பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று. இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.

And there are three that bear witness on earth:the Spirit, the water, and the blood; and these three agree as one. (1John 5:9)

Matthew 26:26-28; Matthew 28:19; Romans 8:16; Acts 2:2-4; Hebrew 13:12; 1Peter 3:21; Mark 14:56; Acts 15:15.

பூலோகத்திலே) சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஐலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. (1 யோவான் 5:8)

மத்தேயு 26:26-28; மத்தேயு 28:19; ரோமர் 8:16; அப்போஸ்தலர் 2:2-4; எபிரெயர் 13:12; 1பேதுரு 3:21; மாற்கு 14:56; அப்போஸ்தலர் 15:15.

பூலோக சாட்சிகள்.

பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்று எடுத்துரைத்த ஆக்கியோன் இப்பொழுது பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் குறித்து குறிப்பிடுகின்றார். நாம் இரத்தத்தினால் பிறந்திருப்பதினால் இரத்தமே சாட்சியிடுகிறது. நாம் ஜலத்தினால் பிறந்துள்ளதினால் ஜலம் சாட்சியிடுகின்றது. நாம் ஆவியினால் பிறந்துள்ளதினால் ஆவி சாட்சியிடுகிறது. பரலோகத்தின் சாட்சி தங்களுக்குள் நடந்ததாகும். பூலோகத்தின் சாட்சியோ நம்மைக் குறித்ததாகும். அதாவது பிதாவாகிய தேவனிடம் இந்த மூன்றும் சாட்சியிடுகிறது எனலாம்.

காயீன் ஆபேலை கொன்றதினிமித்தம் ஆபேலின் இரத்தம் தேவனை நோக்கி என் சகோதரன் என்னைக் கொன்றான் என்று சாட்சியிட்டது. இரத்தம் உயிராயிருப்பதினால் இரத்தம் சாட்சியமளிக்கும். இயேசுவின் இரத்தம் நம்மை மீட்டதினால் நம்மைக் குறித்து இயேசுவின் இரத்தமே தேவனிடம் சாட்சியமளிக்கும்.

ஜலத்துக்குள்ளாக நாம் திருமுழுக்கு பெற்றுக்கொண்டதினால் நம்மைக் குறித்து ஜலம் தேவனிடம் சாட்சியமளிக்கும் என்பது உண்மை. ஆதியில் ஜலத்தின் மேல் அசைவாடின ஆவியானவர் அதே ஜலத்தைக்கொண்டு முழு உலகையும் அழிக்கவும் செய்தார். சிவந்த சமுத்திரத்தின் ஜலத்துக்குள்ளாக இஸ்ராயேலரை திருமுழுக்காட்டினவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தண்ணீரினால் நம்மை திருமுழுக்காட்டி சாட்சியை விளங்கச் செய்தார்.

சாட்சியிடுகிறவைகளில் ஒன்று ஆவி ஆகும். ஆவி என்பதற்கு ஒரேசொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆவி சுவிசேஷத்தின் ஆவியைக் குறிக்கிறது என்று சிலரும், பரிசுத்த ஆவியையே குறிக்கிறது என்று சிலரும், மனித ஆத்துமாவைக் குறிக்கிறது என்று சிலரும் குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு மனிதரிலும் ஆத்துமாவையும், ஆவியையும் தேவன் வைத்துள்ளார். இந்த ஆவி தேவனோடு தொடர்பில் உள்ளதாகும். மனித ஆத்துமாவை தேவனோடு தொடர்புகொள்ள வைக்கப்பட்டுள்ளதாகும். மனித உள்ளங்களில் உள்ளவைகளை ஆராயும்படியாக வைக்கப்பட்டுள்ளதாகும். பரிசுத்த ஆவியில் திருமுழுக்குப்பெற்றுக்கொண்ட ஒவ்வொருவரின் உள்ளான மனிதனில் நடக்கும் மாற்றங்கள் குறித்து தேவனுக்கு சாட்சியமளிக்கின்றார்.

இயேசு கிறிஸ்து ஜலத்தினாலும், இரத்தத்தினாலும் ஆவியினாலும் வந்தவராகையினால் அவரைக்குறித்தும் அவரது இரட்சண்யக்கிரியைகள் குறித்தும் முழு உலகத்திலும் இந்த மூன்றும் சாட்சியமளித்துக்கொண்டேயிருக்கின்றது. ஊழியர்கள் இயேசுவை குறித்த சாட்சியை பகிர்ந்துக்கொள்கிறார்களோ இல்லையோ இந்த மூன்றும் இயேசுவை எல்லா மனித உள்ளங்களிலும் சாட்சிகூறிக்கொண்டேயிருக்கின்றது. பூமி உள்ளளவும் ஜலமும் இரத்தமும் மனிதமும் இருப்பது வரையிலும் இயேசுவை குறித்து சாட்சிக் கொடுத்துக் கொண்டேயிருக்கும்.

தேவனுடைய மனிதர்கள் செம்மையாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். சாட்சியங்கள் நம்மை சூழ்ந்து நிற்கின்றன. பொய் சாட்சியங்களுக்கு இடமில்லை.

ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள் பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே. எபிரேயர் 12:1-4.

ADD YOUR COMMENT

Powered By Indic IME