ய ஞானம், வரங்கள், தாலந்துகள், திறமைகள் தந்தார். நான் அவரிடமிருந்து வாங்கி அவருக்காய் உழைத்தேன்.

உழைப்பின் கூலியை எனக்கு தந்தார். ஆடுகளை அவர் எடுத்துக்கொண்டார். அவர் தமது ஆடுகளை என்னிடம் கொடுத்துவிட்டு இப்பொழுது ஓய்வெடு என்று கூறும்போது நான் அங்கே அதே சபையில் ஒரு நல்ல விசுவாசியாய் அமர வேண்டும். நான் என்ன செய்ய முடியும்? என் கைக்குட்பட்ட அவரின் ஆடுகள். நான் உரிமையாளர் இல்லை. நான் வேலைகாரன் அவ்வளவே…. 

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இதோ, நான் மேய்ப்பருக்கு விரோதமாக வந்து, என் ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர் இனித் தங்களையே மேய்க்காதபடி மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என் ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாயிராதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் தப்பப்பண்ணுவேன் என்று சொல்லு. கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன். ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன் ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன் மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என் ஆடுகளைத் தேடி, மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பி வரப்பண்ணி, அவைகளை ஜனங்களிடத்திலிருந்து புறப்படவும் தேசங்களிலிருந்து சேரவும்பண்ணி, அவைகளுடைய சுயதேசத்திலே அவைகளைக் கொண்டுவந்து, இஸ்ரவேல் மலைகளின்மேலும் ஆறுகள் அண்டையிலும் தேசத்தின் சகல வாசஸ்தலங்களிலும் அவைகளை மேய்ப்பேன். 

அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவர்களுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும்; இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும். என் ஆடுகளை நான் மேய்த்து அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். நான் காணாமற்போனதைத்தேடி துரத்துண்டதைத் திரும்பக்கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல்கொண்டதைத் திடப்படுத்துவேன்; நியாயத்துக்குத் தக்கதாய் அவைகளை மேய்த்து, புஷ்டியும் பெலமுமுள்ளவைகளை அழிப்பேன். என் மந்தையே கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, ஆட்டுக்கும் ஆட்டுக்கும், ஆட்டுக்கடாக்களுக்கும், வெள்ளாட்டுக்கடாக்களுக்கும் நான் நியாயந்தீர்ப்பேன். எசேக்கியேல் 34:10-16.

ADD YOUR COMMENT

Powered By Indic IME