அவ்விடத்திலே அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்கள் ஆனார்கள்

அவ்விடத்திலே அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்கள் ஆனார்கள்.

And many believed in Him there. (John 10:42)

Jn2:23; Jn4:39,41; Jn8:30; Jn11:45; Jn12:42; Jn7:31; Act4:4; Act8:13; Act9:42; Act11:21; Rom4:3; Rom10:9-17; 1Jn4:15,16.

அவ்விடத்திலே அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள். (யோவான் 10:42)

யோவான் 2:23; யோவான் 4:39,41; யோவான் 8:30; யோவான் 11:45; யோவான் 12:42; யோவான் 7:31; அப்போஸ்தலர் 4:4; அப்போஸ்தலர் 8:13; அப்போஸ்தலர் 9:42; அப்போஸ்தலர் 11:21; ரோமர் 4:3; ரோமர் 10:9-17; 1யோவான் 4:15,16.

அனேகர் விசுவாசித்தனர்:
பழைய ஏற்பாட்டில் யெகோவா தேவனை விசுவாசித்து பின்பற்றினவர்கள் இஸ்ராயேலர் மட்டுமே. பிறமக்கள் யெகோவா தேவனின் வல்லமையான காரியங்களைக் கண்டு பயந்து நடுங்கி காணப்பட்டார்களேயன்றி அவரை விசுவாசிக்கவில்லை. சுவிசேஷங்களில் இஸ்ராயேலரிலும், புறஜாதியாரிலும் ஏராளமான பேர் அவரை விசுவாசித்து அவரை பின்தொடர்ந்தனர்.

பலநாடுகளில் பல சந்தர்ப்பங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக இயேசுவை விசுவாசித்து பின்பற்றினதுண்டு. அனால் அநேக நேரங்களில் இயேசுவை பின்பற்றாமல், அவரை விசுவாசிக்காமல் அவருக்கு எதிராய், அவரது நாமத்துக்கு எதிராய், சபைகளுக்கு எதிராய், ஊழியர்களுக்கு எதிராய், விசுவாசிகளுக்கு எதிராய் எழுபுகிறவர்கள் காணப்படுகின்றனர். அவர்கள் இயேசுவின் நாமத்தின் வல்லமையையும், அற்புதங்களையும் கண்டிருந்தும் எதிர் வினையாற்றுகின்றவர்களாயுள்ளனர். இஸ்ராயேலர் இயேசுவின் அற்புதங்களைக் கண்டும் அனுபவித்தும் அவருக்கு எதிராக எழும்பியதுபோல நமது சுய ஜனங்களே நமது விசுவாசத்துக்கு எதிராக எழும்புகின்றனர்.

விசுவாசித்தல் என்பது இயேசுவைபோல வாழ ஒப்புக்கொடுத்தல் ஆகும். அவரை பின்பற்றுகிறவன் அவரைபோல வாழ – நடக்க வேண்டும் என்று ஆவியானவர் கற்பிக்கின்றார். நாம் அவரைபோல வாழ முயற்சி செய்யவில்லையெனில் நாம் அவரை விசுவாசிக்கிறவர்களல்ல. விசுவாசம் வெறும் வார்த்தை சார்ந்ததல்ல, உயிர் சார்ந்ததும் கூட. நமது சிந்தைகளினூடே விசுவாசத்தின் ஆவி கிரியை செய்யவில்லையெனில் நாம் வெறும் சடமாகவே காணப்படுவோம். எனவே விசுவாசிக்கின்ற நாம் நமது ஆவியிலும், ஆன்மாவிலும் அவரை கொண்டிருந்து அவரைபோல வாழ பிரயாசப்படுவோம்.

கர்த்தாவே உம் மகனைபோல வாழ்வதற்காகவே அவரை தந்து எங்களுக்குள் விசுவாசத்தை துவக்கினீர். நாங்கள் இதை உணர்ந்து செயல்பட எங்களை ஒப்புகொடுக்கிறோம். ஆமென்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME