என் வேளை இன்னும் வரவில்லை

என் வேளை இன்னும் வரவில்லை.

My time has not yet come,  (John 7 :6)

Jn7:8,30; Jn2:4; Jn8:20; Jn13:1; Jn17:1; Mt26:18; Lk12:50; Act1:7; Ps31:15; Ps102:13; Ecc3:1-15.

இயேசு அவர்களை நோக்கி: என்வேளை இன்னும் வரவில்லை, உங்கள் வேளையோ எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது. (யோவான் 7:6

யோவான் 7:8,30; யோவான் 2:4; யோவான் 8:20; யோவான் 13:1; யோவான் 17:1; மத்தேயு 26:18; லூக்கா 12:50; அப்போஸ்தலர் 1:7; சங்கீதம் 31:15; சங்கீதம் 102:13; பிரசங்கி 3:1-15.

வேளை வரவில்லை:

தேவன் ஒவ்வொன்றையும் அவர்தாமே குறித்துவைத்துள்ள காலத்தில் தான் செய்கிறார். ஏனெனில் காலங்களை உண்டாக்கினவர் அவரே.
தாம் உருவாக்கின காலங்களை அவர் மாற்றுவதில்லை.
தேவனுடைய கிரியைகள், வாக்குத்தத்தங்கள் யாவும் காலங்களை அடிப்படையாகக் கொண்டது.
தமது ஆதீனத்தில் வைத்துள்ள காலங்களை அவர் வெளிப்படுத்தாமல் எவரும் அறிந்து கொள்ளார். அதேவேளையில் கால சக்கரத்தினால் அவர் கட்டுப்படுத்தப்படவில்லை. காலங்களை அவரே கட்டுப்படுத்துகிறார். காலங்களை – முறைமைகளை மாற்றுவாரானால் எல்லாம் இப்பொழுது இருப்பதுபோல இருப்பதில்லை. மாறிப்போகும்.
மனுக்குலத்தின் கீழ்படிதலை அடிப்படையாகக்கொண்டு சில காலங்களை அமைத்துள்ளார்.
அவன் கீழ்படியாதிருக்கும்போது காலங்களை மாற்றுகிறார்.
அப்படித்தான் வாக்குத்தத்தங்கள் மாற்றம் பெற்று நீண்ட காலங்களை எடுத்துக்கொள்கிறது.

ஆதியாகமம் 3:15,16 ல் தீர்மானிக்கப்பட்ட இயேசு பூமியில் தோன்றுவதற்கு ஏறக்குறைய 4000 வருடங்களுக்கு மேலாகியுள்ளது. சுவிசேஷங்களில் இதோ சீக்கிரமாய் வரப்போகிறேன் என்று சொன்னவர் 2000 வருடங்கள் தாண்டியும் இன்னும் வரவில்லை.
அவரின் வேளை நீண்டு போவதினால் அவரின் கிருபை பெருகுகிறது என்று பொருளாகும். நாம் எச்சரிக்கையாயிருந்து நமது வாக்குத்தத்தங்கள் உரிய வேளையை தனதாக்கி கொள்ளப் பிரயாசப்படுவோம்.

கர்த்தாவே, உம் குமாரனை உம் காலத்தில் அனுப்பினீர். இனியும் உம் வேளையில்தான் அவரை அனுப்ப போகிறீர். நாங்கள் உண்மையுள்ளவர்களாயிருந்து அவரின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்க உதவிடும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME