இந்த கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன்.
I have power to take it again. This command I have received from My Father. (John 10:18)
Jn6:38-40; Jn14:30,31; Jn15:10; Heb5:6-10; Heb10:6-10; Ps40:6-8.
ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான், நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார். (யோவான் 10:18)
யோவான் 6:38-40; யோவான் 14:30,31; யோவான் 15:10; எபிரெயர் 5:6-10; எபிரெயர் 10:6-10; சங்கீதம் 40:6-8
அதிகாரம் கொடுக்கும் தந்தை:
தேவன் இயேசுகிறிஸ்துவை தமது மகனாக பூமிக்கு அனுப்பியிருந்தாலும் இயேசுகிறிஸ்து பிதாவுக்கு பிரியமானபடி நடந்து கொண்டதினால்தான் நேசகுமாரனானார். நேசகுமாரானான இயேசுவும் தேவனை தமது சொந்த பிதாவாக பிரகடனபடுத்தினார். இதினிமித்தம் பிதாவாகிய தேவன் தமது அதிகாரத்தையும், வல்லமையயும், ஞானத்தையும் இயேசுவுக்கு கொடுத்தார். அதோடுகூட செய்யும்படியும் செயல்படுத்தும்படியும் பல கட்டளையையும் இயேசுவுக்கு கொடுத்தார்.
பிதாவாகிய தேவன் எல்லா அதிகாரம், ஆளுகை, ஆற்றல், ஆசீர்வாதம் ஆகிய அனைத்தையும் தம்மில் கொண்டுள்ளார் என்று அறிகின்றோம். இவைகள் அனைத்தையும் தமது ஒரே பேறான குமாரனிடம் கொடுத்துள்ளார். இயேசுகிறிஸ்து பிதாவின் வழிகாட்டுதல்படி அனைத்து காரியங்களையும் செயல்படுத்துகின்றார்.
கிறிஸ்தவ பெரியோர்களே நாம் கிறிஸ்துவின் கட்டளைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளை செயல்படுத்ததக்கதான உண்மையான கீழ்படிதலை பெற்றுள்ளோமா?
உண்மையான கீழ்படிதல் மெய்யான அதிகாரத்தைக் கொண்டு வரும்.
தேவன் ஒரு மனிதனை உயர்த்துவதுதான் உண்மையான உயர்த்தப்படுதல். இந்த உயர்த்தப்படுதல் அனேகரை கிறிஸ்துவிடமாய் இழுத்துக்கொள்வதற்கு மட்டுமே பயன்படுத்தமுடியும். பணம் சம்பாதிப்பதற்கோ, பகட்டா உடை உடுத்துவதற்கோ, ஆடம்பரமாய் வாழ்வதற்கோ, பெரும் மரியாதைகளைப் பெற்றுக்கொள்வதற்கோ அல்ல, கிறிஸ்துவுக்கு அடிமையாய் இருந்து சிறப்பான பங்களிப்பை கொடுத்து தேவனுடைய இராஜ்ஜியத்தை விரிவாக்கம் செய்வதற்கேயாகும்.
அதிகாரப்படுத்தும் தேவனின் கண்காணிப்புக்குள் நாம் இருக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம். நமது செயல்பாடுகள் அனைத்தையும் காண்கிறார். அவைகளை சீர்தூக்கிப்பார்க்கிறார். நல்ல அறிக்கை – சாட்சி கிடைக்கும்படி நாம் நடந்து கொள்வோம்.
கர்த்தாவே நீர் உம் மகன் மூலம் நாங்கள் செய்யும்படியான பல கட்டளைகளை எங்களுக்கு தந்துள்ளீர். அவைகளைக் கொண்டு நாங்கள் உம் இராஜ்யத்தைக் கட்ட உதவி செய்யும்.