தங்களுக்குள்ளே வாக்குவாதம் பண்ணினார்கள்.
The Jews therefore quarreled among themselves, saying,How can this Man give us His flesh to eat? (John 6 :52)
Ge13:8; Ge26:20,21,22; Nu20:3,13; Nu27:14; Mt12;19; Lk9:46; Lk22:24; Jn3:25; Jn7:40-43; Jn9:16; Jn10:19; Act11:3; Act15:2; Act17:18; Act23:7;R o1:29; Ro13:13; 1Co3:3; 1Cor11 :16; 1Ti6:4; 2Ti2:14; Ti3:9.
அப்பொழுது யூதர்கள்: இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினார்கள்.
(யோவான் 6:52)
ஆதியாகமம் 13:8; ஆதியாகமம் 26:20,21,22; எண்ணாகமம் 20:3,13; எண்ணாகமம் 27:14; மத்தேயு 12;19; லூக்கா 9:46; லூக்கா 22:24; யோவான் 3:25; யோவான் 7:40-43; யோவான் 9:16; யோவான் 10:19; அப்போஸ்தலர் 11:3; அப்போஸ்தலர் 15:2; அப்போஸ்தலர் 17:18 அஅப்போஸ்தலர் 23:7; ரோமர் 1:29; ரோமர் 13:13; 1கொரிந்தியர் 3:3; 1கொரிந்தியர் 11:16; 1தீமோத்தேயு 6:4; 2தீமோத்தேயு 2:14; தீத்து 3:9.
வாக்குவாதங்கள் வேண்டாம்:
கிறிஸ்தவம் என்பது வாக்குவாதங்களின் சங்கமம் அல்ல, வாக்குதத்தங்களின் ஒருங்கிணைப்பு.
கிறிஸ்தவம் என்பது கூக்குரலின் கேந்திரம் அல்ல, அமைதியின் குடும்பம்.
கிறிஸ்தவம் என்பது பகைமை, கசப்பு, வெறுப்புகளின் பிரிவினை கொண்டதல்ல, வளர்ச்சியடையும்படி அன்பு, ஐக்கியம், ஒற்றுமை ஆகியவைகளின் பிரிவுகள் கொண்டது.
ஆதியில் ஆபிரகாமின் குடும்பத்தில் உண்டான வாக்குவாதங்கள் அன்றிலிருந்து இன்றுவரையிலும் அனேக கிறிஸ்தவ குடும்பங்களிலும், சபைகளிலும் காணப்படுகிறது.
ஆதியில் ஆபிரகாமின் வேலைகாரர்களிடையில் உண்டான வாக்குவாதங்கள் இன்றுவரையிலும் ஆண்டவரின் ஊழியகாரர்களிடையிலும் தொடர்கின்றது.
இயேசுவின் சரீரத்தை உணவாக தருகிறேன் என்று சொன்னதை யூதர்கள் புரிந்துகொள்ளாமல் வாக்குவாதம் செய்தனர்.
ஆதி சபைகளில் இது குறித்து வாக்குவாதங்கள் உண்டாயிற்று.
மத்திப கால சபைகளில் இது குறித்து வாக்குவாதங்கள் உண்டாகி பலகூறுகளாகவும், உபதேசங்களாகவும் பகுக்கப்பட்டது.
இக்கால சபைகளிலும் கிறிஸ்துவின் சரீரம் குறித்து வாக்குவாதம் பாண்ணிக்கொண்டேயிருக்கின்றார்கள்.
அன்று மோசேயின் சரீரம் குறித்து பிசாசு தர்க்கம் பண்ணினான்.
அப்படியானால், கிறிஸ்துவின் சரீரம் குறித்து தர்க்கம் பன்ணுகிறவர்கள் யார் என்பதை புரிந்து கொள்வீர்.
மோசேயின் சரீரம் சாத்தானுக்கு மறைக்கப்பட்டதுபோல, மாம்ச சுபாவத்திலுள்ளோருக்கு கிறிஸ்துவின் சரீரம் மறைக்கப்பட்டுள்ளது. ஆவிக்குரியவர்கள் கிறிஸ்துவின் சரீரம் குறித்து சந்தேகப்படுவதுமில்லை, பிரிவினை கொள்ளுவதுமில்லை.
கிறிஸ்துவின் சரீரத்தை கூறுபோடாதீர். அவர் சொன்னதை நம்பி முன்னேறுங்கள்.
புரியாததை விட்டுவிடுங்கள்.
பரிசுத்த ஆவியின் கட்டுபாட்டுக்குள் பொறுமையாய் முன்னேறுங்கள். வாக்குவாதம் வேண்டாம்.
அது நமது குணம் அல்ல, பேய்குணம். அதை விட்டு வெளியேறுவீர்.
கர்த்தாவே, ஆதியிலிருந்து வாக்குவாதம் செய்து, முறுமுறுத்து இஸ்ராயேலர் இன்றுவரையிலும் தேவாலயம் இல்லாதிருப்பதுபோல நாங்களும் ஆகிவிடாதிருக்க ஐக்கியமாயிருக்க அழைத்த உம்மை பின்பற்றி உம் குமாரனில் இணைந்து வாழ உதவிடும்.