மகிழ்ச்சியாயிருப்பதும், நன்மைசெய்வதுமே அவசியம்.
மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன். (பிரசங்கி 3:12)
பிரசங்கி 3:22; பிரசங்கி 9:7-9; சங்கீதம் 37:3,4; ஏசாயா 64:5; லூக்கா 11:41; அப்போஸ்தலர் 20:35; பிலிப்பியர் 4:4-9; 1 தெசலோனிக்கேயர் 5:15,16.
பெற்றுக்கொண்டவர்களெல்லாம் கொடுப்பதில்லை.
கொடுப்பவர்களெல்லாம் பெற்றுக்கொள்வதில்லை.
கஷ்டபடுகிறவர்களை கைதூக்கி விடக்கூடிய இருதயம் உள்ளவர்கள் பொருளாதார ஆசீரை பெற்றால் நலமாயிருக்கும்.
மகிழ்ச்சியாயிருப்பதினால் நன்மை செய்பவரும் உண்டு.
நன்மை செய்வதினால் மகிழ்ச்சியாயிருப்பவரும் உண்டு.