இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுல் செய்த சுய இஷ்டமான ஆராதனையைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
ஒன்றான மெய் சபையிலே ஆராதனை எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்து படித்துக் கொண்டு வருகிறோம்.
இப்போது சுய இஷ்டமான ஆராதனை செய்தால் தேவன் அதை ஏற்றுக் கொள்ளுவதில்லை என்று சில உதாரணங்களை பார்த்து இருக்கிறோம்.
இன்னும் சில உதாரணங்களை பார்ப்போம்.
இஸ்ரேவேல் ஜனங்கள் தேவனிடத்தில் எங்களுக்கு ராஜா வேண்டும் என்ற கேட்ட போது சவுலை தேவன் ராஜாவாக ஏற்படுத்தினார்.
1Sa 9:17 சாமுவேல் சவுலைக் கண்டபோது, கர்த்தர் அவனிடத்தில்: இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனுஷன் இவனே; இவன்தான் என் ஜனத்தை ஆளுவான் என்றார்.
ஒரு முறை பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலில் யுத்தம் செய்ய நெருக்கி வரும் போது ஜனங்கள் பயந்து அநேகர் தேசத்தை ஒடிப்போனார்கள்.
1Sa 13:6 அப்பொழுது இஸ்ரவேலர் தங்களுக்கு உண்டான இக்கட்டைக் கண்டபோது, ஜனங்கள் தங்களுக்கு உண்டான நெருக்கத்தினாலே கெபிகளிலும், முட்காடுகளிலும், கன்மலைகளிலும், துருக்கங்களிலும், குகைகளிலும் ஒளித்துக்கொண்டார்கள்.
ஆசாரியனாகிய சாமுவேல் தேவனுக்கு பலி செலுத்த வர தாமதமானபோது சவுல் என்ன செய்தார் என்று கவனியுங்கள்.
1Sa 13:8 அவன் தனக்குச் சாமுவேல் குறித்த காலத்தின்படி ஏழுநாள்மட்டும் காத்திருந்தான்; சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை, ஜனங்கள் அவனை விட்டுச் சிதறிப்போனார்கள்.
1Sa 13:9 அப்பொழுது சவுல்: சர்வாங்க தகனபலியையும் சமாதான பலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினான்.
- ஆசாரியர்கள் மாத்திரமே செலுத்த வேண்டிய பலியை சவுல் செலுத்திய இந்த காரியம் தேவனுக்கு பிரியமாயிருக்குமா தேவன் இந்த பலியை ஏற்றுக் கொண்டு இருப்பாரா?
தேவனுக்கு பலி யார் செலுத்த வேண்டும் என்றால் லேவிகோத்திரத்தை சேர்ந்த ஆசாரியர்கள் மாத்திரமே பலி செலுத்த வேண்டும். வேறு யாராவது அதைசெய்தால் தேவன் அவனை கொலை செய்து விடுங்கள் என்றார்.
Num 18:7 ஆகையால் நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் பலிபீடத்துக்கும் திரைக்கு உட்புறத்துக்கும் அடுத்த எல்லாவற்றையும் செய்யும்பொருட்டு, உங்கள் ஆசாரிய ஊழியத்தைக் காத்துச் சேவிக்கக்கடவீர்கள்; உங்கள் ஆசாரிய ஊழியத்தை உங்களுக்கு தத்தமாக அருளினேன்; அதைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலை செய்யப்படக்கடவன் என்றார்.
பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்த சவுல் தேவனுடைய கட்டளைகளை மீறி சவுல் பலி செலுத்துவதற்கு காரணம் என்ன?
Sa 13:12 கில்காலில் பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் வந்துவிடுவார்கள் என்றும், நான் இன்னும் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி விண்ணப்பம்பண்ணவில்லை என்றும், எண்ணித் துணிந்து, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினேன் என்றான்.
- தேவனுடைய கட்டளையை அறிந்து இருந்த சவுல் பலியை செலுத்த காரணம் என்னவென்றால் துணிகரம் தான்.
