நீங்கள் மந்தையின் ஆடுகளாயிராததினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்

நீங்கள் மந்தையின் ஆடுகளாயிராததினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்.

But you do not believe,because you are not of My sheep,as I said to you. (John 10:26)

Jn10:4,8; Jn6:37,44,45; Jn8:47; Jn12:37-40; Mt13:23; Lk15:4; Act13:48; Ro10:16; Ro11:7,8; 1Cor2:14; 2Cor4:3,4; 1Jn4:6.

ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள். (யோவான் 10:26)

யோவான் 10:4,8; யோவான் 6:37,44,45; யோவான் 8:47; யோவான் 12:37-40; மத்தேயு 13:23; லூக்கா 15:4; அப்போஸ்தலர் 13:48; ரோமர் 10:16; ரோமர் 11:7,8; 1கொரிந்தியர் 2:14; 2கொரிந்தியர் 4:3,4; 1யோவான் 4:6.

விசுவாசியாத கூட்டம்:
கர்த்தராகிய இயேசுவை வாயினால் அறிக்கையிட்டு தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்று இருதயத்தில் விசுவாசிக்கிறவனே இரட்சிக்கப்படுவான் என்பது விவிலிய சத்தியம். இவ்விதமாய் இயேசுவை விசுவாசிக்காதிருப்பதற்கு காரணங்கள் மேற்சொல்லப்பட்டுள்ள வசனங்களில் காணப்படுகிறது.

இயேசுகிறிஸ்து உயிரோடிருந்த காலங்களில் இயேசுகிறிஸ்து அவர்களிடையில் வந்திருந்தும் அவரை விசுவாசிக்கவில்லை. ஏனெனில் பிசாசானவன் அவர்களிடைய கண்களை குருடாக்கியிருந்தான். மேலும் இஸ்ராயேலர் மாம்ச சுபாவமுள்ளவர்களாகவும், ஜென்ம சுபாவமுள்ளவர்ககாகவும் காணப்பட்டனர். மாம்ச கண்கள் கொண்டு தேவனுடையவைகளை காணவும் இயலாது, அறியவும் இயலாது.

மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைக்கிறவர்கள் தேவனுடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவை மாம்சீக ரீதியிலே காண்கின்றார்கள்.
பாவம் செய்கிறவர்கள் இயேசுவை பாவம் செய்தவராகவே காண்கின்றார்கள்.

தத்துவ இயல் ஞானியானவன் இயேசுவை தத்துவ வாதியாகவே பார்க்கின்றான்.உளவியல் சித்தாந்தி இயேசுவை உளவியல் சித்தாந்தியாகவே பார்க்கின்றான்.

விஞ்ஞானியானவன் இயேசுவை விஞ்ஞானியாகவே பார்க்கின்றான்.
அற்நெறி போதிக்கின்றவன் இயேசுவை அறநெறியாளராக பார்க்கின்றான்.சமய விற்பன்னர்கள் இயேசுவை சமய தலைவராக பார்க்கின்றனர்.

ஆனால்…. பரிசுத்த ஆவியை பெற்றவர்களோ இயேசுவை தேவ மகனாகவும், பாவம் போக்குகிறவராகவும், இரட்சிக்கிறவராகவும், நித்திய வாழ்வை கொடுப்பவராகவும் காண்கின்றனர். ஆன்ம விமோசனம் அடைய விரும்புகிறவர்கள் மட்டுமே இயேசுவை ஆத்தும நேசராக காண்கின்றனர்.

அன்பானவர்களே, உங்கள் கண்களில் போடப்பட்டுள்ள மூடாக்குகளை நீக்கிவிட்டு இயேசுவைப் பாருங்கள். உங்கள் பாவங்களிலிருந்தும், சாபங்களிலிருந்தும், வியாதிகளிலிருந்தும், குறைவுகளிலிருந்தும் பரிபூரண விடுதலையை அவர் தருவார். அவராலேயன்றி வேறு எவ்விதத்திலும் உங்களுக்கு விடுதலையில்லை. விசுவாசியாத கூட்டத்தைவிட்டு வெளியே வாருங்கள். விசுவாசிக்கிறவர்களோடு உங்களை ஐக்கியபடுத்துங்கள்.

விசுவாசியாதவர்களுக்கு ஆக்கினை தீர்ப்புண்டு. ஒருவரும் தப்பவியலாது. இயேசுவை எவரோடும், எதனோடும் சம்பந்தப்படுத்தாதீர்கள் . அதனால் பெரும் பாதகதுக்கு ஆளாவீர்கள். மறவாதீர். அல்லேலூயா

கர்த்தாவே நாங்கள் உம் மந்தையின் ஆடுகளாயிருந்து உமக்கு கீழ்படிந்து வாழ உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME