மகிழ்ச்சியை உண்டாக்குகிறதை விதைக்கிறவர் கர்த்தர்
தம்முடைய மேல்வீடுகளிலிருந்து பர்வதங்களுக்குத் தண்ணீர் இறைக்கிறார், உமது கிரியைகளின் பலனாலே பூமி திருப்தியாயிருக்கிறது.
பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்.
மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், மனுஷனுடைய இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் விளைவிக்கிறார். (சங்கீதம் 104:13-15)
சங்கீதம் 23:5; எபேசியர் 5:18-21; சங்கீதம் 92:10; 1இராஜாக்கள் 2:20; சங்கீதம் 65:9; நீதிமொழிகள் 27:9; யோவான் 2:10; 1தீமோத்தேயு 5:23.
உலக வாழ்வில் மகிழ்ச்சியை உண்டாக்குவது
1.மழை
2.ஆகாரம்
3.எண்ணைய் (திராட்சை ரசம்)
ஆவிக்குரிய வாழ்வில் மகிழ்ச்சியை உண்டாக்குவது
1.பரிசுத்த ஆவியின் அபிஷேகம்
2.கர்த்தருடைய வசனம்
3.இரட்சிப்பு (பாவ மன்னிப்பின் நிச்சயம்)