- தேவனுடைய பிரமாணங்களை மாற்றுவதற்கு சவுலுக்கு என்ன அதிகாரம் இருந்தது. தேவனுடைய பிரமாணங்களை சவுல் துணிகரமாக மீறினார்.
சவுல் தேவனுடைய பிரமாணங்களை உயர்வாக மதித்தாரா?
சவுல் தேவனுடைய பிரமாணங்களை மதிக்கவில்லை.
சவுல் தேவனுக்கு பலியிட்டு ஆராதனை செய்தார் இந்த ஆராதனையை தேவன் ஏற்றுக்கொண்டாரா?
1Sa 13:13 சாமுவேல் சவுலைப் பார்த்து: புத்தியீனமாய்ச் செய்தீர்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்; …
தேவனுடைய கட்டளையின்படி அவரை ஆராதிக்காமல் நம்முடைய சுய இஷ்டத்தின்படி ஆராதனை செய்கின்ற போது நாம் தேவனுடைய கட்டளையை உயர்வாக மதிக்கிறோமா?
தேவனுக்கு ஆராதனை செய்ய வேண்டும் ஆனால் அவர் எப்படி ஆராதனை செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு இருக்கிறாரோ அப்படி தான் ஆராதனை செய்ய வேண்டும். நாம் தேவனுடைய பிரமாணங்களை மீறியோ அல்லது நாமாகவே சுயமாக பிரமாணங்களை ஏற்படுத்திக் கொண்டு ஆராதனைசெய்வோம் என்றால் தேவன் அதை ஏற்றுக் கொள்ளுதில்லை.
சவுல் செய்த இந்த பாவத்திற்காக தேவன் அவருக்கு என்ன செய்தார்?
1Sa 13:14 இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது; கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார்; கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான்.
- தேவன் சவுலை ராஜாவாக இராதபடிக்கு தன்னுடைய இருயத்திலிருந்து தள்ளிவிட்டார்.
தேவன் எதின் மேல் பிரியமாய் இருக்கிறார்? பலிகள் மீதா அல்லது கீழ்ப்படிதலின் மீதா?
1Sa 15:22 அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.
1Sa 15:23 இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.
- நாம் தேவனுடைய சகல பிரமாணங்களுக்கும் எந்த சூழ்நிலையிலும் கீழ்ப்படிய வேண்டும் என்று தான் விரும்புகிறார்.
- நாம் தேவனுடைய சகல வார்த்தைகளுக்கும் செவி கொடுத்து கீழ்ப்படிவதேயே விரும்புகிறார்.
- தேவனுடைய வார்த்தைகளுக்கு நாம் செவி கொடுத்து கீழ்ப்படியாமல் மீறி நடக்கும் போது இரண்டகம் பண்ணுதலுக்கும் முரட்டாட்டம் பண்ணுதலுக்கும் சரியாய் இருக்கிறது.
- தேவனுடைய பிரமாணத்தை மீறி சுயமாய் நாம் ஆராதனை செய்யும் போது பில்லியசூனிய பாவத்திற்கும் அவபக்திக்கும் விக்கிரகாரதானைக்கும் சரியாய் இருக்கிறது.
சவுல் செய்த சுயஇஷ்டமான ஆராதனையினிமித்தம் அவருடைய ராஜ்யபாரத்தை தேவன் தள்ளிவிடுவார் என்றால் இன்றைக்கு நம்முடைய நிலை என்ன?
- தேவனுடைய ஓரே ஒரு கட்டளையை மீறி நாம் ஆராதனை செய்வோம் என்றால் தேவன் நம்மை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து தள்ளுவார்.
- தேவனுடைய பிரமாணங்களை தள்ளிவிட்டு நாமாக சுயமாக கற்பனைகளை ஏற்படுத்திக் கொண்டு ஆராதனை செய்வோம் என்றால்அந்த ஆராதனையை தேவன் ஏற்றுக் கொள்ளுவதில்லை. அதை அவர் கவனிப்பதும் இல்லை.
தொடர்ந்து ஆராதனைகளை குறித்து கற்றுக் கொள்ளுவோம்.