ஸ்திரியே, என் வேளை இன்னும் வரவில்லை.

ஸ்திரியே, என் வேளை இன்னும் வரவில்லை.

அதற்கு இயேசு, ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். (யோவான் 2:4)

யோவான் 7:6; யோவான் 8:20; யோவான் 12:23; யோவான் 13:1; மத்தேயு 15:28; லூக்கா 2:49; 2கொரிந்தியர் 5:16; கலாத்தியர் 2:5,6; பிரசங்கி 3:1; 2 சாமுவேல் 16:10; 1இராஜாக்கள் 2:20

அவரின் வேளை

– காலங்கள் அவரின் கரங்களுக்குள் உள்ளது, அப்போஸ்தலர் 1:7; சங்கீதம் 31:15

– காலங்களை மறைப்பவரும் அவரே, வெளிப்படுத்துபவரும் அவரே. யோபு 24:1; 1 தெசலோனிக்கேயர் 5:1

– தூரமாயிருக்கிற காலங்கள். எசேக்கியேல் 12:27
– காலங்களை மாற்றியமைப்பவரும் அவரே. தானியேல் 2:21
– ஏற்ற காலங்கள். மத்21:41; தீத்து 1:4
– இளைப்பாறுதலின் காலங்கள். அப்போஸ்தலர் 3:19
– நிறைவேறுதலின் காலங்கள். அப்போஸ்தலர் 3:21; கலாத்தியர் 4:5; எபேசியர் 1:9
– செழிப்புள்ள காலங்கள். அப்போஸ்தலர் 14:17
– தீர்மானிக்கபட்ட காலங்கள். அப்போஸ்தலர் 17:26
– அறியாமையுள்ள காலங்கள். அப்போஸ்தலர் 17:30
– வருங்காலங்கள் எபேசியர் 2:6; 1பேதுரு 1:20
– கொடிய காலங்கள். 2தீமோத்தேயு 3:1

இயேசு கிறிஸ்துவுக்குரிய காலங்கள்…

– அவர் பிறப்புக்கு ஒரு காலம்.
– அவரின் ஊழிய பிறவேசத்திற்கு ஒரு காலம்.
– அவரின் மரணத்துக்கு ஒரு காலம்.
– அவரின் இரகசிய வருகைக்கு ஒரு காலம்.
– அவரின் 1000 வருட அரசாட்சிக்கு ஒரு காலம்.
இவையெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்கு பிதாவினால் நியமிக்க பட்ட காலங்கள்.

இயேசுகிறிஸ்துவுக்கு பிதாவினால் நியமிக்கபட்ட வேறு காலங்களும் உண்டு. அக்காலம் வரையிலும் அவரை ஒருவரும் ஒன்றும் செய்ய இயலவில்லை.

– இயேசுகிறிஸ்து பிதா தமக்கு கட்டளையிடும் காலத்தில் மட்டுமே காரியங்களையும் செய்வார்.
– தமது காலங்கள் முடிவு பெறும் நேரத்தையும் தம் தந்தையால் அறிந்திருந்தார்.
– கலியாண வீட்டில்.

மரியாள் மன்றாடியதினால் அல்ல, பரலோக பிதா கட்டளையிட்டால் தான் அதை செய்தார். இனியும் செய்வார். அதுவரையிலும் எவர் சொல்வதையும் அவர் கேட்பதில்லை.

ஏன்?.

மனித விருப்பத்தின் பிரகாரம் செயல்படுவதற்கல்ல, பிதாவின் விருப்பபடி செயல்படுவதற்காகவே அனுப்பபட்டார்.

உலகம்,சபை, குடும்பம், தனி மனிதன் யாவும் அவர் விரும்புகிறபிரகாரம் மட்டுமே உருவாக்கபட வேண்டும்.

எனவே அவர் தமது வேளையில் செயல்படுவார். அது ஆச்சரியமாயிருக்கும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME